தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, March 18, 2015

முரணாக தோற்றமளிக்கும் குளிப்புக்கடமை சட்டம்!



ஒருவர் தமது மனைவியோடு இல்லறத்தில் ஈடுபட துவங்கி விட்டால் அவர் குளிக்க வேண்டுமா அல்லது இந்திரியம் வெளியாகாமல் இருக்கும் பட்சத்தில் அவர் குளிக்காமல் இருந்து விடலாமா என்பன போன்ற சட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

ஆனால் இந்த சட்டத்தைப்பற்றி புகாரியில் பதியப்பட்டிருக்கும் செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இது உண்மையில் முரண்தானா? அல்லது கூடுதல் தகவல் எங்கும் கிடைக்கிறதா? என்பதை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சாதாரணமாக படிக்கும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு செய்திகளும் சந்தேகத்திற்குரியதாகி விடும்.

முதலில் புகாரியில் இடம்பெறும் அந்த இரண்டு முரணான சட்டங்களையும் பார்ப்போம்!

செய்தி – 1 :  விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை:

ஒருவர் தம் மனைவியின் (இரண்டு கால், இரண்டு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உறவு கொள்பவரின் மீது குளிப்புக் கடமையாகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஷுஅபா வாயிலா அம்ர் இப்னு மஸ்ரூக் என்பவர் இவ்வாறே அறிவித்துள்ளார். 
மூஸா மற்றும் ஹஸன் என்பவர்கள் இவ்வாறே அறிவித்துள்ளனர்.
நூல் : புகாரி 291. 

முஸ்லிமின்  525-வது அறிவிப்பில் “இந்திரியம் வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை” என்று வருகிறது.

செய்தி – 2 : விந்து வெளிப்படாவிட்டால் குளியல் கடமையல்ல:

'ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளும்போது இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா?' என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'தொழுகைக்குச் செய்வது போன்ற உளூவைச் செய்து கொள்ள வேண்டும்; தம் உறுப்பைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்' என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) பதிலளித்தார். மேலும், இது விஷயமாக அலீ இப்னு அபீ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், உபை இப்னு கஅப்(ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் கேட்டேன். அவர்களும் இவ்வாறுதான் கூறினார்கள். இவ்வாறே நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) கேட்டதாக உர்வா கூறினார்" என ஜைத் இப்னு காலித் அல் ஜுஹைனி(ரலி) அறிவித்தார்.
நூல் : புகாரி 292. 

நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தங்களின் மனைவியிடம் உறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா? என நான் கேட்டதற்கு, 'மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்; பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். 
"குளிப்பதுதான் சிறந்தது. ஆனால் இந்த ஹதீஸ் கடைசிக் கட்டளையாக இருந்தது. இதில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதற்காகத்தான் இந்த ஹதீஸை இங்கு குறிப்பிட்டேன்" என்று அபூ அப்தில்லாஹ் (புகாரி) ஆகிய நான் கூறுகிறேன். 
நூல் : புகாரி 293. 

இந்த இரண்டு செய்திகளை படிக்கும் எவருக்கும் இவை முரணாகவே தெரியும். ஆனால் இது முரண்பாடான செய்திகளல்ல, மாறாக இவை மாற்றப்பட்ட சட்டங்களாகும்.
இந்த செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபை இப்னு கஅப் (ரலி) அவர்களே அதை தெளிவு படுத்துகிறார்கள்.

“விந்து வெளிப்பட்டால் தான் குளியல் கடமையாகும் என்பது இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகையாக இருந்தது. பின்னர் இதற்கு தடை விதிக்கப்பட்டு (இன உறுப்புகள் சந்தித்து விட்டாலே குளியல் கடமையாகிவிடும்; விந்து வெளிப்படாவிட்டாலும் சரியே என்று சட்டமாக்கப்பட்டு) விட்டது”.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)
நூல் : திர்மிதீ  103.

ஆகவே, தாம்பத்தியத்தில் ஒருவர் ஈடுபட துவங்கி விட்டாலே அவர் குளிப்பது கடமையாகிவிடும், விந்து வெளியாகாவிட்டாலும் சரியே! இதுதான் இறுதியான மாற்றப்பட்ட சட்டம் என்பது இந்த ஹதீஸிலிருந்து மிகத் தெளிவாக விளங்குகிறது. இனி புகாரியில் இடம்பெறும் இந்த அறிவிப்புக்களை பார்த்து சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை.  புதிதாக இந்த தகவலை அறிந்து கொண்டவர்கள் பிற மக்களுக்கு இந்த தகவலை கொண்டு சேருங்கள்.



ஆன்ராய்டு அப்ளிகேஷன் - குர்ஆன் துஆ



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!
அன்புள்ள சகோதரர்களே, சகோதரிகளே!
ஆன்ட்ராய்டு மொபைலுக்கான எங்களது அடுத்த வெளியீடாக 
குர்ஆனில் இறைவன் கற்றுத் தரும் துஆக்களை தொகுத்து, "குர்ஆன் துஆ" என்ற பெயரில் ஒரு அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளோம்.

தமிழ்வாழ் மக்கள் இலகுவாக இந்த துஆக்களை மனனமிடும் வகையில் தமிழ் மொழியிலும் தமிழ் தெரியாத நபர்கள் இலகுவாக மனனமிடும் வகையில் தங்லீஷிலும் இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப் பட்டுள்ளது.
விரும்பிய நேரத்தில் சிரமமின்றி எடுத்து படித்து இறைவனை நினைவுகோரலாம் என்ற நல்ல நோக்கத்திற்காக இதை மகிழ்ச்சியோடு வெளியிடுகிறோம்.
இதில் விரும்பிய துஆக்களை காப்பி செய்யும் வசதிகள் தரப்பட்டுள்ளது.
பார்வை குறைவுடையோருக்காக எழுத்துக்களின் அளவு உயர்த்த சுருக்க வசதி தரப்பட்டுள்ளது.
அனைவரும் பதிவிறக்கம் செய்யுங்கள். அதிகமாக பரபுங்கள்!
எங்களது இம்மை மறுமை இரு வாழ்வும் சீராகவும் ஆரோக்கியமாகவும் அமைவதற்கு வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!
அன்புடன்,
முஹம்மது மஷாரிக் & குடும்பத்தார்கள்.
(Masarik Apps)

அப்ளிகேஷனுக்கான லிங்க்,

Thursday, March 12, 2015

கண்காட்சி பொருளாக்கப்படும் இறைவனால் அழிக்கப்பட்ட பகுதிகள்!!!


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைவனால் தண்டிக்கப்பட்ட இந்த (ஸமூத் கூட்டத்தினரின்) இடத்திற்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம்! நீங்கள் அழுதவர்களாக இல்லையென்றால் அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள்! அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது."
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 
நூல் : புகாரி 433.


அல்லாஹ்வின் தூதரின் இந்த எச்சரிக்கையை இஸ்லாமியர்களில் பலரும் மறந்து தான் செயல்படுகின்றனர். உம்ராவிற்கும் ஹஜ்ஜிற்கும் செல்லக்கூடிய உலக நாடுகள் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் இந்த அழிக்கப்பட்ட பகுதிகளுக்கும் செல்வது வழக்கம்.

ஆனால் இந்தப்பகுதிக்கு செல்வோர் என்ன நோக்கத்தோடும் எப்படிபட்ட செயலோடும் அங்கு செல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியும் எச்சரித்தும் உள்ளார்களோ, அவைகளுக்கு பெருமளவில் இஸ்லாமிய சமூகம் மதிப்பு கொடுப்பதே இல்லை!

இதைவிடவும் கொடுமை என்னவென்றால், முகநூல் போதையில் பல இடங்களுக்கு சென்று செல்ஃபி ஃபோட்டோ எடுக்கும் மனநல பாதிப்புடையவர்கள், அல்லாஹ் தனது கோபத்தால் அழித்த இந்த இடத்தையும் விட்டு வைக்கவில்லை!

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! விவரமற்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டோர் இனியாவது திருந்தி இறைவனிடம் மன்னிப்பு தேடி திரும்புங்கள்...!





அப்பாஸ் அலியின் அறிவற்ற வாதத்திற்கு மறுப்பு




அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! கடந்த சில நாட்களுக்கு முன் நமது ஜமாஅத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அப்பாஸ் அலி அவர்கள், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தியிருந்தார்.
அதில் எவற்றையெல்லாம் இவர் நமது ஜமாத்திலிருக்கும் போது ஆதாரங்களாக சமர்ப்பித்து கொண்டிருந்தாரோ, அவைகளை தற்போது நமக்கு எதிராகவும் நாம் இட்டுக்கட்டி சொல்லிக் கொண்டிருப்பதை போன்றும் பேசித் திரிகிறார்.
இவர் எடுத்து வைக்கும் உப்பு சப்பில்லாத வாதங்களுக்கு ஒவ்வொன்றாக இன்ஷா பதில் அளிக்கப்படும்...

அப்பாஸ் அலியின் வாதம்:

முதலாவதாக, உமர் (ரலி) அவர்களுக்கும் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த தலாக் சம்மந்தமான உரையாடலை, குர்ஆனிற்கு முரணாக ஆதாரப்பூர்வமான செய்தி இருந்தாலும் அதனை ஏற்க்கக்கூடாது என்பதற்கு நாம் ஆதாரமாக காட்டி வருகிறோம். இந்த செய்தியில் அப்படி ஒரு கருத்தே இல்லை என்றும் உமர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சாட்சிகளோடு இந்த தகவலை நிரூபித்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் தான் கூறினார்களே தவிர, இது முழுமையாகவே மறுக்கப்பட வேண்டியது, குராஆனிற்கு முரண்படுகிறது என்று உமர் (ரலி) அவர்கள் கூறவில்லை. பொதுவாக உமர் (ரலி) அவர்கள் எந்த தகவலாக இருந்தாலும் சாட்சி கேட்பார்கள். ஆகவே, இறுதி தலாக் விடப்பட்ட பெண்ணிற்கு ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை என்பதை சாட்சி மூலமாக நிரூபிக்க சொன்னார்களே தவிர பொத்தாம் பொதுவாக இந்த செய்தியை மறுக்கவில்லை. இதில் எங்கே குராஆனிற்கு முரண் என்ற தலைப்பு உள்ளது? என்று அப்பாஸ் அலி வாதத்தை எடுத்து வைக்கிறார்.

பதில்:

சகோதரர் (ஆய்வாளர்???!!!) அப்பாஸ் அலி அவர்களே! தன்னோடு வாதிக்க ஒரு அரபு பண்ணிடிதர்தான் வர வேண்டும் என்று விரட்டப்பட்ட நேரத்தில் அடம்பிடித்தீர்கள். உங்களது பேச்சை கவனிக்கும் போது அந்த லிஸ்டில் முதலில் நீங்களே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். முதலில் உமர் ரழியல்லாஹு அன்ஹு என்று தெளிவாக சொல்ல பழகுங்கள். பிறகு பேசலாம் அரபு புலமையை பற்றி!

வாதத்திற்கு வருவோம். இவர் சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்தியை பொறுத்த வரைக்கும் இதில் உமர் (ரலி) அவர்கள் இந்த செய்தியை குர்ஆன் வசனத்தை முன் வைத்து மறுத்து விட்டார்கள், ஆகவே ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் தகவல் பொய் என்று வாதிடுவதற்கா நாம் இந்த செய்தியை எடுத்து வைக்கிறோம்? அப்படி அல்ல. மாறாக, உமர் (ரலி) அவர்கள் இந்த தகவலை எப்படி அணுகினார்கள் என்பது தான் நமது வாதம்.

உமர் (ரலி) அவர்கள் அறிந்து வைந்திருந்த திருமறை வசனத்திற்கு ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறிய செய்தி முரணாக தோன்றியது. ஆகவே தான் உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்கவில்லை. ஒரு பெண்ணின் சொல்லிற்காக அல்லாஹ்வின் வார்த்தையையும் நபியின் வழி முறையையும் நாம் விட மாட்டோம் என்று கூறினார்கள். பிறகு சாட்சிகள் கிடைக்குமானால் ஏற்பேன் என்று சொன்னதாக ஒரு செய்தியையும் அப்பாஸ் அலி சுட்டிக்காட்டினார், ஆம் அந்த காலகட்டத்தில் சஹாபாக்கள் தான் பெருமளவில் வாழ்கின்றனர். அவர்களது பெருவாரியான சாட்சியை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆகவே, ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் சாட்சியோடு அந்தத் தகவலை நிரூபித்திருக்கலாம், அதை உமர் (ரலி) அவர்கள் ஏற்றும் இருக்கலாம். இதற்கு வெளிப்படையான தகவல் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் உமர் (ரலி) அவர்கள் எடுத்து வைத்த வாதம் தெள்ளத்தெளிவாக ஹதீஸில் இடம்பிடித்திருக்கும் போது இதில் குர்ஆனிற்கு முரண் என்ற தகவல் எங்கே உள்ளது என்று கேட்பது மடமை.

நன்றாக விளங்கி கொள்ளவும், இந்த தகவல் மொத்தமாகவே மறுக்கப்பட்டதா அல்லது பிறகு உமர் (ரலி) அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பதல்ல நமது வாதம். குர்ஆன் வசனத்திற்கு எந்த வகையிலும் ஒப்பிட முடியாத வண்ணம் ஒரு தகவல் முரண்படுமேயானால் அதை நபியவர்கள் கூறி இருக்க மாட்டார்கள் என்பதே இந்த சம்பவத்திலிருந்து நாம் எடுத்து வைக்கும் வாதம். ஆகவே தான், “ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படுமா?” என்ற (அப்பாஸ் அலி எழுதிய) புத்தகத்திலும் கூட இந்த தகவலை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் போது, குர்ஆனிற்கு முரணான செய்தி என்று தலைப்பிடாமல் “உமர் (ரலி) அவர்கள் கடைபிடித்த வழிமுறை” என்றே தலைப்பிட்டுள்ளோம். இவை அனைத்தும் இந்த புத்தகத்தை எழுதிய ஆய்வாளர்???!!! அப்பாஸ் அலிக்கு மிகத்தெளிவாகவே தெரியும். இருந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத வேறு எந்த நபர்கள் எதை செய்தாலும் எதை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் இயல்பிலேயே வார்த்தெடுக்கப்பட்ட கொள்கை கோமாளிகளுக்கு இவைகளை பற்றி சிந்திக்கவெல்லாம் நேரம் இருப்பதில்லை. ஆகவே அவர்களிடம் எதை வேண்டுமானாலும் உளறிக் கொட்டலாம் என்ற நிலைக்கு அப்பாஸ் அலி உருவெடுத்துள்ளதை இதுபோன்ற திரிக்கப்படும் உரைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும், உமர் (ரலி) அவர்களிடம் நடைபெற்றதை போன்ற நிகழ்வுகள் இன்றைய கால சூழலில் நடக்குமா? இன்றைக்கு ஒரு செய்தி குர்ஆனிற்கு முரணாக உள்ளது என்று நாம் விளங்கினால், சாட்சி கொண்டு வர சஹாபாக்களா உள்ளனர்? மாறாக அவர்கள் அறிவித்ததாக வரும் தகவல்கள் தான் நம்மிடம் உள்ளன. அந்த தகவல்களை கொண்டும் கூட எந்த வகையிலும் சரியாக இதுபோன்ற ஹதீஸ்களை விளங்க முடியாது அவை முரணாகத்தான் வருகிறது என்று விளங்குமேயானால், அவற்றை நாம் குர்ஆனைவிட மிகைப்படுத்தி விடாமல், மறுக்கத்தான் வேண்டும். இதே அடிப்படையைத்தான் உமர் (ரலி) அவர்கள் அந்த சம்பவத்தில் கையாண்டிருக்கிரார்கள் என்பதுதான் நமது வாதம்.

மேலும், உமர் (ரலி) அவர்கள் எதையெடுத்தாலும் சாட்சி கொண்டு வர சொல்லுவார்கள் என்று மேலும் ஒரு ஆதாரத்தையும் சம்மந்தமே இல்லாமல் அப்பாஸ் அலி முன் வைத்தார். மூன்று முறை ஸலாம் கூறப்பட்டும் பதில் தரப்படவில்லை என்றால் திரும்பி விடுங்கள் என்ற செய்தி தான் அது. இதற்கு உமர் (ரலி) அவர்கள் அபூ மூஸா (ரலி) அவர்களிடம் சாட்சி கேட்டார்கள், சாட்சி கொண்டு வரப்பட்டது. ஆகவே இது அவர்களது இயற்கை பண்பு. இதைதான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் உமர் அவர்கள் கேட்டார்களே அன்றி அதை மறுக்கவில்லை என்று விளங்காத வாதத்தை வைக்கிறார்.

இவர் ஒப்பிட்டிருக்கும் இரண்டு சம்பவங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன.

அனுமதி கோரும் செய்தியை பொறுத்த வரைக்கும் அந்த செய்தியே உமர் (ரலி) அவர்கள் அதுவரை கேள்வி படாத செய்தியாகும். ஆகவே சாட்சி கேட்டார்கள்.

ஆனால், தலாக் சம்பவத்தை பொறுத்த வரை அதைப்பற்றிய இறைவசனத்தை உமர் (ரலி) அவர்கள் அறிந்து தான் வைத்திருந்தார்கள். அவர்கள் அறிந்திருக்கும் இறை வசனத்திற்கு மாற்றமாக ஒரு பெண் ஒரு செய்தியை தெரியப்படுத்தும் போது அதை உமர் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டு சாட்சி கொண்டு வரச் சொன்னார்கள்.

இரண்டு சம்பவங்களையும் நுணுக்கமாக கவனித்தால் வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளலாம். இவர் எடுத்து வைக்கும் வாதம் உப்பு சப்பற்றது என்பதையும் விளங்கலாம்.

அனுமதி கோரல்  தொடர்பான செய்தியை (புகாரி 6245) உமர் (ரலி) அவர்கள் மறுக்கவில்லை, மாறாக அல்லாஹ்வின் மீதாணையாக இதை நபியவர்கள் சொன்னார்கள் என்பதற்கான சாட்சியை நீங்கள் கொண்டு வர வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். அதிலும் குறிப்பாக எந்தக் காரணத்தையோ வாதத்தையோ முன் வைத்துவிட்டு சாட்சியை கொண்டு வருமாறு அவர்கள் கேட்கவில்லை!

ஆனால், தலாக் தொடர்பான செய்தியில் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம், உமர் (ரலி) அவர்கள் சாட்சி கேட்டிருந்தாலும், ஒரு அடிப்படையான வாதத்தை முன் வைத்துவிட்டுத்தான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் தகவலை மறுக்கிறார்கள். அந்த வாதம் எதுவோ அதைத்தான் நாம் ஆதாரமாக சுட்டிக் காட்டுகிறோம். இப்படியெல்லாம் பதில் தரப்பட்ட பின், சஹாபாக்களை பின்பற்றக்கூடாது என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு இதற்கு மட்டும் சஹாபாக்கள் தேவையா? என்ற ஒரு கேள்வியை நம்மை எதிர்ப்பவர்கள் முன்வைப்பார்கள். காரணம் இதற்குமேல் பதிலளிக்க அவர்களிடம் சரக்கு இல்லை என்பதே! இருப்பினும் அதற்கும் நாம் பதிலளித்து விடுவோம்.

சஹாபாக்கள் மட்டுமல்ல, பல இமாம்களும் இதே வாதத்தை முன் வைத்து ஹதீஸ்களை மறுத்துள்ளார்கள் என்றும் நாங்கள் உதாரணம் காட்டுகிறோம். அதற்கு அர்த்தம் இமாம்களையும் பின்பற்றுவது என்பதல்ல. இந்த ஆதாரங்களை நாங்கள் எடுத்து வைக்க முழு காரணமே, இந்த ஜமாஅத்தை எதிர்க்கும் எதிர்தரப்பு உலமா சபையினர் தான். உலகத்தில் யாருமே கூறாத புதிய கொள்கையை  கூறுகிறார்கள். சஹாபாக்கள் கூறினார்களா? அதற்கு அடுத்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த இமாம்கள் கூறினார்களா? எங்கிருந்து வந்தது இந்த கொள்கை? இது முஃதஸிலாக்களின் கொள்கை என்றெல்லாம் சகட்டுமேனிக்கு வரிந்து கட்டிக்கொண்டு எம்மை வர்ணித்தவர்கள் இந்த உலமாக்கள் தான். இவர்களின் ஏக வசனங்களால் தான் நாம் இதுபோன்ற ஆதாரங்களை சமர்ப்பிக்கிறோம். இந்த ஆதாரங்களை சமர்பிக்காவிட்டாலும் கூட நாம் கூறும் இந்தக் கொள்கை பல வகைகளில் நியாயமுடையது தான். என்றாலும், சஹாபாக்கள் தொடக்கம் பல சிறந்த இமாம்கள், அறிஞர்கள் வரை இதே கொள்கையில் இருந்துள்ளார்கள் என்ற வகையிலான ஆதாரங்களை அள்ளி வீசுகிறோம்!

எவ்வளவு ஆதாரங்களோடு விளக்கமளித்தாலும், இறைவன் எவரது உள்ளத்தை சிந்திக்க விடாமல் தடுத்து விட்டானோ அவர்களை நேர்வழி படுத்த நம்மால் இயலாது! அல்லாஹ் விளங்கி செயல்படக்கூடிய உள்ளத்தை நம் அனைவருக்கும் தருவானாக!

Saturday, March 7, 2015

மார்க்கத்தை நோக்கி அழைப்பு விடுக்க ஓர் அழகிய செயல்பாடு!



நாம் அதிகம் அறிந்து வைத்திருந்த மாற்று மத தோழராகவே இருந்தாலும், இஸ்லாத்தை அவர்களிடம் எடுத்துரைக்க பலருக்கும் துணிவு கிடையாது 
இது இஸ்லாமியர்களின் எதார்த்தம்!

நாம் பிறரிடம் சென்று இஸ்லாத்தை எடுத்துரைக்காமலேயே, பிறர் தானாக நம்மை நோக்கி வந்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள, நம்மிடமுள்ள ஒரு சிறந்த அழைப்புபணிக்கான கருவி "தொழுகையாகும்"!
பல வேலைகள் நிமித்தமாக பயணத்திலிருக்கும் நீங்கள், தொழுகைக்கான நேரம் வரும்போது மக்கள் நடமாடும் அந்த இடத்திலேயே இறைவனை தொழ ஆரம்பித்து விடுங்கள் (பள்ளிவாசல் தெரியவில்லை என்றால்).
அவ்வளவு தான், உங்கள் தொழுகையை பல மாற்றுமத நண்பர்கள் கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். 
இறைவன் நாடினால் அந்த ஒரு செயலே அவர்களை தானாக ஈர்த்து வந்து இஸ்லாத்தைப் பற்றி அறியச் செய்யும்.

(ஆனால் வேதனையான விஷயம், பயணத்திருக்கும் பலர் தொழுவதே கிடையாது. அதற்கு பயணத்தைதான் காரணமும் காட்டுகின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை).
இறைவன் நாடி அவர் இஸ்லாத்திற்கு திரும்பி விட்டால் 
இந்த சிறந்த ஒரு காரியத்தை நீங்கள் செய்ததற்கான கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான்.

பேசுவதற்குத்தான் கூச்சப்படுகிறீகள், எந்த சிரமும் இல்லாத இந்த வணக்கத்தை நிறைவேற்றவுமா கூச்சம்???
இனி வாய்ப்பு கிடைத்தால் தவற விட மாட்டீர்களே???
‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக (அலியே!) உன் மூலம் ஒருவருக்கு நேர்வழி கிடைப்பது என்பது செவ்வகை ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி)
நூல் : புஹாரி.
(செவ்வகை ஒட்டகத்தை அரபு மக்கள் அபூர்வமான ஒன்றாக கருதினர்)

‘எவர் நேர்வழியின் பால் மக்களை அழைக்கின்றாரோ அதை ஏற்று செய்தவர்களின் கூலி போல் இவருக்கும் உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது. எவன் வழிகேட்டின் பால் மக்களை அழைக்கின்றானோ அவனுக்கு அதை செய்தவர்களின் கூலி போன்று உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி), 
நூல் : முஸ்லிம்.

திருமண தேர்வு!



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 
1. அவளுடைய செல்வத்திற்காக 
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 
3. அவளுடைய அழகிற்காக 
4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! 
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) 
நூல் : புகாரி 5090.

இவை பெண்ணை தேர்வு செய்யும் முறை என்று ஆணை நோக்கி கூறப்படுவதை போன்றிருந்தாலும், இருசாராருக்கும் பொதுவாக கூறப்பட்ட கட்டளையே ஆகும்.
இந்த முறைகள் கவனிக்கப்பட்டு திருமண பந்தங்கள் உருவாகுமேயானால், 
விவாகரத்து என்ற பகுதி, திருமணம் ஆன மிக சொற்பமான நாட்களுக்குள் ஏற்படும் மோசமான நிகழ்வை இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து துரத்தி விடலாம்!

மாற்றமாக, செல்வத்திற்காக குடும்பப் பாரம்பரியத்திற்காக அழகிற்காக திருமணம் செய்து கொண்டவர்கள் 
அந்தப் பகுதிகளின் சுவைகள் வாழ்வில் காணமல் போக போக வாழ்க்கையை முறித்து விட துணிகின்றனர்.

பெற்றோர்களே! உங்களது பிள்ளைகளின் வாழ்வு இதுபோன்ற நிகழ்வுகளில் நிறுத்தப்படாமல் இருக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருமண தேர்வுக்கு எதை தேர்ந்தெடுக்க சொன்னார்களோ அதை மட்டுமே சிந்தனையில் நிறுத்துங்கள்....
வாலிபர்களே! அழகு என்ற பகுதிக்காக மட்டும் உங்கள் துணையை நீங்கள் தேடினால், குறுகிய காலத்திற்குள் அழகு அழிந்து போகும். உமது வாழ்வு விவாகரத்து எனும் பெயரால் வீதிக்கு வந்து விடும்.
இதையெல்லாம் விட கடுமையான விஷயம், மார்க்கப்பற்று அல்லாத வேறு ஒரு காரணத்தை நோக்கமாக கொண்டு திருமணம் செய்தவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதரது சாபம் அல்லாஹ்வின் சாபம் என்பதை மறந்து விட வேண்டாம்....

சிந்தனை செய்யுங்கள்! வாழ்வை சீர் தூக்குங்கள்!

Thursday, March 5, 2015

ஜும்ஆ உரையை கேட்கும்போது கால்களில் கைகளைக் கட்டி அமரக்கூடாதா???



திர்மிதியில் இது தொடர்பான செய்தி இடம்பெற்றுள்ளது.
முஆத் பின் அனஸ் அல் ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது முதுகையும், முட்டுக் கால்களையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு அமர்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
திர்மிதி 472.

திர்மிதி இமாம் அபூஈசா அவர்கள் இந்த செய்தியை ஹஸன் தரத்தில் பதிவிடப்பட்டதாகக் கூறுகிறார்.
இருப்பினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளரான அபூமர்ஹூம் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
இவரது இயர்பெயர் அப்துர் ரஹீம் பின் மைமூன் என்பதாகும்.

யஹ்யா பின் மயீன் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்,
அபூமர்ஹூம் அப்துர் ரஹீம் பின் மைமூன் என்பவரும்,
அவருக்கு ஹதீஸ் அறிவித்த சஹ்ல் பின் முஆத் என்பவரும் பலவீனமான அறிவிப்பாளர்கள் ஆவார்கள்.
(துஹ்ஃபத்துல் அஹ்வதீ).

ஆகவே, இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
ஜும்ஆ உரையை கேட்கும்போது கைகளைக் கட்டிக் கொண்டு அமர்வது தடுக்கப்பட்டது அல்ல.

புத்தாண்டு ஜாக்கிரதை-மதநல்லிணக்க கோட்பாட்டால் மாயமாகும் மார்க்கம்!!!!

மத நல்லிணக்கம் என்ற பெயரில் இன்றைய பெரும்பான்மை இஸ்லாமியர்கள்
மாற்று மதத்தவர்களின் பண்டிகைகளுக்கும் விழாக்களுக்கும் ஆதரவு தெரிவித்து 
தானும் அதை மகிழ்வோடு கொண்டாடுகின்றனர்!!!

இதற்கு உதாரணம், சற்றே நம்மைக் கடந்து சென்றிருக்கும் தீபாவளி.,
விழாவிற்கு சொந்தக்காரர்கள் விழா அன்றைக்குத்தான் பட்டாசு கொளுத்துகின்றனர், 
ஆனால் இஸ்லாமியர்களில் பலர் தம் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பட்டாசுக்களை வாங்கிக் கொடுத்து வெடிக்க வைக்கின்றனர்.
நான் நினைக்கிறேன் இந்து மக்களுக்கு இது தீபாவளி சீஸன் என்பதை இவர்கள் தான் நினைவூட்டுகிறார்கள் போலும்!

இது ஒரு புறமிருக்க, இஸ்லாமிய ஆட்சி என்று புறப்பட்ட பலரும்
அரசியல் மோகத்தால் 
மாற்று மதத்தவர்கள் இணை வைப்பின் அடிப்படையை வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து விழாக்களுக்கும் 
வாழ்த்துக் கூறி பெரிய பெரிய பேனர்களும் கட்அவுட்டுகளும் வைத்துக் கொண்டிருக்கின்றனர்!

இதற்குப் பெயர்தான் மத நல்லிணக்கமா???
அல்லாஹ்வுடையத் தூதர் இப்படித்தான் வழிகாட்டினார்களா???
கிருஸ்துமஸ் விழாவின் பின்னனி இயேசுவின் பிறப்பு என்கின்றனர்
இதற்கு வாழ்த்து சொல்வதால், இயேசு கடவுள் தான் என்ற நம்பிக்கையை நீங்களும் ஆதரித்ததாகவும் ஊக்குவித்ததாகவும் ஆகாதா???

பொங்கள் விழாவின் பின்னனியில் சூரியனை கடவுளாக்குகின்றனர்
இதற்கு வாழ்த்து சொல்வதால் நீங்களும் சூரியனை வணங்குவதற்கு ஊக்குவித்ததாக ஆகாதா???

இது போன்ற வாழ்த்துப் பரிமாற்றங்கள் ஏராளம் நம் சமுதாயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அரசியல் சிந்தனையால் இஸ்லாமிய வேடம் தரித்து இன்னும் எதையெல்லாம் ஆதரிக்க போகிறீர்கள்???
யூதர்களோடும் நசாராக்களோடும் அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்தார்கள், 
மார்கத்திற்கு முரணில்லா வகையில் அவர்களது விருந்துகளில் கலந்து கொண்டார்கள்,
யூதச் சிறுவனை தன்னிடம் வேலைக்கு அமர்த்தினார்கள்,
அவனது மரணத் தருவாயில் நலம் விசாரிக்கச் சென்றார்கள்,
யூத ஜனாஸவிற்காகவும் எழுந்து நின்றார்கள்(இன்னும் ஏராளம்)....

மாற்று மதத்தவர்களோடு இந்த அளவிற்கு அன்போடும் நல்லிணக்கத்தோடும் நடந்து கொண்ட அல்லாஹ்வின் தூதர் 
எள்முனையளவு கூட கொள்கையில் வளைந்து கொடுக்கவில்லை!!!

கொள்கை குழிதோண்டி புதைக்கப்படும் இடங்களில் மத நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்பதற்காக சமரசம் செய்து கொள்ளவில்லை.
ஆனால் இன்று இஸ்லாமியர்களின் நிலை நேர்முரணாகி விட்டது.

கொள்கைக்கு குழிதோண்டப்படும் விழாக்களுக்கு வாழ்த்து கூறிவிட்டு
அவற்றை அசத்தியமென்று எப்படி கூறப்போகிறீர்கள்???

கிருஸ்துமஸ் வாழ்த்து கூறிவிட்டு
இயேசு கடவுளில்லை என்று எப்படி கூறுவீர்கள்???

பொங்கள் வாழ்த்து கூறிவிட்டு
சூரியன் கடவிளில்லை என்று எப்படி கூறுவீர்கள்???

பழனி பாதையாத்திரைக்கு உதவி விட்டு
சிலைகள் கடவுளில்லை என்று எப்படி கூறுவீர்கள்???

கந்தூரி உரூஸ் விழாக்கு வருகை தருவோரை வறவேற்று விட்டு
கப்றுக்களை வழிபடக் கூடாது என்று எப்படிக் கூறுவீர்கள்???

சமரசம் கொள்கையில் இருக்கக் கூடாது.
இந்நிலை தொடருமென்றால் நாம் சமரசம் செய்தோரோடு நரகில் தான் நாளை மறுமையில் இருப்போம் என்பதே இறைவனின் பிரகடனம்.

புரிந்து செயல்பட அல்லாஹ் உதவி செய்வானாக....!














சிரித்த முகத்தோடு மரணம் - வெற்றியின் அறிகுறியா?




ஒருவர் சிரித்த முகத்தோடு மரணிப்பதை மட்டும் வைத்து அவர் வெற்றியடைந்து விட்டார் என நம்மால் முடிவெடுக்க முடியாது!
அதேபோல ஒருவர் பயந்த முகத்தோடு மரணிப்பதை வைத்தும் அவர் நஷ்டமடைந்து விட்டார் என முடிவெடுக்க முடியாது!
காரணம், மறுமையின் வெற்றி தோழ்விக்கு அல்லாஹ்வோ அவனது தூதரோ இதை அடையாளமாகக் காட்டித் தரவில்லை.
ஆனால், மரணிப்பவர் நல்லடியாராக இருந்தால் வானவரால் அவருக்கு நற்செய்தி கூறப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
கூறப்படும் நற்செய்தியைக் கேட்டு மரணிக்கும் நபர் சிரித்திருக்கலாம் அல்லது அப்படி இல்லாமலும் இருக்கலாம் என்று நினைப்பதில் தவறில்லை...
ஆனால், இதுதான் என்று முடிவெடுத்து விடக் கூடாது!

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

அலங்கரிப்போம் - கணவனுக்காக மட்டும்!



பெண்கள் தம்மை அழகுபடுத்திக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த அலங்காரம் தமது கணவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்!

ஆனால், இன்றைய நமது சமூகப் பெண்கள் இதற்காகவா அலங்கரித்துக் கொள்கிறார்கள்???
திருமணம் ஆன பெண்கள் வீட்டில் தனது கணவனுக்காக தம்மை அலங்கரிப்பதை விட 
ஏதாவதொரு நிகழ்ச்சிக்காக வெளியில் செல்ல நேரிடும் போது தம்மை அலங்கரித்துக் கொள்வதே அதிகம்!
(திருமணம், ஊர் சுற்றல்., etc).

இந்த அசிங்கமான நிலை, மறைவாகவோ வெளிப்படையாகவோ ஒரேயொரு கருத்தைத்தான் தருகிறது. உங்கள் கணவனை விட வெளியில் சுற்றித் திரியும் அந்நியர்கள் உங்களுக்கு விருப்பமாகி விட்டனர்.

இது கடுமையான வாசகமாகத் தோன்றும் பெண்களுக்கு கூறுகிறேன், உண்மையில் இந்த வார்த்தை யாரையெல்லாம் காயப்படுத்தி விட்டதோ 
அவர்கள் இந்த கெட்ட சிந்தனையில் தம்மை அலங்கரித்துக் கொண்டு வெளியில் செல்லவில்ல்லை என்பது உண்மை.

ஆனாலும் நான் சொன்ன காரணமும் சரியானதே! 
அதை உங்களை அறியாமலே ஷைத்தான் அவனது வலையில் உங்களை சிக்க வைத்து செய்ய வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் சகோதரிகளே! 
ஷைத்தான் நமக்கு பகிரங்க எதிரி என்பதை மறந்துவிட வேண்டாம்...

சிறிய விஷயமாக நமக்கு தோன்றும் பல செயல்கள் அழிவுப் பாதைக்கு நம்மைக் கொண்டு சென்று விடும்!
அல்லாஹ் பாதுகாப்பானாக...!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக் கொண்டு தன் வாடையை (பிறர்) நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல் : நஸாயீ (5036).

இன்பமும் துயரமும் இறைவனின் புறமிருந்தே!

அல்லாஹ் கூறுகிறான்,
(அல்லாஹ்) அவனே சிரிக்க வைக்கிறான்; (அவனே) அழவும் வைக்கிறான்.
திருக்குர்ஆன் (53:43).




இந்த வசனத்தை ஆழமாக சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் இறைவனது ஒரு எதார்த்தத்தை நிச்சயமாக உணர்ந்து கொள்வார்கள்.
நாம் பொதுவாகவே அழுவதை விரும்புவோர் அல்ல. நாம் விரும்பாவிட்டாலும், சில தருணங்களில் நம்மை அறியாமலேயே நமக்கு அழுகை மேலிடும்!
நாம் மகிழ்ச்சியோடு இருக்கும்போது நாம் விரும்பாத துக்கத்தை நோக்கித் தள்ளப்படுவோம்.

உதாரணத்திற்கு மகிழ்ச்சியுடன் நாம் வாழ்ந்து வரும் சூழலில் நமது சக்திக்கு மீறிய சில சம்பவங்கள் நம் குடும்பத்திலோ சமுதாயத்திலோ நடக்கும்.
பெற்றோர்களின் மரணம், பிள்ளையின் மரணம், கணவன் மனைவியின் மரணம், சகோதர சகோதரிகளின் மரணம், நண்பர்களின் மரணம், சுனாமி பூகம்பம் போன்ற பேரழிவுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள்., etc.
இவைகளில் எவையும் நாம் விரும்பிக் கேட்பவைக் கிடையாது!
ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் இவைகள் நடந்தே தீரும்.

அத்தகைய தருணத்தில், நாம் எப்படி இருப்போம்???
இப்படிப்பட்ட சூழலில் மகிழ்ச்சியை துக்கமாக மாற்றி அமைப்பது நாமா???
சிந்தித்துப் பாருங்கள்.... 
இறைவனின் வார்த்தை உண்மை என்பதை விளங்குவீர்கள்!

எது அழகு???



எது அழகு எது அசிங்கம் என்று விளங்குகிறதா தோழர்களே?
தாடியை மழித்துத் திரியும் நான் பார்க்கும் நபர்களும் 
எனது பார்வைக்கு இப்படித்தான் தெரிகிறார்கள்.

தாடியை மழிப்பவர்கள் அருவருப்பான முகத் தோற்றம் உடையவர்களே!
குறிப்பு : தாடி வளராத நபர்களுக்கு இது பொருந்தாது. ஆனால் அவர்களும் வளர்ந்தால் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டும்.
இல்லையெனில் அவர்களையும் இந்த நிலையில் தான் ஒப்பிடப்படும்.

சந்திகளை சீர்படுத்துவோம்!






தற்போதைய கால சூழலில் சிறுவர் சிறுமியர்கள் ஆண்டராய்டு மொபைல் ஃபோன், டேப்லட், லேப்டாப் போன்றவற்றில் தான் பெரிதும் காலம் கழிக்கின்றன...
பெற்றோர்களின் அனுமதியோடு சீர்கேட்டை நோக்கி செல்லும் கால கட்டம்.
கலாத்திர்கேற்ப நிலைமை மாற வேண்டும் என்று கூறுவோருக்கு
காலத்திற்கேற்ப மார்க்கத்தை அறியும் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிக் கொள்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் எத்துனை குழந்தைகள் இப்படி பயிற்றுவிக்க படுகிறார்கள்????