தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Showing posts with label பயனுள்ள தகவல்கள். Show all posts
Showing posts with label பயனுள்ள தகவல்கள். Show all posts

Saturday, November 25, 2017

நெருக்கமான உறவுகளின் மரணத்தின்போது நபியவர்கள் கற்றுக்கொடுத்த ஈமானிய பாடம்!!!



நாம் நேசிக்கும் நெருக்கமான உறவுகள் இவ்வுலகைவிட்டு பிரியும்போது அதன் சோகத்தையும் அதனால் உள்ளம் அனுபவிக்கும் வேதனைகளையும் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது.

என்றாலும் ஒரு இறைவிசுவாசி இதுபோன்ற சூழலில் எவ்வாறு மனதை ஈமானியப் பண்புகளால் பக்குவப்படுத்த வேண்டும் என்பதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலமாக நமக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்.

நபியவர்களின் பேத்தியின் மரண வேளையில் நபிகளார் (ஸல்) அவர்கள் தம் மகள் ஜைனபுக்கு கற்றுக்கொடுத்த ஈமானிய பாடத்தை கேளுங்கள்....

மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி(ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்(ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி(ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, 'எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!' என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅபு, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர். 
சென்ற) நபி(ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள்.. இற்றுப்போன பழைய தோற் துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்கள்) என ஸஅத்(ரலி) கேட்டதற்கு நபி(ஸல்), 'இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்' என்றார்கள். அறிவிப்பவர் : உஸாமா இப்னு ஸைத் (ரலி), நூல் : புகாரி 1284.

மனதளவில் ஆழமான வேதனைகள் சூழ்ந்திருந்தாலும் இவை இறைவனது நியதி, இவற்றை ஏற்று பொறுமை காப்பதே ஒரு முஃமினது செயலாக இருக்க வேண்டும் என்பதை நபியவர்கள் தம் செயல் மூலம் மகளுக்கு சொல்லி அனுப்புகிறார்கள்.
'எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!'

நபியவர்கள் தம் மகளுக்கு சொல்லி அனுப்பிய இந்த ஈமானிய பாடம் நம் அனைவரது உள்ளத்திலும் வேரூன்றிப் பதிய வேண்டும். நேசமான உறவுகளே இன்றி இந்த உலகில் வாழ்வோர் எவரும் இல்லை. ஒன்றோ நாம் பிரிய வேண்டிய சூழல் உண்டாகும் அல்லது நம்மைவிட்டு நாம் நேசித்த உறவுகள் பிரிய வேண்டிய சூழல்கள் உண்டாகும்.

எந்நிலையாக இருந்தாலும் அதை ஈமானிய உணர்வுகளோடு எதிர்கொள்ள பழக வேண்டும். அந்த உணர்வுகளை நம்மை படைத்த இறைவனைத்தவிர வேறு யாரும் நமக்கு ஏற்படுத்த முடியாது. இதற்காக இறைவனிடம் அதிகம் உதவி தேட வேண்டும்.

இதுபோன்ற சூழல்களை சந்திக்கும் நேரத்தில் மறதி எனும் சிறந்த அருட்கொடையை அல்லாஹ் நம்மீது விரைவாகப் பொழிந்து நமது உள்ளங்களை அமைதியுறச் செய்வானாக!!!!

Sunday, August 13, 2017

மக்தபதுஷ் ஷாமிலா மென்பொருள் - இலவச பதிவிறக்கம்

المكتبة الشاملة


உலக அளவில் மார்க்கம் பயிலுகின்ற மாணவர்களுக்கு மத்தியில் முதன்மையானதாகவும் மிகவும் பிரயோஜனமான மென்பொருளாகவும் இந்த "மக்தபதுஷ் ஷாமிலா" மென்பொருள் திகழ்கின்றது என்று சொல்லலாம்.

ஆய்வுத்தேடலுக்காக உலக அளவில் பல இலட்சக்கணக்கான மார்க்க அறிஞர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி மென்பொருள் இதுதான். அத்தகைய இந்த ஷாமிலா மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்வது எப்படி எனபதைத்தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

பெரும்பாலும் தற்போதைய சூழலில் மார்க்க கல்வி பயிலும் மாணவர்கள் இந்த மென்பொருள் சம்மந்தமான அறிவோடுதான் தமது கல்லூரியை முடித்து வெளியேறுகின்றனர்.

இந்த மென்பொருளை பற்றி அறிமுகமுள்ள நபர்களால் மட்டுமே இலகுவாக இதனை பயன்படுத்த முடியும். அவர்களுக்கான பதிவாகவே இந்தப் பதிவை நாம் பதிவிடுகிறோம்.

இந்த மென்பொருளின் அளவு 2.1 GB ஆகும். நாம் தரும் இந்த லிங்கிலுள்ள ஷாமிலா மென்பொருள் கணினிக்குரியது ஆகும்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

இந்த பக்கத்திற்கு சென்றதும் இதுபோன்றதொரு பகுதி காண்பிக்கப்படும்


இந்த பகுதியின் வலது பக்கத்தின் முன்றாவது இடத்தில் உள்ள
تنزيل الشاملة
என்ற பட்டியை கிளிக் செய்யவும்.


உங்கள் கணினிக்கு மக்தபதுஷ் ஷாமிலா பதிவிறக்கம் இப்போது ஆரம்பம் ஆகிவிடும்.

இந்த மென்பொருள் நாம் கொடுத்த லிங்கின் மூலமாக iso ஃபார்மேட்டில் பதிவிறக்கம் ஆகும். இதை உபயோகிக்கும் முறை, இன்ஸ்டால் செய்யும் முறை சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

shamila.iso ஃபார்மேட்டிலுள்ள File-ஐ Extract செய்து தான் நாம் பயன்படுத்த வேண்டும். அல்லது அந்த Flie-ஐ அப்படியே ஒரு DVD-ஆக ரைட் செய்து கணினியில் பயன்படுத்தினால் ஷாமிலா மென்பொருளை இலகுவாக இன்ஸ்டால் செய்யலாம்.

இந்த முறையை பயன்படுத்த தெரியாதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து WinRAR என்ற அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்யுங்கள்

WinRAR அப்ளிகேஷனை உங்கள் கணினியில் முதலில் இன்ஸ்டால் செய்யவும்.

பின்னர் shamila.iso என்ற File-ஐ Right click செய்து Extract Files என்பதை தேர்வு செய்யவும்.

உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்


Extract Files என்பதை கிளிக் செய்தவுடன் அனைத்து பகுதியும் சிறிது நேரம் முழுமையாக Extract ஆகும். Extract முழுமையாக ஆன பிறகு அதே பெயரில் ஒரு Folder Open ஆகும். அந்த Folder-ஐ திறந்தால் கீழே உள்ளதை போன்று ஒரு பக்கம் திறக்கும்.


அதில் உள்ள setup என்பதை தேர்வு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

கணினியில் இந்த அப்ளிகேஷனுக்கான Storage Location கேட்குமாக இருந்தால் C drive-ஐ தேர்வு செய்து இன்ஸ்டால் கொடுக்கவும்.

நாம் விளக்கி இருக்கின்ற முறையை சரியாக கையாண்டால் உங்கள் கணினியில் ஷாமிலா மின்னணு நூலகம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு விடும்.

படியுங்கள்.... பரப்புங்கள்!!!

அன்புடன்
முஹம்மது மஷாரிக்

Tuesday, July 11, 2017

சர்க்கரை நோயாளிகள் காலை வெட்ட வேண்டிய அவசியமில்லை!



சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்

காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும் தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும், விரலையும் அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்
அதனுடைய வலி. 

இதற்க்கு அருமையான மருத்துவம் ஒன்று உள்ளது!

எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்
புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தை தான் தழுவ வேண்டும் இதுதான் நிலை. 

இதற்க்கு கண்கண்ட மருந்து .

ஆவாரம் இல்லை

இந்த இலையை அம்மியில் மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஒருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இது எனது தாயாருக்கு என்கையாலேயே செய்தது.

அந்த புண்கள் ஆறியபிறகு நான்பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள் 

இதை அதிகம் பகிா்ந்து பலாின்
கால்களை விரல்களை காப்பாற்றுவோம்!

நன்றி : Parimala Devi

Monday, April 24, 2017

பொதுத்தளப்பதிவுகளில் கவணம் தேவை!!!




அன்பு இஸ்லாமிய சொந்தங்களே.....!!!

நாம் பதிவிடும் பலவிதமான பதிவுகளை பலருக்கும் டேக் செய்து பரப்பி விடுகிறோம். அவ்வாறு நம்மால் டேக் செய்யப்படும் முகநூல் ஐடியின் சொந்தக்காரர்கள் பலர் இறைவனால் அழைக்கப்பட்டு விட்டார்கள்
அவர்களது ஐடிகள் மட்டும் தான் முகநூலில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா????
நாளை எனது நிலையும் உங்களது நிலையும் இதுதான் தோழர்களே!!!
நமது முகநூல் பக்கமும் பதிவுகளும் இருக்கும்,
ஆனால் நாம் இருக்க மாட்டோம்....

நாம் பதிந்த பதிவுகள் இறைவன் வெறுக்கும் பதிவுகளாக, இறைவனால் தடுக்கப்பட்ட காரியங்களை பிரதிபலிக்கும் பதிவுகளாக இருக்குமென்றால்
நாம் இந்த உலகை விட்டு பிரிந்த பின்னால் அவற்றால் ஏற்படும் விளைவை நிச்சயமாக உணர்ந்து கொள்வோம் என்பதில் சந்தேகம் இல்லை!!!!
ஆனால் அத்தகைய விளைவை மண்ணறைகளிலும் மறுமையிலும் நமக்கு ஏற்படுத்தும் அந்த பதிவுகளை முகநூலில் இருந்து நீக்கிவிட நம்மால் அன்று இயலாமல் போகும் என்பதை என்றைக்காவது நாம் சிந்தித்தது உண்டா???
மிகுந்த கவணத்தோடு பொதுத்தளங்களில் பதிவுகளை பதிவிடுங்கள்!!!
சிலரது முகநூல் பக்கங்களில்
விபச்சார சிந்தனைகளை உலகில் பரப்பும் சினிமா கூத்தாடிகளின் புகைப்படங்கள்,
ஆபாச புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள்,
பிறரது சுயமரியாதையை பாதிக்கும் வகையிலான பதிவுகள் என்று பதிவுகள் தொடர்கிறது.........
மரணம் எப்போது வரும் என்று நம்மால் சொல்ல முடியாது சொந்தங்களே!!!
உங்களுக்கு மரணம் வந்து விட்டால்.......
பல இலட்சம் மக்களால் இதுபோன்ற உங்கள் பதிவுகள் பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கும்....
பொதுத்தளம் முழுமையாக மூடப்படும் வரைக்கும்...
இந்த பதிவுகளை உங்களால் எப்படி அழிக்க முடியும்??????????????????
இறந்த பின்னும் நமக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலான செயல்கள் தான் நமது வாழ்வில் இருக்க வேண்டும்.
இறந்த பின்னும் கூட நமது பாவச்சுமைகள் நம்மை தொடரும் வகையில் நாம் வாழ்ந்து மரணிக்கக்கூடாது.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!!!

இன்றே பதிவுகளை புரட்டுங்கள், தீமையானவற்றை தூர வீசுங்கள்....
இறைவனை நோக்கி திரும்புங்கள்.....
நமது பதிவுகள் அனைத்தும் நன்மையானதாகவே அமையட்டும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
திருக்குர்ஆன் (66:8).

Tuesday, April 4, 2017

கவணம் தேவை சகோதரிகளே!!!



صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا : قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا ، وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை.

(முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.

அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி,
நூல் : முஸ்லிம் 4316.

அற்ப உலக இன்பத்திற்காக மறுமை வாழ்வை இழந்து விட வேண்டாம் சகோதரிகளே.....!

நமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களின் ஆடை ஒழுங்குகளில் கொஞ்சம் கவணமெடுங்கள்! 

நமது கவணக்குறைவால் நமது மறுமை வாழ்வும் கேள்விக்குறியாக, நாம் நேசிக்கும் பலரும் நரகம் சென்றுவிடக் கூடும்!

அல்லாஹ் பாதுகாப்பானாக!!!

இறைவனது கருணை இல்லை என்றால்????!!!!



இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அவனது வரம்புகளை ஏதோ ஒரு வகையில் மீறுபவர்கள் தான். நாம் தேடும் மன்னிப்பின் காரணமாக இறைவன் கருணை புரிந்து நமது பாவங்களை மன்னிக்கிறான்.

மார்க்கத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு அழைப்பாளரும் கூட
பல சந்தர்ப்பங்களில் பாவங்களை தொடுபவர்கள் தான். எவரும் இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் அல்ல.

ஆனால், இறைவனது அச்சத்தை தூண்டும் எண்ணற்ற உபதேசங்களை செய்யும் நபர்கள்,

சொல்பவற்றை அவர்களது வாழ்வில் செயல்படுத்தவில்லை என்றால்....

அவர்கள் தமது குடல்களை கையில் சுமந்த நிலையில் நரக வேதனையில் சுற்றி திரிவார்கள் என்று நபியவர்கள் சொன்னார்கள்.

#ஒரு அழைப்பாளனாக மறுமையின் எனது நிலையை சிந்திக்கிறேன்.

இறைவனது கருணை இல்லை என்றால்????!!!!

அன்பு செலுத்த தாமதம் வேண்டாம்!



பிறர் சொல்லும் உபதேசங்களை கேட்டு திருந்தும் மனிதர்களை விட,
பட்டுத் திருந்தும் மனிதர்கள் தான் உலகில் அதிகம்...!!!

இருக்கும்போதே இயன்றவரை அன்பு செலுத்தி விடுங்கள்!!!

காலம் கடந்து விட்டால்

அன்பு செலுத்த நாம் ஏங்கினாலும்

அதை பெற்றுக்கொள்ள அவர்கள் இருக்க மாட்டார்கள்.

#அன்பானவர்களின் பிரிவு உணர்த்தும் வலி.

உண்மைக்கதை இல்லையென்றாலும் உலகில் நடக்கும் கதைதான்....!!!




ஒரு சிறுவன் அவனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்.
சிறுவர்களிடையே மோதல் வருகிறது.

ஒரு சிறுவன் மீது தான் தவறு என்று சண்டையிட்ட ஏனைய சிறுவர்கள்
அழுதுகொண்டே அவர்களது பெற்றோர்களை அழைத்து வருகின்றனர்.

தவறு செய்ததாக கணிக்கப்பட்ட சிறுவனை ஏனைய சிறுவர்களின் பெற்றோர்கள் திட்டித்தீர்த்து விடுகின்றனர்.

மனம் உடைந்த அந்த பிஞ்சு உள்ளம்
அழுதுகொண்டே தமது பெற்றோர்களிடம் இவற்றை முறையிட ஓடுகிறது..........

தமது கவலையை பெற்றோர்களிடம் முறையிடுகிறது.

ஆனால் பெற்றோர்கள் அந்த சிறுவனுக்காக வாதாட வரவில்லை!!!!!

காரணம்.....

கபடமில்லாத அந்தக் குழந்தை முறையிட்ட இடம்
பெற்றோர்களின் அடக்கஸ்தலம்....!!!
_________________________________________________________________________________

#நாம் அனுபவிக்கும் இன்ப துன்ப உணர்வுகளை போன்று கைவிடப்பட்ட அனாதைகளுக்கும் உணர்வுகள் இருக்கிறது தோழர்களே!!!

#அவற்றை முறையிடத்தான் நாம் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை!!!

#ரோட்டுக்கடையில் நாம் சாப்பிடும்போது
நமது உணவை பசியோடு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் அனாதைக் குழந்தைகளை
நாம் எப்போது கவனித்திருக்கிறோம்???!!!

#வெயிலின் கடுமையால் நமது குழந்தைகள் பாதிக்கப்படுகிறது என்று வீட்டு வசதிகளை அதிகப்படுத்த பல இலட்சங்களை வாரி இறைக்க முன்வரும் நாம்,
வீதியில் தமது மேனியை மறைக்கக்கூட போதிய உடை இல்லாமல் சுருண்டு கிடக்கும் பச்சிளம் சிறார்களை எங்கே கவணித்தோம்???!!!

#வீட்டில் வைத்து அரவணைக்க இயலாவிட்டாலும், இயன்றவரையாவது இவர்களை போன்றோரை அரவணைக்க முயற்ச்சிப்போம்!!!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"நானும் அநாதையின் காப்பாளரும் -அந்த அநாதை உறவுக்காரராகட்டும் அந்நியராகட்டும்- சொர்க்கத்தில் இப்படி இருப்போம்" என்று சைகை செய்து கூறினார்கள்.
இதை அறிவிக்கும்போது மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், தமது சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் (அவற்றை இணைத்துக் காட்டி) சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5704.

Saturday, December 17, 2016

ஏழ்மையின் இலக்கணம்!



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஓரிரு கவளம் உணவை, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களைப் பெறுவதற்காக இவ்வாறு மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்" என்று கூறினார்கள். 

மக்கள், "அப்படியானால் ஏழை என்றால் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள) எந்தச் செல்வத்தையும் அவன் பெற்றிருக்கமாட்டான்

அவனது நிலையை அறிந்து அவனுக்குத் தர்மமும் வழங்கப்படுவதில்லை. தானும் வலியச்சென்று மக்களிடம் கேட்கமாட்டான் (அவனே உண்மையான ஏழை)" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம் 1879.

Wednesday, November 9, 2016

FACEBOOK வீடியோக்களை இலகுவாக டவுன்லோடு செய்வது எப்படி?



நம்மில் அதிகமான மக்களுக்கு முகநூல் வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி என்று தெரியாது. காரணம் அந்த வீடியோக்கள் அனைத்துமே ஆன்லைனில் பிளே செய்து பார்க்கும் வண்ணமாகத்தான் இருக்கும்.

சில மனம் கவரும் வீடியோக்களை நாம் பார்க்க நேரிடும் பொழுது அதை உடனே டவுன்லோடு செய்ய வேண்டும் என்று மனம் சொல்லும். ஆனால் செய்வதற்கு ஆப்ஷன் இல்லை என்ற வருத்தத்தோடு அந்த வீடியோவை வெறுமனே பார்த்துவிட்டு மூடிவிடுவோம். அதுமட்டுமல்லாமல் முகநூல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அப்டேட் செய்யப்படுவதால் நாம் விரும்பிப் பார்த்த அந்த வீடியோ எங்கே சென்றது என்றே நினைவில் வைக்க முடியாத தூரத்தில் அவைகள் சென்று விடவும் வாய்ப்புகள் உள்ளது.

இனி கவலை வேண்டாம்! நீங்கள் விரும்புகின்ற வீடியோக்களை உங்களது கணினியில் பதிவிறக்கம் செய்துவிட இலகுவானதொரு வழி உள்ளது.

அது என்ன வழி என்பதை படங்கள் உதாரணங்களோடு பார்ப்போம் வாருங்கள்....

முதலில் நீங்கள் பதிவிறக்க விரும்புகின்ற விடியோவிற்கு செல்லுங்கள்.

பிறகு அந்த வீடியோவை பிளே செய்து பின்னர் அந்த வீடியோவில் வைத்து உங்களது மவுசில் ரைட் கிளிக்கை சொடுக்கவும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




ரைட் கிளிக் சொடுக்கிய உடன் மூன்று ஆப்ஷன்கள் வரும், அதில் கடைசியாக உள்ள show video URL என்பதை கிளிக் செய்யவும்.

URL பகுதியை கிளிக் செய்த உடன் அந்த வீடியோவிற்கான URL Address முழுமையாக தேர்வு செய்யப்பட்டே காட்சி தரும். அந்த ஊதா நிறத்தால் சூழப்பட்ட பட்டியின் மீது மீண்டும் ரைட் கிளிக் செய்யவும். அதில் காப்பி என்ற ஆப்ஷன் தோன்றும், அதை கிளிக் செய்து கொள்ளவும்.



பின்னர் உங்களது Browser-ல் புதிதாக ஒரு Tab-ஐ உருவாக்கி அதன் URL Address Bar-ல் நீங்கள் ஏற்கனவே காப்பி செய்த Address-Paste செய்யவும்.

உதாரணத்திற்கு கீழே உள்ள படங்களை பார்க்கவும்.



பிறகு அந்த URL-ல் உள்ள www என்பதை நீக்கி விட்டு அந்த இடத்தில் m என்று டைப் செய்து Enter பட்டனை தட்டவும்.




இப்போது கீழே உள்ளது போன்று புதிதாக ஒரு பக்கம் தோன்றும்.



அதில் உள்ள வீடியோவை பிளே செய்து விட்டு, அந்த வீடியோவில் வைத்து ரைட் கிளிக் சொடுக்கினால் அதில் save video as என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும்.

அதை கிளிக் செய்தால் போதும், நீங்கள் அந்த வீடியோவை உங்களது கம்ப்யூட்டரில் எந்த இடத்தில் பதிவிறக்க வேண்டும் என்று கேட்கும்.

தேர்வு செய்துவிட்டு save பட்டனை தட்டினால் நீங்கள் விரும்பிய வீடியோவின் பதிவிறக்கம் தயாராகிவிடும்.

அன்புடன்
முஹம்மது மஷாரிக்.

Thursday, November 3, 2016

Youtube வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?



பெரும்பாலும் Youtube வீடியோக்கள் பல மென்பொருட்களை பயன்படுத்தித்தான் மொபைலில் அல்லது கணினியில் டவுன்லோடு செய்யப்படுகிறது. இது போன்ற எந்த மென்பொருட்களும்(Softwares) இன்றி Youtube-ல் நாம் எந்த இடத்தில் வீடியோக்களை பார்க்கிறோமோ அங்கேயே எளிதாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் நாம் பதிவிறக்க நினைக்கும் வீடியோக்களை Mp4 High, Mp4 Low, 3gp, Mp3 என்று நாம் விரும்புகின்ற அனைத்து வகையிலும் அந்தப் பகுதியில் பதிவிறக்கிக் கொள்ள முடியும்.

பயனுள்ள பல தகவல்களை நாம் Youtube-ல் நேரடியாக சென்று பார்வையிடுவதால் நமது டேட்டாக்கள் விரைவாக முடிந்து விடும். மீண்டும் அவற்றை பார்வையிட மீண்டும் மீண்டும் சென்று அதே வீடியோவை பார்க்கும் நபர்களும் நம்மில் இருக்கின்றனர். இதுபோன்ற நிலைகளை தவிர்த்து நமக்கு பயன்தரும் வீடியோக்களை நாம் விரும்பிய அளவில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் இலகுவாக பார்வையிடலாம், டேட்டாவும் மிச்சப்படும்.

இப்பொழுது எவ்வாறு Youtube-ல் நேரடியாக பதிவிறக்கம் செய்வது என்பதைப்பற்றி பார்ப்போம்.

முதலில் நீங்கள் ஏதேனும் ஒரு பிரவுசரை (Browser Like Chrome, UC Browser, Firefox) திறந்து அதன் மூலமாக Youtube செல்ல வேண்டும்.


பிறகு உங்களுக்கு தேவையான வீடியோவை கிளிக் செய்து கீழே உள்ள படத்தில் உள்ளதை போன்று தேர்வு செய்து கொள்ளவும்


பிறகு அந்த பக்கத்தின் மேலே உள்ள URL பக்கத்திற்கு சென்று அதில் இருக்கும் வார்த்தைகளில் https:// என்பதை மட்டும் அழித்து விடவும். அதாவது www என்ற வார்த்தைக்கு முன்னாள் உள்ள அனைத்தையும் அழித்து விட வேண்டும்.

புரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை கவனிக்கவும்.


கம்ப்யூட்டர் மூலமாக பதிவிரக்குவதாக இருந்தால்


இந்த படத்தில் உள்ளதை போன்று தான் உங்களது வீடியோவின் URL-ம் இருக்க வேண்டும்.

அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது www. என்ற வார்த்தைக்கு பின்னால் ss என்ற வார்த்தையை இணைக்க வேண்டும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


அல்லது மொபைல் மூலமாக பதிவிறக்கம் செய்வதாக இருந்தால் m.youtube.com/watch?v=1wKcVOluCou என்று www இருக்க வேண்டிய இடத்தில் m இருக்கும். அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

அங்கு m. என்ற வார்த்தைக்கு அடுத்ததாக ss என்ற வார்த்தையை இணைக்க வேண்டும். அதாவது m.ssyoutube.com/watch?v=1wKcVOluCou இதுபோன்று இருக்க வேண்டும்.

வேலை முடிந்தது, இனி ss என்று டைப் செய்த பின்னர் கம்ப்யூட்டராக இருந்தால் Enter பட்டனை தட்டவும். மொபைலாக இருந்தால் GO என்பதை  கிளிக் செய்யவும்.
இறுதியாக கீழே உள்ளதை போன்று ஒரு பகுதி திறக்கும்.


இதற்கு மேல் சொல்வதற்கென்ன, உங்களுக்கே தெரியும் அடுத்த நிலைப்பற்றி. ஆம் Download என்ற Box-ன் இறுதியாக உள்ள அம்புக்குறியை கிளிக் செய்யவும். என்னென்ன வகைகளில் அந்த வீடியோவை பதிவிறக்கலாம் என்ற விவரம் தோன்றும்.


இந்த பட்டியலில் உங்களுக்கு எது வேண்டுமோ அதை தேர்வு செய்தால் போதும்,  உங்களது பதிவிறக்கம் தயாராகிவிடும்.

நம்மையான விஷயங்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த தகவல் பகிரப்படுகிறது. அறியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்