தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Showing posts with label ஆன்ராயடுக்கான இஸ்லாமிய மென்பொருள்கள். Show all posts
Showing posts with label ஆன்ராயடுக்கான இஸ்லாமிய மென்பொருள்கள். Show all posts

Monday, December 14, 2015

திருக்குர்ஆன் தமிழாக்கம் அப்டேட்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு!
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே....!
Play Store-ல் Masarik Apps-ன் மூலம் வெளியிடப்பட்டுள்ள சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் புதிய பதிப்பான 14-ஆம் பதிப்பு, முழுமையான முறையில் நமது அப்ளிகேஷனிலும் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனேவே வெளியிட்டிருந்த அப்ளிகேஷனில் இல்லாத பல புதிய தகவல்கள் 14-ஆம் பதிப்பின் படி தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து சகோதர சகோதரிகளும் உடனே பழைய குர்ஆன் அப்ளிகேஷனை அப்டேட் செய்து பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். சிலருக்கு இது போன்ற தகவல் சென்றடையாமல் ஆரம்பத்தில் வெளியிட்ட அப்ளிகேஷனையே அவர்கள் பயன்படுத்துவதை நம்மால் காண முடிந்தது. அவர்களைப் போன்றோருக்கும் இந்தத் தகவலை இயன்றளவிற்கு எத்தி வைக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!
குறிப்பு;
14-ம் பதிப்பின் படி அப்ளிகேஷனை அப்டேட் செய்வதற்கு உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல இறைவன் இதன்மூலம் அளப்பறிய நன்மைகளை உங்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!!!

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.
அப்ளிகேஷனுக்கான லிங்க்,

Monday, August 3, 2015

திருமறை குர்ஆன் மீண்டும் அப்டேட்!



அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரகாத்துஹு!

மஷாரிக் ஆப்ஸி(Masarik Apps)ன் மிகவும் இனிமையான தகவலோடு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்....!

சகோதரர் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த தமிழ் குர்ஆன் தர்ஜுமா அப்ளிகேஷன் மீண்டும் சில சிறப்பு அம்சங்களோடு தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது!

நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த திருக்குர்ஆன் அப்ளிகேஷனால் பலரும் பயன்பெற்று வருவதாக பல சகோதரர்களிடமிருந்து தகவல் கிடைத்தது, அல்ஹம்துலில்லாஹ்! மேலும், இந்த குர்ஆன் அப்ளிகேஷனில் தேடல் வசதி இணைக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பலர் நம்மிடம் தெரிவித்தனர். பல முயற்சிகளுக்கு மத்தியில், மக்கள் மனதில் நெருடிக் கொண்டிருந்த "தேடல்" வசதியும் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது நமது இந்த அப்ளிகேஷனில் இணைக்கப்பட்டு விட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். 

நாம் இந்த குர்ஆன் அப்ளிகேஷனில் தமிழோடு சேர்த்து அரபு மொழியையும் இணைத்தமைக்கு காரணமே, பலவகையான தர்ஜுமாக்களை ஒரே மொபைலில் பயன்படுத்தி சிரமப்பட வேண்டாம் என்பதற்காகத்தான். தேடல் வசதி நமது அப்ளிகேஷனில் இணைக்கப்படாமல் இருந்தமையால் நாம் வேறு தர்ஜுமாவையும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கலாம். இனி இந்த சுமையும் கவலையும் வேண்டாம். 
நமது ஒரே தர்ஜுமாவிலேயே நமக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெரும்பாலும் செய்து தரப்பட்டுவிட்டது. 

அதுமட்டுமல்லாமல் தற்போது வெளியிடப்பட்ட பதினான்காம் பதிப்பின் அடிப்படையில் அனைத்து குறிப்புக்களும் அப்டேட்டும் செய்யப்பட்டு விட்டது. ஆகவே இந்த புதிய பயனுள்ள வசதிகளை பெற உடனே Play Store சென்று உங்களின் பழைய வெர்சன் குர்ஆனை அப்டேட் செய்து கொள்ளுங்கள். அப்டேட் செய்ய தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு செய்து கொள்ளுங்கள். 
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு உதவுங்கள்! 

உடனே அப்டேட் செய்யுங்கள்! பயனடையுங்கள்! மக்களிடம் அதிகம் பரப்புங்கள்! 
இதற்காக முயற்சித்த, மேலும் ஒத்துழைத்த எனக்காகவும் என் குடும்பத்தாருக்காகவும் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!

குறிப்பு: தமிழில் தேடல் வசதி அமைக்கப்பட்டுள்ளதால், வார்த்தைகளை தேடுவதற்கு தமிழ் தட்டச்சு பலகை தேவை. ஆகவே, அனைவரும் தட்டச்சு செய்ய தனியாக ஏதாவதொரு தமிழ் டைப் ரைட்டிங் (Tamil Type Writing Keyboard) அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  

அன்புடன்,
உங்கள் முஹம்மது மஷாரிக்.
தொண்டி.

அப்ளிகேஷனுக்கான லிங்க்.,

Friday, June 12, 2015

திருக்குர்ஆன் அப்ளிகேஷன் - ஆங்கில பதிப்பு!





அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரகாத்துஹு!

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

ரமலான் மாதத்தை அடையவிருக்கும் இந்த இனிய தருணத்தில், மீண்டும் ஒரு புதிய இஸ்லாமிய அப்ளிகேஷனை எம் சொந்தங்களுக்காக வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.


நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த சகோ பி.ஜெயினுல் ஆபிதீன் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் 
சில சகோதரர்களால் ஆங்கிலத்தில் அழகிய வடிவில் மொழிப்பெயர்க்கப் பட்டுள்ளடு. அந்த ஆங்கிலப் பதிப்பைத்தான் தற்போது நாம் அப்ளிகேஷனாக வெளியிட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!


நாம் இந்த மொழிப்பெயர்ப்பை அதிகம் உபயோகிக்க காரணம் இதில் தரப்பட்டிருக்கும் குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வின் அடிப்படையிலான அழகிய விளக்கங்கள், மாற்றுமத நண்பர்களின் இஸ்லாம் குறித்த தேடல்களை மிக எளிமையாக விளக்கும் விளக்க உரைகள், மக்கள் விளங்கிக் கொள்ளத்தக்க எளிய தமிழ்நடையில் இந்த மொழிப்பெயர்ப்பு அமைந்திருத்தல் போன்றவைதான்!

இதே சிறப்பு அம்சங்களோடு ஆங்கில மொழிப்பெயர்ப்பும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தமிழாக்கம் தமிழ் உலகில் எப்படி மிகவும் பயனுள்ளதாகவும், இறைவனின் உதவியால் பலர் இஸ்லாத்தை ஏற்க உதவியாகவும் இருந்து வருகிறதோ,

இதே சூழல்கள் அல்லாஹ்வின் உதவியோடு உலகம் முழுவதும் ஏற்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அந்த நோக்கத்தின் விளைவாக உலகில் பேசப்படும் பொதுமொழி ஆங்கிலத்தில் இந்த அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்படுகிறது.


இவை எமது நோக்கம் மட்டுமல்ல, ஒவ்வொரு சிறந்த முஸ்லிமுடைய நோக்கமும் இவையாகத்தான் இருக்கும். நோக்கம் நிறைவடைய அல்லாஹ் உதவி செய்திருக்கிறான். இப்போது நீங்கள் செய்ய வேண்டிய உதவி என்னவென்றால், ஆங்கிலம் தெரியாவிட்டாலும் இந்த அப்ளிகேஷனை அனைவரும் பதிவிறக்கம் செய்யுங்கள்.

நான் முன்பே தெரியப்படுத்தியது போல, பிளே ஸ்டோரின் தேடல் பட்டியில் இந்த குர்ஆன் இடம்பிடிக்க வேண்டுமானால் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரமலான் மாதத்தை அடைவதற்கு முன்னால் இயன்றளவு இந்த செய்தியை மக்களுக்கு பரப்பி பதிவிறக்கம் செய்ய சொல்லுங்கள்.

காரணம், ரமலான் மாதத்தில் கண்டிப்பாக உலகம் முழுவதிலும் இஸ்லாமியர்களால் அதிகம் வாசிக்கப்படும் ஒன்று இருக்கிறதென்றால் அது திருமறை தான். ஆகவே கூகுள் பிளேயில் குர்ஆனை தேட உலக நாடுகளில் வாழும் பல இஸ்லாமியர்கள் வருவார்கள். அவர்கள் பார்வையில் சகோ. பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த இந்த குர்ஆன் தென்பட வேண்டும். அவர்களும் இதன் மூலம் உண்மையை விளங்கி பயனடைய வேண்டும்! மொத்தத்தில் உலகில் வாழும் எல்லா மக்களிடமும் இது சென்றடைய வேண்டும். இந்த நோக்கம் நிறைவேற தமிழ் மக்கள் ஒருமுறையாவது இந்த குர்ஆனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

தேடலில் வந்துவிட்டால், இன்ஷா அல்லாஹ் நமது இலட்சியத்தை நாம் அடைந்து விடுவோம். அல்லாஹ் நாடினால் நாளை நாம் பார்த்திராத எத்தனையோ நபர்கள் இதன் மூலம் நேர்வழி பெறலாம், அதற்காக அல்லாஹ் மறுமையில் உங்களுக்கும் அளப்பரிய கூலி வழங்கலாம்.

அதிகம் பரப்புங்கள! பதிவிறக்கம் செய்யுங்கள்!

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.
தொண்டி.


அப்ளிகேஷனுக்கான லிங்க்,

Thursday, May 14, 2015

முக்கிய அறிவிப்பு - அவசரம் காட்டவும்!




அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வ பரகாத்துஹு...!

அல்லாஹ்வின் அருளால் இஸ்லாம் சார்ந்த பல பயனுள்ள ஆண்ட்ராய்டு மென்பொருட்களை நாம் தயாரித்து வெளியிட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். மென்மேலும் இதுபோன்ற மென்பொருட்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நாங்கள் எங்களது கம்பெனியின் லோகோவாக ஓர் இறைவனை உணர்த்தும் ஏகத்துவ முத்திரையாக ஒரு விரலை வைத்திருந்தோம். நீங்கள் எனது எந்த மென்பொருளை திறந்தாலும் அதுதான் முதலாவதாக வரும்.

இந்த விரல் முத்திரை தற்போதைய சூழலில் சில தீவிரவாத அமைப்பினராலும் பயன்படுத்த படுவதால், இது அவர்களது இயக்கத்தின் முத்திரை என்பதை போன்றும், யாரெல்லாம் அதை பயன்படுத்துகிறார்களோ அவர்களும் அந்த தீவிரவாத அமைப்பை ஆதரிக்கின்றனர் என்பதை போன்றும் கருத்து தற்போது தமிழகத்தில் நிலவ ஆரம்பித்துள்ளது. 

முதலில் ஒன்றை பதிய வைத்து கொள்கிறேன். நான் ஒரு முஸ்லிம், அதிலும் தமிழகத்தின் சமூக பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒரு உறுப்பினரும் கூட. 
எனது ஜமாஅத் கடந்த பல வருடங்களாக இஸ்லாமியர்களுக்கும் பிற மத சகோதரர்களுக்கும் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்த எந்த அளவிற்கு உழைத்திருக்கிறது என்பதை அனைத்து மீடிக்களும், உளவுத்துறையினரும் அறிந்துதான் வைத்துள்ளனர்.
அந்த அமைப்பை சார்ந்த நான், தீவிரவாதத்திற்கு எதிரானவன்...
தீவிரவாத அமைப்பினர் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பதில் நானும் முதலாமவன்.
எந்த தீவிரவாத அமைப்பிற்கும் நான் ஆதரவாளன் அல்ல!

அப்படி சிந்தனையை தூண்டும் வகையில் சில அயோக்கியர்கள் விரல் முத்திரையை பயன்படுத்தியதால், அந்த கயவர்களை எங்களோடு தொடர்பு படுத்தி பேசிவிடக்கூடாது (விரல் முத்திரை இஸ்லாத்தின் அடையாளமல்ல) என்பதற்காக எங்களது கம்பெனியின் லோகோ இன்றோடு மாற்றப்பட்டுவிட்டது!

#குறிப்பு:
இந்த இஸ்லாமிய மென்பொருட்கள் தடைபடாமல் உங்களை வந்தடைய வேண்டுமென்றால், இதன்மூலம் எங்களுக்கு எதுவும் பாதிப்புகள் வராமல் இருக்க வேண்டுமென்றால், இந்த தகவலை அதிகம் அதிகம் அனைத்து மக்களுக்கும் பரப்புங்கள்! 

உடனே நாங்கள் வெளியிட்ட அனைத்து மென்பொருட்களையும் அப்டேட் செய்து கொள்ளுங்கள்! அப்படி செய்தால் மட்டும் தான் அனைவரது மொபைலிலும் லோகோ மாற்றப்படும்!

தளத்திற்கு செல்லும் லிங்க்,
https://play.google.com/store/apps/developer?id=Masarik%20Apps&hl=en

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.

Wednesday, March 18, 2015

ஆன்ராய்டு அப்ளிகேஷன் - குர்ஆன் துஆ



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!
அன்புள்ள சகோதரர்களே, சகோதரிகளே!
ஆன்ட்ராய்டு மொபைலுக்கான எங்களது அடுத்த வெளியீடாக 
குர்ஆனில் இறைவன் கற்றுத் தரும் துஆக்களை தொகுத்து, "குர்ஆன் துஆ" என்ற பெயரில் ஒரு அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளோம்.

தமிழ்வாழ் மக்கள் இலகுவாக இந்த துஆக்களை மனனமிடும் வகையில் தமிழ் மொழியிலும் தமிழ் தெரியாத நபர்கள் இலகுவாக மனனமிடும் வகையில் தங்லீஷிலும் இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப் பட்டுள்ளது.
விரும்பிய நேரத்தில் சிரமமின்றி எடுத்து படித்து இறைவனை நினைவுகோரலாம் என்ற நல்ல நோக்கத்திற்காக இதை மகிழ்ச்சியோடு வெளியிடுகிறோம்.
இதில் விரும்பிய துஆக்களை காப்பி செய்யும் வசதிகள் தரப்பட்டுள்ளது.
பார்வை குறைவுடையோருக்காக எழுத்துக்களின் அளவு உயர்த்த சுருக்க வசதி தரப்பட்டுள்ளது.
அனைவரும் பதிவிறக்கம் செய்யுங்கள். அதிகமாக பரபுங்கள்!
எங்களது இம்மை மறுமை இரு வாழ்வும் சீராகவும் ஆரோக்கியமாகவும் அமைவதற்கு வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!
அன்புடன்,
முஹம்மது மஷாரிக் & குடும்பத்தார்கள்.
(Masarik Apps)

அப்ளிகேஷனுக்கான லிங்க்,

Friday, February 20, 2015

Masarik Apps -ன் முக்கிய அறிவிப்பு



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!

அன்புள்ள சகோதர சகோதரிகளே, நேற்றைய தினம் நாம் வெளியிட்ட குரான் அப்ளிகேஷனில் அங்கங்கு காணப்பட்ட பிழைகளை நிறைய சகோதரர்கள் நம்மிடம் சுட்டிக் காட்டினார்கள். அந்த குறைகள் அனைத்தும் பெருமளவில் சரி செய்யப்பட்டு விட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்த குரான் அப்ளிகேஷனில் டொனேட் என்ற ஒரு ஆப்ஷனை நாம் இணைத்திருந்தோம். அதற்கான காரணத்தையும் அதில் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தோம். இருப்பினும் இது தலைமையகத்தை தேவையற்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்க வைப்பதாக என்னிடம் தெரிவித்து, அந்த ஆப்ஷனை நீக்கி விடுமாறு என்னிடம் கூறினார்கள். தலைமையின் கோரிக்கைக்கு இணங்க அந்த பகுதியும் நீக்கப்பட்டு விட்டது.

தற்போது இவை Version 1.2 ஆக வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட அனைத்து அம்சங்களும் உங்களது அப்ளிகேஷனில் வர வேண்டுமேயானால் மீண்டும் ஒரு முறை குரானை அப்டேட் செய்து கொள்ளுங்கள். அனைத்து பகுதிகளும் மாறி விடும்.

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.

Wednesday, February 18, 2015

ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் - "சந்திக்கும் வேளையில்"


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!


அன்புள்ள சகோதர சகோதரிகளே!

அல்லாஹ்வின் அருளால் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய

"சந்திக்கும் வேளையில்"

என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை Play Store-ல் வெளியிட்டுள்ளோம்.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு சத்திய மார்க்கத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக்க இந்த முயற்சி உதவியாக இருக்கும் என்று ஆதரவு வைக்கிறோம்.

அல்லாஹ்விற்கே எல்லா புகழும்....

இந்தத் தகவலை அதிகமாக பரப்புவத்தின் மூலம் 
நீங்களும் நன்மையை பெற்றுக் கொள்ள முந்துங்கள்...

அனைவரும் பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் பதிவிடப்படும் அனைத்து அப்ளிகேஷன்களும் தமிழிலும் வெளியிடப்படும் 
இன்ஷா அல்லாஹ்...

அப்ளிகேஷனுக்கான லிங்க்.,

அன்புடன்
முஹம்மது மஷாரிக்.

ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் - "இஸ்லாமியத் திருமணம்"

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!



அன்புள்ள சகோதர சகோதரிகளே!


சகோதரர் பி.ஜே அவர்கள் எழுதிய 

"இஸ்லாமியத் திருமணம்" 

என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை 
ஆன்ராய்டு அப்ப்ளிகேஷனாக Play store-ல் வெளியிட்டுள்ளோம்.

அல்ஹம்துலில்லாஹ்!

நாம் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் இதுபோன்ற புத்தகங்களை வெளியிட முக்கியமானக் காரணம், உலகெங்கிலும் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் மார்க்கத்தை விளங்கும் மக்கள் குறைவு என்று தான் நாம் கருதுகிறோம்.

ஆகவே சத்தியத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைக்க இந்த முயற்சி நிச்சயமாக உதவும் என்று வல்ல இறைவனை ஆதரவு வைக்கிறோம்.

இந்த அனைத்து புத்தகங்களும் இன்ஷா அல்லாஹ் தமிழிலும், எளிய முறையில் மக்கள் பயனடையும் வகையில் வெளியிடப்படும். 
அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

பதிவிறக்கம் செய்யுங்கள், அதிகமாக பரப்புங்கள்!

குறிப்பு:
அதிகமான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்யப்பட்டால் தான் இந்த அப்ளிகேஷன் Play store-ல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.

அப்ளிகேஷனுக்கான லிங்க்

பி.ஜே திக்குர்ஆன் தர்ஜுமா ஆண்ட்ராய்டு மென்பொருள் அப்டேட்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...!


அன்புள்ள சகோதர சகோதரிகளே, அல்லாஹ்வின் மகத்தான அருளால் சகோதரர் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் மென்பொருள் தற்போது பல சிறப்பம்சங்களோடு மிகவும் புதுப் பொலிவுடன் மக்களின் தேவை கருதி அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
இதில் தரப்பட்டுள்ள மிக முக்கியமான சிறப்பம்சம் "அரபு மொழியுடன் கூடிய தமிழாக்கம்" ஆகும்.
தமிழாக்கத்திற்காகவும் அரபு வசனங்களுக்காகவும் தனித்தனியாக இரண்டு மென்பொருட்களை பயன்படுத்தும் சிரமம் இனி வேண்டாம்.
இலகுவான முறையில் ஒரே இடத்தில் இரண்டு வசதிகளையும் பெற்றுக் கொள்ளும் வகையில் பி.ஜே அவர்களின் தர்ஜுமா உங்கள் கையில்...
இதில் தரப்பட்டுள்ள வசதிகள்:
* அரபு மொழி மற்றும் தமிழாக்கம்
* தேவைப்படும் வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம்.
* விருப்பமான வசனங்களை அரபி அல்லது தமிழ் அல்லது அரபு தமிழ் எனும் வகையில் தனித்தனியாக காப்பி செய்து கொள்ளலாம்.
* Go To வசதியின் மூலம் விரும்பிய வசனங்களுக்கு இலகுவாக செல்லலாம்.
* படிப்பவற்றை அதே இடத்திலேயே முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளலாம்.
* பார்வை குறைவுடையவர்கள் சிரமமில்லாமல் வாசிக்க எழுத்து அளவை அதிகப்படுத்தி கொள்ளலாம்.
* இடையிடையே தரப்பட்டிருக்கும் எண்களை அழுத்துவதன் மூலம் அதன் விளங்கங்களை அடிக்குறிப்பின் வாயிலாக படித்து கொள்ளலாம்.
* வேகமாக விரும்பிய அத்தியாயத்திற்கு செல்வதர்கேற்ப Speed Scroll வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதிகளை குர்ஆன் வசனங்களின் இடது புறமுள்ள ஊதா நிற எண் வரிசைகளை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
‪#‎குறிப்பு‬:
இந்த உருவாக்கத்தில் தவறு ஏதும் இருந்தால் அவை எமது கவனக் குறைவால் ஏற்பட்டிருக்கக் கூடும்.
சுட்டிக் காட்டினால் விரைவாக திருத்தப்படும் இன்ஷா அல்லாஹ்...
அனைத்து மக்களுக்கும் இந்தத் தகவலை இயன்றவரை பரப்புங்கள்...

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.

அப்ளிகேஷனுக்கான லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=kk.qurantest&hl=en

Tuesday, December 23, 2014

மனனம் செய்வோம் அப்ளிகேஷன் Updated...!


அன்புள்ள சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!

சிறிய சூராக்களை தமிழ்வாழ் மக்கள் மனனமிடும் வகையில் "மனனம் செய்வோம்" என்ற அப்ளிகேஷன் வெளியிடப்பட்டிருந்ததை அறிவீர்கள்.

வெறுமனே மனனமிடுவதாக இல்லாமல்
ஓரளவு உச்சரிப்புடன் மக்கள் மனனமிட வேண்டும் என்


ற எண்ணத்தில் தங்க்லீஷ் முறையில் இந்த அப்ளிகேஷன் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால், பல பாமர மக்கள் இவற்றைப் பார்த்து மனனமிட சிரமமாக உள்ளது என்ற தகவல்களை நம்மிடம் தெரிவித்திருந்தார்கள்.
ஆகவே, அவர்களும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி இலகுவாக மனனமிடும் வகையில் தமிழிலும் தற்போது (UPDATE) மாற்றப்பட்டுள்ளது. கூடுதலாக காப்பி செய்யும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

அனைத்து சகோதரர்களும் உடனே Update செய்து கொள்ளவும்.

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.

அப்ளிகேஷனுக்கான லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=kk.smallsooras

Monday, December 8, 2014

திருக்குர்ஆன் தமிழாக்கம் - பிஜே

அஸ்ஸலாமு அலைக்கும் என் அன்புச் சகோதரர்களே!

அல்லாஹ்வின் அருளால்  தமிழக மார்க்க அறிஞர் சகோதரர் பி.ஜெயினுலாப்தீன் அவர்கள் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தை ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்களுக்கு பயன்பெறும் வகையில் தயாரித்து பதிவேற்றியிருக்கிறேன்.

இதில் சில வித்தியாசங்களையும் சேர்த்துள்ளேன். இன்னும் இதுபோன்றும், இதைவிட அதிகமாகவும்
பல மென்பொருட்களை உருவாக்க வேண்டும் என்பது எனது ஆசை.
அதற்க்காக அல்லாஹ்வின் அருளையும்,
உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

உங்களது ஆதரவுகள் மிகவும் அவசியமானது.
அவை இருந்தால் மட்டுமே நான் மென்மேலும் இதுபோன்ற சேவைகளை தொடர்ச்சியாக செய்ய முடியும்.

ஆகவே அனைவரும் கீழே கொடுக்கப்பட்ட லிங்கை தொடர்ந்து,
எனது தயாரிப்பைப் பார்வையிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Muhammed Masarik N

https://play.google.com/store/apps/details?id=kk.qurantest&hl=en

Saturday, December 6, 2014

அப்ளிகேஷன் - "குற்றச்சாட்டுகளும் பதில்களும்"


அன்புள்ள சகோதரர்களே!
தமிழக மார்க்க அறிஞர் சகோதரர் பி.ஜே அவர்கள் எழுதிய
"குற்றச்சாட்டுகளும் பதில்களும்"
என்ற புத்தகத்தை
ஆன்ராய்டு உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்
"Islam Q & A"
என்ற மற்றுமொரு அப்ளிகேஸனை தாயாரித்துள்ளோம்.
இது ஆங்கில மொழிப்பெயர்ப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில் பெரும்பாலும்
உலகம் முழுவதும் உள்ள மாற்றுமதத்தவர்களால் இஸ்லாம் குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கான விடை அழகிய முறையில் உள்ளத்தைத் தொடும் வகையில் தரப்பட்டுள்ளது!
தமிழ்வாழ் மாற்றுமதச் சகோதரர்களுக்கு
இஸ்லாம் குறித்த நல்லெண்ணம்
பல நிகழ்ச்சிகள், புத்தகங்கள் வாயிலாக கொண்டு சேர்க்கப் படுகிறது.
இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெரும் முய்ற்சி எடுக்கிறது என்று சொல்லலாம்.
ஆனால் பெரும்பாலும் இவை தமிழுலகோடு நின்று விடுகிறது.
ஆகவே, சகோ.பி.ஜே எழுதிய இந்தப் புத்தகம்
உலக மக்கள் மத்தியில் ஆங்கிலத்தில் கொண்டு சேர்க்கப்பட்டால்,
இஸ்லாம் குறித்த நற்பேறு மாற்றுமதத்தவர்களுக்கு மத்தியில் பரவலாகக் காணப்படும் என்ற எண்ணம் தோன்றியது.
இன்றைக்கு உலகம் முழுவதும் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் ஆன்ராய்டில் இதை அறிமுகப் படுத்தினால்
நம் எண்ணம் ஓரளவிற்கு நிறைவேறும் என்று நினைக்கிறேன்.
ஆகவே, சகோதர சகோதரிகள் செய்ய வேண்டியது,
கீழே தரப்பட்டுள்ள லிங்கிற்குச் சென்று
இந்த அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்யுங்கள்.
ஆங்கிலம் வாசிக்கத் தெரியாதவராக இருந்தாலும் ஒரு முறையாவது பதிவிறக்கம் செய்யுங்கள்.
பதிவிறக்க எண்ணிக்கை அதிகமானால் தான்,
தேடல் பட்டியலில் முதன்மை இடத்தை இந்த புத்தகம் பிடிக்கும்.
அவ்வாறு முதலிடத்தில் வந்தால் அதிகமான மாற்றுமதத்தவர்கள் பார்வையில் இது விழும் இன்ஷா அல்லாஹ்!
யார் அதன் மூலம் நேர்வழி பெறுவார் என்பதை அல்லாஹ்வே அறிந்தவன்.
அந்த நேர்வழி கிடைப்பதற்கு நீங்களும் ஒரு உந்துகோலாக அமைய விரும்பினால்
பதிவிறக்கம் செய்யுங்கள்!

Friday, December 5, 2014

இஸ்லாமியப் பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!

அன்புள்ள சகோதர சகோதரிகளே!
எமது புதிய உருவாக்கமாக
"இஸ்லாமியப் பெயர்கள் மற்றும் அதன் அர்த்தங்கள்" என்ற அப்ளிகேஷன் தற்போது App Store-ல் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தைகளுக்கு பெயரிட வேண்டுமா???

இனி கவலை வேண்டாம்

ஆலிம்களைத் தேடித் திரிய வேண்டாம்

அரபு மொழி தெரிந்தவர்களை அணுக வேண்டாம்....

அழகியப் பெயர்களை சிறந்த அர்த்தங்களோடு சுயமாக நீங்களே தேர்ந்தெடுத்து உங்கள் குழந்தைகளுக்கு சூட்டலாம்.

பெயரிடுவதற்கு அரபு மொழிப் பண்டிதர்கள் தேவையில்லை. இதற்கென்று தனி செலவீனங்களும் விழாக்களும் அவசியமில்லை.

அன்றாடம் தமது வாழ்வில் பயன்படுத்தப்படும் ஆன்ராய்டு ஃபோன்களும் இந்த எளிமையான மென்பொருளும் போதுமானது.

இதில் வடிவமைக்கப்பட்டுள்ள அம்சங்கள்:

1. 4000-க்கும் மேற்பட்ட பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

2. ஆண் குழந்தைகளின் பெயர்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர்கள் என
எளிய முறையில் தேடும் வகையில் தனித்தனி பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. நாம் விரும்பும் பெயர்களின் எண்களை அழுத்துவதின் மூலம் அவற்றை தனியாக சேமித்து
தேர்ந்தெடுத்தப் பெயர்களில் விரும்பியதை தேர்வு செய்யும் எளிய வழிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. விரும்பியப் பகுதிகளுக்கு வேகமாகச் செல்ல
(scroll) இழுத்து விடும் வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நிச்சயமாக உதவியாக இருக்கும்.

பதிவிறக்கம் செய்யுங்கள், பயனடையுங்கள்!

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.
 
அப்ளிகேஷனுக்கான லிங்க்:

https://play.google.com/store/apps/details?id=kk.babynames&hl=en