தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, March 5, 2015

இன்பமும் துயரமும் இறைவனின் புறமிருந்தே!

அல்லாஹ் கூறுகிறான்,
(அல்லாஹ்) அவனே சிரிக்க வைக்கிறான்; (அவனே) அழவும் வைக்கிறான்.
திருக்குர்ஆன் (53:43).




இந்த வசனத்தை ஆழமாக சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் இறைவனது ஒரு எதார்த்தத்தை நிச்சயமாக உணர்ந்து கொள்வார்கள்.
நாம் பொதுவாகவே அழுவதை விரும்புவோர் அல்ல. நாம் விரும்பாவிட்டாலும், சில தருணங்களில் நம்மை அறியாமலேயே நமக்கு அழுகை மேலிடும்!
நாம் மகிழ்ச்சியோடு இருக்கும்போது நாம் விரும்பாத துக்கத்தை நோக்கித் தள்ளப்படுவோம்.

உதாரணத்திற்கு மகிழ்ச்சியுடன் நாம் வாழ்ந்து வரும் சூழலில் நமது சக்திக்கு மீறிய சில சம்பவங்கள் நம் குடும்பத்திலோ சமுதாயத்திலோ நடக்கும்.
பெற்றோர்களின் மரணம், பிள்ளையின் மரணம், கணவன் மனைவியின் மரணம், சகோதர சகோதரிகளின் மரணம், நண்பர்களின் மரணம், சுனாமி பூகம்பம் போன்ற பேரழிவுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள்., etc.
இவைகளில் எவையும் நாம் விரும்பிக் கேட்பவைக் கிடையாது!
ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் இவைகள் நடந்தே தீரும்.

அத்தகைய தருணத்தில், நாம் எப்படி இருப்போம்???
இப்படிப்பட்ட சூழலில் மகிழ்ச்சியை துக்கமாக மாற்றி அமைப்பது நாமா???
சிந்தித்துப் பாருங்கள்.... 
இறைவனின் வார்த்தை உண்மை என்பதை விளங்குவீர்கள்!

No comments:

Post a Comment