தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, March 5, 2015

புத்தாண்டு ஜாக்கிரதை-மதநல்லிணக்க கோட்பாட்டால் மாயமாகும் மார்க்கம்!!!!

மத நல்லிணக்கம் என்ற பெயரில் இன்றைய பெரும்பான்மை இஸ்லாமியர்கள்
மாற்று மதத்தவர்களின் பண்டிகைகளுக்கும் விழாக்களுக்கும் ஆதரவு தெரிவித்து 
தானும் அதை மகிழ்வோடு கொண்டாடுகின்றனர்!!!

இதற்கு உதாரணம், சற்றே நம்மைக் கடந்து சென்றிருக்கும் தீபாவளி.,
விழாவிற்கு சொந்தக்காரர்கள் விழா அன்றைக்குத்தான் பட்டாசு கொளுத்துகின்றனர், 
ஆனால் இஸ்லாமியர்களில் பலர் தம் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பட்டாசுக்களை வாங்கிக் கொடுத்து வெடிக்க வைக்கின்றனர்.
நான் நினைக்கிறேன் இந்து மக்களுக்கு இது தீபாவளி சீஸன் என்பதை இவர்கள் தான் நினைவூட்டுகிறார்கள் போலும்!

இது ஒரு புறமிருக்க, இஸ்லாமிய ஆட்சி என்று புறப்பட்ட பலரும்
அரசியல் மோகத்தால் 
மாற்று மதத்தவர்கள் இணை வைப்பின் அடிப்படையை வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து விழாக்களுக்கும் 
வாழ்த்துக் கூறி பெரிய பெரிய பேனர்களும் கட்அவுட்டுகளும் வைத்துக் கொண்டிருக்கின்றனர்!

இதற்குப் பெயர்தான் மத நல்லிணக்கமா???
அல்லாஹ்வுடையத் தூதர் இப்படித்தான் வழிகாட்டினார்களா???
கிருஸ்துமஸ் விழாவின் பின்னனி இயேசுவின் பிறப்பு என்கின்றனர்
இதற்கு வாழ்த்து சொல்வதால், இயேசு கடவுள் தான் என்ற நம்பிக்கையை நீங்களும் ஆதரித்ததாகவும் ஊக்குவித்ததாகவும் ஆகாதா???

பொங்கள் விழாவின் பின்னனியில் சூரியனை கடவுளாக்குகின்றனர்
இதற்கு வாழ்த்து சொல்வதால் நீங்களும் சூரியனை வணங்குவதற்கு ஊக்குவித்ததாக ஆகாதா???

இது போன்ற வாழ்த்துப் பரிமாற்றங்கள் ஏராளம் நம் சமுதாயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அரசியல் சிந்தனையால் இஸ்லாமிய வேடம் தரித்து இன்னும் எதையெல்லாம் ஆதரிக்க போகிறீர்கள்???
யூதர்களோடும் நசாராக்களோடும் அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்தார்கள், 
மார்கத்திற்கு முரணில்லா வகையில் அவர்களது விருந்துகளில் கலந்து கொண்டார்கள்,
யூதச் சிறுவனை தன்னிடம் வேலைக்கு அமர்த்தினார்கள்,
அவனது மரணத் தருவாயில் நலம் விசாரிக்கச் சென்றார்கள்,
யூத ஜனாஸவிற்காகவும் எழுந்து நின்றார்கள்(இன்னும் ஏராளம்)....

மாற்று மதத்தவர்களோடு இந்த அளவிற்கு அன்போடும் நல்லிணக்கத்தோடும் நடந்து கொண்ட அல்லாஹ்வின் தூதர் 
எள்முனையளவு கூட கொள்கையில் வளைந்து கொடுக்கவில்லை!!!

கொள்கை குழிதோண்டி புதைக்கப்படும் இடங்களில் மத நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்பதற்காக சமரசம் செய்து கொள்ளவில்லை.
ஆனால் இன்று இஸ்லாமியர்களின் நிலை நேர்முரணாகி விட்டது.

கொள்கைக்கு குழிதோண்டப்படும் விழாக்களுக்கு வாழ்த்து கூறிவிட்டு
அவற்றை அசத்தியமென்று எப்படி கூறப்போகிறீர்கள்???

கிருஸ்துமஸ் வாழ்த்து கூறிவிட்டு
இயேசு கடவுளில்லை என்று எப்படி கூறுவீர்கள்???

பொங்கள் வாழ்த்து கூறிவிட்டு
சூரியன் கடவிளில்லை என்று எப்படி கூறுவீர்கள்???

பழனி பாதையாத்திரைக்கு உதவி விட்டு
சிலைகள் கடவுளில்லை என்று எப்படி கூறுவீர்கள்???

கந்தூரி உரூஸ் விழாக்கு வருகை தருவோரை வறவேற்று விட்டு
கப்றுக்களை வழிபடக் கூடாது என்று எப்படிக் கூறுவீர்கள்???

சமரசம் கொள்கையில் இருக்கக் கூடாது.
இந்நிலை தொடருமென்றால் நாம் சமரசம் செய்தோரோடு நரகில் தான் நாளை மறுமையில் இருப்போம் என்பதே இறைவனின் பிரகடனம்.

புரிந்து செயல்பட அல்லாஹ் உதவி செய்வானாக....!














No comments:

Post a Comment