தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, May 25, 2016

சூரா இக்லாஸ் தொடர்பான பலவீனமான செய்தி - 1!




حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، قَالَ: وَحَدَّثَنَا يَحْيَى بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا رِشْدِينُ، حَدَّثَنَا زَبَّانُ بْنُ فَائِدٍ الْحمْرَاوِيُّ،  عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ قَرَأَ: قُلْ هُوَ اللهُ أَحَدٌ حَتَّى يَخْتِمَهَا عَشْرَ مَرَّاتٍ، بَنَى اللهُ لَهُ قَصْرًا فِي الْجَنَّةِ " فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: إِذًا نَسْتَكْثِرَ يَا رَسُولَ اللهِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اللهُ أَكْثَرُ وَأَطْيَبُ ".

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தை தினமும் பத்து முறை ஓதுகின்றாரோ, அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை கட்டித்தருகிறான்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அப்படி என்றால் நாங்கள் எங்களுக்காக அதிகமாக கோட்டைகளை கட்டிக் கொள்கிறோம் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அதிகரித்து தர காத்திருக்கிறான், மேலும் அவன் தூய்மையானவன் என்று பதில் கூறினார்கள்.

இந்த செய்தி ஸில்ஸிலத்துல் அஹாதீசுஸ் சஹீஹா 589, முஸ்னத் அஹ்மத் 15610 போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம்பெறுகிறது.

இந்த செய்தி பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் ஸஹ்ல் பின் முஆத், ஸப்பான் பின் பாஇத் போன்றோர் பலவீனமானவர்கள் ஆவார்கள். 

மேலும் முன்கருல் அஹாதீஸ்(நீராகரிக்கப்படவேண்டியவற்றை அறிவிப்போர்)என்றும் விமர்சிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் ரிஷ்தீன், இப்னு லஹீஆ போன்றோரும் பலவீனமான நபர்களாவர்.
(ளஈஃப் அத்தர்ஃகீபு வத்தர்ஹீப் (224/1), மஜ்மவுஸ் ஸவாயித் (145/7)).

ஆகவே இந்த செய்தி பின்பற்ற தகுதியான செய்தி அன்று.