தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Saturday, March 7, 2015

மார்க்கத்தை நோக்கி அழைப்பு விடுக்க ஓர் அழகிய செயல்பாடு!



நாம் அதிகம் அறிந்து வைத்திருந்த மாற்று மத தோழராகவே இருந்தாலும், இஸ்லாத்தை அவர்களிடம் எடுத்துரைக்க பலருக்கும் துணிவு கிடையாது 
இது இஸ்லாமியர்களின் எதார்த்தம்!

நாம் பிறரிடம் சென்று இஸ்லாத்தை எடுத்துரைக்காமலேயே, பிறர் தானாக நம்மை நோக்கி வந்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள, நம்மிடமுள்ள ஒரு சிறந்த அழைப்புபணிக்கான கருவி "தொழுகையாகும்"!
பல வேலைகள் நிமித்தமாக பயணத்திலிருக்கும் நீங்கள், தொழுகைக்கான நேரம் வரும்போது மக்கள் நடமாடும் அந்த இடத்திலேயே இறைவனை தொழ ஆரம்பித்து விடுங்கள் (பள்ளிவாசல் தெரியவில்லை என்றால்).
அவ்வளவு தான், உங்கள் தொழுகையை பல மாற்றுமத நண்பர்கள் கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். 
இறைவன் நாடினால் அந்த ஒரு செயலே அவர்களை தானாக ஈர்த்து வந்து இஸ்லாத்தைப் பற்றி அறியச் செய்யும்.

(ஆனால் வேதனையான விஷயம், பயணத்திருக்கும் பலர் தொழுவதே கிடையாது. அதற்கு பயணத்தைதான் காரணமும் காட்டுகின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை).
இறைவன் நாடி அவர் இஸ்லாத்திற்கு திரும்பி விட்டால் 
இந்த சிறந்த ஒரு காரியத்தை நீங்கள் செய்ததற்கான கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான்.

பேசுவதற்குத்தான் கூச்சப்படுகிறீகள், எந்த சிரமும் இல்லாத இந்த வணக்கத்தை நிறைவேற்றவுமா கூச்சம்???
இனி வாய்ப்பு கிடைத்தால் தவற விட மாட்டீர்களே???
‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக (அலியே!) உன் மூலம் ஒருவருக்கு நேர்வழி கிடைப்பது என்பது செவ்வகை ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி)
நூல் : புஹாரி.
(செவ்வகை ஒட்டகத்தை அரபு மக்கள் அபூர்வமான ஒன்றாக கருதினர்)

‘எவர் நேர்வழியின் பால் மக்களை அழைக்கின்றாரோ அதை ஏற்று செய்தவர்களின் கூலி போல் இவருக்கும் உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது. எவன் வழிகேட்டின் பால் மக்களை அழைக்கின்றானோ அவனுக்கு அதை செய்தவர்களின் கூலி போன்று உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி), 
நூல் : முஸ்லிம்.

No comments:

Post a Comment