தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, March 5, 2015

ஜும்ஆ உரையை கேட்கும்போது கால்களில் கைகளைக் கட்டி அமரக்கூடாதா???



திர்மிதியில் இது தொடர்பான செய்தி இடம்பெற்றுள்ளது.
முஆத் பின் அனஸ் அல் ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது முதுகையும், முட்டுக் கால்களையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு அமர்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
திர்மிதி 472.

திர்மிதி இமாம் அபூஈசா அவர்கள் இந்த செய்தியை ஹஸன் தரத்தில் பதிவிடப்பட்டதாகக் கூறுகிறார்.
இருப்பினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளரான அபூமர்ஹூம் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
இவரது இயர்பெயர் அப்துர் ரஹீம் பின் மைமூன் என்பதாகும்.

யஹ்யா பின் மயீன் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்,
அபூமர்ஹூம் அப்துர் ரஹீம் பின் மைமூன் என்பவரும்,
அவருக்கு ஹதீஸ் அறிவித்த சஹ்ல் பின் முஆத் என்பவரும் பலவீனமான அறிவிப்பாளர்கள் ஆவார்கள்.
(துஹ்ஃபத்துல் அஹ்வதீ).

ஆகவே, இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
ஜும்ஆ உரையை கேட்கும்போது கைகளைக் கட்டிக் கொண்டு அமர்வது தடுக்கப்பட்டது அல்ல.

No comments:

Post a Comment