தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, March 5, 2015

அலங்கரிப்போம் - கணவனுக்காக மட்டும்!



பெண்கள் தம்மை அழகுபடுத்திக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த அலங்காரம் தமது கணவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்!

ஆனால், இன்றைய நமது சமூகப் பெண்கள் இதற்காகவா அலங்கரித்துக் கொள்கிறார்கள்???
திருமணம் ஆன பெண்கள் வீட்டில் தனது கணவனுக்காக தம்மை அலங்கரிப்பதை விட 
ஏதாவதொரு நிகழ்ச்சிக்காக வெளியில் செல்ல நேரிடும் போது தம்மை அலங்கரித்துக் கொள்வதே அதிகம்!
(திருமணம், ஊர் சுற்றல்., etc).

இந்த அசிங்கமான நிலை, மறைவாகவோ வெளிப்படையாகவோ ஒரேயொரு கருத்தைத்தான் தருகிறது. உங்கள் கணவனை விட வெளியில் சுற்றித் திரியும் அந்நியர்கள் உங்களுக்கு விருப்பமாகி விட்டனர்.

இது கடுமையான வாசகமாகத் தோன்றும் பெண்களுக்கு கூறுகிறேன், உண்மையில் இந்த வார்த்தை யாரையெல்லாம் காயப்படுத்தி விட்டதோ 
அவர்கள் இந்த கெட்ட சிந்தனையில் தம்மை அலங்கரித்துக் கொண்டு வெளியில் செல்லவில்ல்லை என்பது உண்மை.

ஆனாலும் நான் சொன்ன காரணமும் சரியானதே! 
அதை உங்களை அறியாமலே ஷைத்தான் அவனது வலையில் உங்களை சிக்க வைத்து செய்ய வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் சகோதரிகளே! 
ஷைத்தான் நமக்கு பகிரங்க எதிரி என்பதை மறந்துவிட வேண்டாம்...

சிறிய விஷயமாக நமக்கு தோன்றும் பல செயல்கள் அழிவுப் பாதைக்கு நம்மைக் கொண்டு சென்று விடும்!
அல்லாஹ் பாதுகாப்பானாக...!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக் கொண்டு தன் வாடையை (பிறர்) நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல் : நஸாயீ (5036).

No comments:

Post a Comment