தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Friday, December 25, 2015

ஹதீஸ் கலையின் எதார்த்த நிலைப்பற்றி பற்றி சவூதி அறிஞர்கள்!




ஹதீஸின் "மத்னை" பார்க்காமல் அறிவிப்பாளரை மட்டும் வைத்து ஹதீஸை சரி காண்பது நுனிப்புல் மேய்வதே-சவூதி அறிஞர்கள்.
ஸலபிகளின் கோட்டையான சவுதியில் உள்ள "ஜாமிஆ இஸ்லாமியா பல்கலைகழத்தின் உத்தியோக பூர்வ இணையளத்தில் கூறப்பட்ட இந்த வாசகத்தை இங்கு பதிகிறேன்.
"மதனை" பார்க்காமல் அறிவிப்பாளரை மட்டும் பார்க்கும் நுனிப்புல் மேயும் நிலை எங்கிருந்து உள்ளது?அவை இரண்டும்(சனத் மதன்) ஒன்றை ஒன்று பிரியாத நண்பர்கள் இல்லையா?
(இவர்கள் சொல்லும்)இந்த கூற்று (ஸனதை மட்டும் பார்க்கும் கூற்று) எந்த அடிப்படையில் வந்தது?இந்த நிலைபாட்டில் உள்ளவர்கள் ஹதீஸ் கலை நூல்களை வாசித்தால் இதை கூற முடியுமா?(வாசித்த பின்பும்)அவர் நிலை அதுதானா?
ஒரு வாசிக சாலைக்கு சென்று ஹதீஸ் கலை நூல்களின் ஆரம்ப பக்கத்தின் சிறு பகுதியை மட்டும் வாசிக்கும் ஒருவர் ஹதீஸ் கலை என்றால் என்ன என்ற வரைவிலக்கணத்துக்கு அறிஞர்கள் இவ்வாறு கூறுவதை கண்டு கொள்வார்.
"இந்த கலையானது ஏற்பதற்கோ மறுப்பதற்கோ அறிவிப்பாளர் நிலை பற்றியும் "மதன்" நிலை பற்றியும் அறியக்கூடிய சட்டதிட்டங்களை கொண்ட அறிவாகும்"
ஹதீஸ் துறை அறிஞர்களிடத்தில் மிகவும் நுணுக்கமான மிகவும் தெளிவான ஒரு விதியை நாம் பெற்றுள்ளோம். அது எல்லோராலும் ஏகோபித்த ஒரு விதியாகும் அதில் அவர்கள் இவ்வாறு உறுதிப்படுத்துகின்றனர்.
"சிலபோது "ஸனத்" சரியானாலும் "மதன்" "ஷுதூத்" "இல்லத்" காரணத்தால் பிழையாகும் "மதன்" சரியானாலும் "ஸனத்" பிழையாகும்."
இந்த விதியானது அரிதான விதி அல்ல எல்லா ஹதீஸ் கலை நூல்களிலும் காணக்கூடிய ஒன்றுதான்"
இவ்வாறு சவுதியின் பிரபல்யமான பல்கலைகழகம் கூறியுள்ளது.
ஆதாரம்: சவுதியின் ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் இணையதளதின் வெளியீடு.
நன்றி: அஹ்மத் ஜம்ஷத் அஸ்ஹரீ.

Monday, December 14, 2015

திருக்குர்ஆன் தமிழாக்கம் அப்டேட்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு!
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே....!
Play Store-ல் Masarik Apps-ன் மூலம் வெளியிடப்பட்டுள்ள சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் புதிய பதிப்பான 14-ஆம் பதிப்பு, முழுமையான முறையில் நமது அப்ளிகேஷனிலும் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனேவே வெளியிட்டிருந்த அப்ளிகேஷனில் இல்லாத பல புதிய தகவல்கள் 14-ஆம் பதிப்பின் படி தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து சகோதர சகோதரிகளும் உடனே பழைய குர்ஆன் அப்ளிகேஷனை அப்டேட் செய்து பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். சிலருக்கு இது போன்ற தகவல் சென்றடையாமல் ஆரம்பத்தில் வெளியிட்ட அப்ளிகேஷனையே அவர்கள் பயன்படுத்துவதை நம்மால் காண முடிந்தது. அவர்களைப் போன்றோருக்கும் இந்தத் தகவலை இயன்றளவிற்கு எத்தி வைக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!
குறிப்பு;
14-ம் பதிப்பின் படி அப்ளிகேஷனை அப்டேட் செய்வதற்கு உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல இறைவன் இதன்மூலம் அளப்பறிய நன்மைகளை உங்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!!!

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.
அப்ளிகேஷனுக்கான லிங்க்,

Monday, October 19, 2015

தக்லீத் ஓர் ஆய்வு!




புத்தகத்தை பார்வையிட கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.


Monday, October 5, 2015

பொறுப்புக்களை மறந்த மணப்பெண்கள்!!!




அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு ஷீஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு ஷீஹாப், ஜும்ஆ நடத்துமாறு ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள். 
"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்." 
"ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்" என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
நூல்:புகாரி 893.

இறைவனால் விசாரிக்கப்படும் முக்கியமான பொறுப்புக்களில் ஒன்று தான் ஒரு பெண் தனது கணவனின் குடும்பத்தைப் பராமரிப்பதாகும். ஆனால் இன்றையக்கால பெண்கள் பெருமளவில் இந்த பொறுப்பை மறந்தும் துடைத்தெரிந்தும் தான் வாழ்கின்றனர்!

கணவனின் வாசல் மிதிக்கும் சில பெண்களோ கணவனுக்கு மட்டுமே சேவையாற்றுகின்றனர். சில பெண்களோ ஒருபடி மேலாக சென்று வாசல் மிதித்த வேகத்தோடு கணவனை மட்டும் அழைத்துக்கொண்டு புதிய வாசல் தேடி சென்று விடுகின்றனர்! 

திருமண உறவின்மூலம் கணவனை மட்டும் பராமரித்தால் போதுமானது என்ற சுயநல சித்தனையால் தான் இந்த விபரீதங்கள் அரங்கேறுகின்றன. இந்த விபரீத சிந்தனையை நாளை நமது வாரிசுகள் மூலம் சந்திக்கும் போதுதான் புரியும் வேதனையும் விளைவுகளும்.

எது எப்படியோ, இறைவனை உண்மையாக ஈமான் கொண்ட என் அன்புச்சகோதரிகளுக்கு சொல்கிறேன். இறைவனது கட்டளை, நீங்கள் மணமுடித்து செல்லும் கணவனின் வீட்டினருக்கு நீங்கள் பொறுப்பாளிகள். கணவனோடு மட்டும் நமது வட்டத்தை சுருக்கி கொள்ளக்கூடாது. கணவனின் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் ஆகியோரும் உங்களுடைய பொறுப்பிலுள்ளவர்கள் தான்.

ஈமான் கொண்ட பெண்கள் என்றும் இந்த பொறுப்பை மறந்துவிடக் கூடாது. இறைவனது இந்தக் கேள்விக்கு முறையான பதிலளிக்க விரும்புவோர், தனது கணவனின் குடும்பத்தை முறையாக பேணுவார்கள்! பாசத்தோடும் பரிவோடும் பல இன்னல்கள் துன்பங்களுக்கு மத்தியிலும், பல வருடங்கள் பராமரித்து வளர்த்த ஒரு தாயின் மகனை அந்த தாயை விட்டும் பிரிக்க மாட்டார்கள்.


Sunday, September 27, 2015

அடிமையின் மீது கூட அவதூறு கூறக்கூடாது!




مَنْ قَذَفَ مَمْلُوكَهُ، وَهُوَ بَرِيءٌ مِمَّا قَالَ، جُلِدَ يَوْمَ القِيَامَةِ، إِلَّا أَنْ يَكُونَ كَمَا قَالَ
நிரபராதியான தம் அடிமையின் மீது அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப்போன்று அந்த அடிமை இருந்தால் தவிர! என்று அபுல் காசிம் (இறைத்தூதர் (ஸல்)) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6858.

மக்கா குறைஷிகளிடம் இருந்த அன்றைய கால அடிமைகள் மனிதர்களாகவே மதிக்கப்படாத நிலையில்தான் இருந்தனர். அவர்களும் உயிருள்ள நபர்கள் என்று எண்ணிக்கூட பார்க்க மனமில்லாத வகையில் தொல்லை படுத்தப்பட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்துதான் இருக்கிறோம்.

அப்படிப்பட்ட அடிமைகளின் உரிமைகள் கூட பாதுகாக்கப்பட வேண்டும், அவர்கள் விஷயத்தில் அவதூறு கூறக்கூடாது என்று இறைத்தூதர் நமக்கு போதனை செய்கிறார்கள். அப்படி ஒரு மனிதர் அடிமைதானே என்று அற்பமாக எண்ணிக்கொண்டு அவதூறு பரப்பினால், அவருக்கு அல்லாஹ் மறுமையில் சாட்டையடி வழங்குவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்!

ஆனால், இன்றைய கால சூழலில், தான் நேசித்த ஒரு நபர் தனக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் முரன்பட்டுவிட்டால், அடுக்கடுக்காக அவரைப்பற்றி மற்றவர்களிடம் அவதூறு பரப்பும் நிலையில் நம் மக்கள் மக்கள் உள்ளனர். 

மறுமையில் நாம் தண்டிக்கப்படுவோம் என்பதை அஞ்சிக் கொள்வோமாக!


Monday, August 3, 2015

திருமறை குர்ஆன் மீண்டும் அப்டேட்!



அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரகாத்துஹு!

மஷாரிக் ஆப்ஸி(Masarik Apps)ன் மிகவும் இனிமையான தகவலோடு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்....!

சகோதரர் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த தமிழ் குர்ஆன் தர்ஜுமா அப்ளிகேஷன் மீண்டும் சில சிறப்பு அம்சங்களோடு தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது!

நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த திருக்குர்ஆன் அப்ளிகேஷனால் பலரும் பயன்பெற்று வருவதாக பல சகோதரர்களிடமிருந்து தகவல் கிடைத்தது, அல்ஹம்துலில்லாஹ்! மேலும், இந்த குர்ஆன் அப்ளிகேஷனில் தேடல் வசதி இணைக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பலர் நம்மிடம் தெரிவித்தனர். பல முயற்சிகளுக்கு மத்தியில், மக்கள் மனதில் நெருடிக் கொண்டிருந்த "தேடல்" வசதியும் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது நமது இந்த அப்ளிகேஷனில் இணைக்கப்பட்டு விட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். 

நாம் இந்த குர்ஆன் அப்ளிகேஷனில் தமிழோடு சேர்த்து அரபு மொழியையும் இணைத்தமைக்கு காரணமே, பலவகையான தர்ஜுமாக்களை ஒரே மொபைலில் பயன்படுத்தி சிரமப்பட வேண்டாம் என்பதற்காகத்தான். தேடல் வசதி நமது அப்ளிகேஷனில் இணைக்கப்படாமல் இருந்தமையால் நாம் வேறு தர்ஜுமாவையும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கலாம். இனி இந்த சுமையும் கவலையும் வேண்டாம். 
நமது ஒரே தர்ஜுமாவிலேயே நமக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெரும்பாலும் செய்து தரப்பட்டுவிட்டது. 

அதுமட்டுமல்லாமல் தற்போது வெளியிடப்பட்ட பதினான்காம் பதிப்பின் அடிப்படையில் அனைத்து குறிப்புக்களும் அப்டேட்டும் செய்யப்பட்டு விட்டது. ஆகவே இந்த புதிய பயனுள்ள வசதிகளை பெற உடனே Play Store சென்று உங்களின் பழைய வெர்சன் குர்ஆனை அப்டேட் செய்து கொள்ளுங்கள். அப்டேட் செய்ய தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு செய்து கொள்ளுங்கள். 
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு உதவுங்கள்! 

உடனே அப்டேட் செய்யுங்கள்! பயனடையுங்கள்! மக்களிடம் அதிகம் பரப்புங்கள்! 
இதற்காக முயற்சித்த, மேலும் ஒத்துழைத்த எனக்காகவும் என் குடும்பத்தாருக்காகவும் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!

குறிப்பு: தமிழில் தேடல் வசதி அமைக்கப்பட்டுள்ளதால், வார்த்தைகளை தேடுவதற்கு தமிழ் தட்டச்சு பலகை தேவை. ஆகவே, அனைவரும் தட்டச்சு செய்ய தனியாக ஏதாவதொரு தமிழ் டைப் ரைட்டிங் (Tamil Type Writing Keyboard) அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  

அன்புடன்,
உங்கள் முஹம்மது மஷாரிக்.
தொண்டி.

அப்ளிகேஷனுக்கான லிங்க்.,

Thursday, July 9, 2015

ரமழான் சொற்பொழிவு - 2015


தலைப்பு : நன்மைகளை அழித்தொழிக்கும் கொடிய பாவங்கள்!
உரை : முஹம்மது மஷாரிக் தொண்டி
இடம் : வேலூர் மாவட்ட தலைமையகம்







லைலத்துல் கத்ருடைய இரவில் ஓத வேண்டிய துஆ!


Sunday, July 5, 2015

ஆண்கள் மருதானி இடுவது மார்க்கதில் ஆகுமானதா?




ஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கைகளிலும் கால்களிலும் மருதாணி பூசிய ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் பெண்களுக்கு ஒப்ப நடந்ததால் அவரை நாடுகடத்துமாறு நபியவர்கள் உத்தரவிட்டதாகவும் இந்தச் செய்தி கூறுகின்றது. 

இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள அபூஹாஷிம் மற்றும் அபூ யசார் ஆகிய இரண்டு அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையும் அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை. இதன் காரணத்தால் இந்தச் செய்தி பலவீனமானதாகும். 

ஆண்கள் மருதாணி பூசலாம் என்றோ பூசக் கூடாது என்றோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் நேரடியாக்க் கூறப்படவில்லை. ஆனால் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வை பின்வரும் பொதுவான செய்தியிலிருந்து அறியலாம். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள் . 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (5885) 

ஆண்கள் பெண்களைப் போன்று நடந்து கொள்ளக் கூடாது என்று இந்தச் செய்தி கூறுகின்றது. பெண்கள் மட்டுமே பயன்படுத்துகின்ற பொருட்களை ஆண்கள் பயன்படுத்துவதை இச்செய்தி தடைசெய்கின்றது. பெண்கள் மட்டுமே பயன்படுத்துகின்ற பொருட்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒரு பகுதியில் பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்ற பொருள் மற்றொரு பகுதியில் ஆண் பெண் இருபாலருக்கும் உரிய பொருளாக இருக்கும்.   எனவே தான் மார்க்கம் இவ்விஷயத்தில் வரையறை செய்யாமல் அந்ததந்தப் பகுதி மக்களின் கலாச்சாரத்தைப் பொறுத்து முடிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. 

உதாரணமாக தலையில் பூ வைப்பது நமது நாட்டில் பெண்கள் மட்டும் செய்யும் காரியம். ஆண்கள் யாரும் இவ்வாறு செய்வதில்லை. இந்நிலையில் ஒரு ஆண் தலையில் பூ வைத்தால் மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் இது தவறான செயலாகிறது. இதே போன்று நடைமுறையில் உள்ள மக்கள் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து ஆண்கள் மருதாணி  பூசுவது குறித்தும் நாம் முடிவு செய்ய வேண்டும். மருதாணியைப் பொறுத்தவரை அது பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் அலங்காரப் பொருளாக இருந்து வருகின்றது. இப்பொருளை அதிகம் பயன்படுத்தக்கூடியவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் பெண்களே இதைக் கை கால்களில் பூசி பயன்படுத்தினர். 

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய்’ குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். -சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்- விடைபெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது சுபைஆ’ கர்ப்பமுற்றிருந்தார். சஅத் அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ  பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமான போது,  பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக்’ (ரலி) அவர்கள் சுபைஆ அவர்களிடம் வந்து, “திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய இத்தா’ காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது” என்று கூறினார்கள். சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகி விட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள். 
(புகாரி (3991) 

இந்தச் செய்தியில் சுபைஆ (ரலி) அவர்கள் அலங்காரம் செய்திருந்தார் என்று பொதுவாக்க் கூறப்பட்டுள்ளது. அவர்கள் எந்த அலங்காரம் செய்திருந்தார்கள் என்பதை அஹ்மதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. 26166, 26167 ஆகிய எண்களில் அஹ்மதில் பதிவாகியுள்ள அறிவிப்புகளில் சுபைஆ (ரலி) அவர்கள் கையில் மருதாணி பூசியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

எனவே பெண்களின் அலங்காரப் பொருளாக உள்ள மருதாணியை ஆண்கள் பூசக்கூடாது. அதே நேரத்தில் பித்த வெடிப்பு போன்ற காரணங்களுக்காக மருந்தாக அதைப் பூசிக் கொள்வதையும் நரை முடியின் நிறத்தை மாற்றிக் கொள்வதற்காக அதைப் பூசிக் கொள்வதையும் இது கட்டுப்படுத்தாது. ஏனெனில் இதில் பெண்களுக்கு ஒப்பாக நடக்கும் தன்மை ஏதும் இல்லை.

நன்றி ஆன்லைன்பிஜே.

ஜும்ஆத் தொழுகையை விட உரை சுருக்கமாக இருக்க வேண்டுமா?




தொழுகை   ஜும்ஆத் தொழுகையை விட ஜும்ஆ உரை சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர்களைப் பின்தொடர்ந்து தற்காலத்தில் உள்ள சிலரும் இக்கருத்தை கூறிவருகின்றனர். இதற்கு இவர்கள் கீழ்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொள்கின்றனர். 

1437 حَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبْجَرَ عَنْ أَبِيهِ عَنْ وَاصِلِ بْنِ حَيَّانَ قَالَ قَالَ أَبُو وَائِلٍ خَطَبَنَا عَمَّارٌ فَأَوْجَزَ وَأَبْلَغَ فَلَمَّا نَزَلَ قُلْنَا يَا أَبَا الْيَقْظَانِ لَقَدْ أَبْلَغْتَ وَأَوْجَزْتَ فَلَوْ كُنْتَ تَنَفَّسْتَ فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ وَقِصَرَ خُطْبَتِهِ مَئِنَّةٌ مِنْ فِقْهِهِ فَأَطِيلُوا الصَّلَاةَ وَاقْصُرُوا الْخُطْبَةَ وَإِنَّ مِنْ الْبَيَانِ سِحْرًا رواه مسلم 

எங்களுக்கு அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) சுருக்கமாகவும் செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிரிலிருந்து) இறங்கியபோது, “”அபுல் யக்ளானே!  செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே?” என்று நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள் “”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஒருவரின் தொழுகை நீளமாக இருப்பதும் உரை சுருக்கமாக இருப்பதும் அவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டுங்கள். உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். 
அறிவிப்பவர் : அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) நூல் : முஸ்லிம் (1578) 

இந்த சம்பவத்தில் தொழுகையை நீட்டுவதும் உரையைச் சுருக்குவதும் ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் என்பதே நபி (ஸல்) அவர்களின் கூற்றாகும். இதை மேலலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையை விட உரை சுருக்கமாக இருக்க வேண்டும் என்ற கருத்து சரி என்பது போல் தெரியலாம். ஆனால் இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் இந்த ஹதீஸ் இந்தக் கருத்தை தரவில்லை என்பதை சந்தேகமற அறியலாம். நபி (ஸல்) அவர்கள் நடத்திய ஜும்ஆவைப் பற்றி தெளிவாக விவரிக்கும் வகையில் ஹதீஸ்கள் உள்ளது. இவற்றை சிந்தித்துப் பார்த்தால்  அவர்கள் ஆற்றிய ஜும்ஆ உரை அவர்களின் ஜும்ஆத் தொழுகையை விட நீளமாக இருந்துள்ளதை அறியலாம். நபி (ஸல்) அவர்களின் ஜும்ஆ உரை. நபி (ஸல்) அவர்கள்  உரையை துவக்கும் போது குறிப்பிட்ட சில வாசகங்களை கூறுவது அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. இதை பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்’ என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “”நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்” என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், “”அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டரில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று கூறுவார்கள். 
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிரி) நூல் : முஸ்லிம் (1573) 

மேலும் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் கஃப் அத்தியாயம் முழுவதையும் ஓதியுள்ளார்கள். இந்த அத்தியாயம் 45 வசனங்களைக் கொண்டுள்ளது. 

1440و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُخْتٍ لِعَمْرَةَ قَالَتْ أَخَذْتُ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ مِنْ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ وَهُوَ يَقْرَأُ بِهَا عَلَى الْمِنْبَرِ فِي كُلِّ جُمُعَةٍ رواه مسلم  

நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிரிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள். 
அறிவிப்பவர் : அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரலி) அவர்களின் சகோதரி     நூல் : முஸ்லிம் (1580) 

நபி (ஸல்) அவர்கள் உரையில் வெறுமனே குர்ஆனை மட்டும் ஓதமாட்டார்கள். மாறாக குர்ஆன் வசனங்களை ஓதி அதில் உள்ள படிப்பினைகளை மக்களுக்கு விளக்குவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை நடுத்தரமாக அமைந்திருந்தது  அவர்களுடைய சொற்பொழிவும் நடுத்தரமாக அமைந்திருந்தது.  (அவர்களின் சொற்பொழிவில்) குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள்.  மக்களுக்கு அறிவுரை செய்வார்கள். 
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி) நூல் : அபூதாவுத் (928) 

இந்த ஹதீஸ்களை கவனிக்கும் போது நபி (ஸல்)  அவர்கள் குறைந்தது அரைமணி நேரமாவது ஜும்ஆ உரை ஆற்றிருப்பார்கள் என்பதை அறியலாம். 
இனி நபியவர்கள் நடத்திய ஜும்ஆத் தொழுகையின் அளவை அறிந்துகொள்வோம். 

நபி (ஸல்) அவர்களின் ஜும்ஆத் தொழுகை. 

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுகையில் அல்ஜும்ஆ அத்தியாயத்தையும் முனாஃபிகூன் அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள். மற்றொரு முறை அல்அஃலா அத்தியாயத்தையும் அல்ஃகாஷியா அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையில் “முதல் ரக்அத்தில் “அல்ஜுமுஆ’ அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் “இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன்’ அத்தியாயத்தையும் ஓதினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1591) 

அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆவிலும் “சப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா’ (87) மற்றும் “ஹல் அத்தாக்க ஹதீசுல் ஃகாஷியா’ (88) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள். 
அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலிரி) நூல் : முஸ்லிம் (1592) 

எனவே நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய உரையின் அளவையும் அவர்கள் நடத்திய தொழுகையின் அளவையும் ஒப்பிடுகையில் தொழுகையை விட உரை நீளமாக அமைந்திருப்பதை அறியலாம். ஜமாஅத் தொழுகையை நீட்டுவது கூடாது. மேலும் தொழுகையை நீட்டுவதும் உரையைச் சுருக்குவதும் ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் என்ற ஹதீஸில் கூறப்படும் தொழுகை என்பது ஜும்ஆத் தொழுகை உட்பட கூட்டாக நிறைவேற்றப்படும் கடமையான எந்தத் தொழுகையையும் குறிக்காது. மாறாக ஒரு மனிதர் தனியாகத் தொழுது கொள்ளும் உபரியான தொழுகையை குறிக்கின்றது. ஏனென்றால் ஜமாஅத் தொழுகையை நீட்டக்கூடாது என்றும் அதை சுருக்கமாகவே தொழவைக்க வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

706 حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوجِزُ الصَّلَاةَ وَيُكْمِلُهَا رواه البخاري 

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும் தொழுவிப்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள். நூல் : புகாரி (706) 

7159 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَاللَّهِ لَأَتَأَخَّرُ عَنْ صَلَاةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلَانٍ مِمَّا يُطِيلُ بِنَا فِيهَا قَالَ فَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطُّ أَشَدَّ غَضَبًا فِي مَوْعِظَةٍ مِنْهُ يَوْمَئِذٍ ثُمَّ قَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيُوجِزْ فَإِنَّ فِيهِمْ الْكَبِيرَ وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ رواه البخاري 

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்துவிடுகிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின் போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், “”மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், மக்களில் முதியோரும் பலவீனரும் அலுவல் உடையோரும் உள்ளனர்” என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) நூல் : புகாரி (7159) 

நபி (ஸல்) அவர்களின் ஜும்ஆத் தொழுகை நீட்டமாக இல்லாமல் நடுத்தரமான அளவில் இருந்துள்ளது. 

1433 حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَا حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ كُنْتُ أُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَتْ صَلَاتُهُ قَصْدًا وَخُطْبَتُهُ قَصْدًا رواه مسلم 

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுவந்தேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன. அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி) நூல் : முஸ்லிம் (1571) 

குறித்த ஹதீஸில் தொழுகையை நீட்டுமாறு கூறப்படுவதால் இது கூட்டாக நிறைவேற்றப்படும் ஜும்ஆத் தொழுகையை குறிக்காது. எனவே இதை வைத்து ஜும்ஆத் தொழுகை உரையை விட நீட்டமாக இருக்க வேண்டும் என்று வாதிட முடியாது. ஹதீஸின் சரியான விளக்கம். 

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஒருவரின் தொழுகை நீளமாக இருப்பதும் உரை சுருக்கமாக இருப்பதும் அவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டுங்கள். உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். 
அறிவிப்பவர் : அம்மார் பின் யாசிர் (ரலி) நூல் : முஸ்லிம் (1578) 

ஒருவர் தனியாகத் தொழும் தொழுகையை அவர் விருப்பம் போல் எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக்கொள்ளலாம். இவர் தொழுகையை எந்த அளவுக்கு நீட்டித் தொழுகின்றாரோ அந்த அளவுக்கு நன்மைகள் அதிகமாக கிடைக்கின்றது. தனியாகத் தொழும்போது தொழுகையை நீட்டுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே இதை மார்க்கம் ஆர்வமூட்டுகின்றது. உரையைப் பொறுத்தவரை அது தனி நபருடன் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. மாறாக உரையாற்றுபவர் உரையை கேட்பவர்கள் என பலர் இதில் சம்பந்தப்படுகின்றனர். எனவே மக்கள் சடைவடைந்து விடாத வகையில் உரை இருக்க வேண்டும். உரையாற்றுபவர் அரை மணி நேரத்தில் கூற வேண்டிய விஷயத்துக்கு அரை மணி நேரம் எடுத்துக்கொண்டால் அதில் தவறில்லை. ஆனால் பத்து நிமிடத்தில் பேச வேண்டிய விஷயத்துக்கு அரை மணி நேரம் எடுத்தால் இதில் தான் நேரம் வீணாகின்றது. மக்களுக்கும் சடைவு ஏற்படுகின்றது. ஆகையால் ஒரு கருத்தை அதற்குரிய நேரத்திற்குள் முழுமையாக கூறிவிட்டால் அவர் சுருக்கமாக கூறியவராவார். அறிவாளிகளே இவ்வாறு கூறுவார்கள். ஒரு சிறிய விஷயத்துக்காக அதிக நேரம் எடுத்து வலவலவென நீட்டுவது அறிவுடையவர்களின் செயல் அல்ல. எனவே உரையை சுருக்குவதென்றால் தேவையில்லாமல் நீட்டக்கூடாது என்றும் தொழுகையை நீட்டுவதென்றால் தனியே தொழும் போது நீட்டிக்கொள்ளலாம் என்றும் புரிந்துகொள்வதே சரியானது. 
நன்றி : (SLTJ) அழைப்பு பத்திரிகை.

Sunday, June 14, 2015

அமைதி மார்க்கம் இஸ்லாம்!

இஷாவிற்கு பின் நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்ச்சி!

இடம்: மஸ்ஜிதுல் முபீன் தவ்ஹீத் பள்ளிவாசல்,
தொண்டி.

உரை: முஹம்மது மஷாரிக்.

https://www.youtube.com/watch?v=BvXY6XEY4Bg

Friday, June 12, 2015

திருக்குர்ஆன் அப்ளிகேஷன் - ஆங்கில பதிப்பு!





அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரகாத்துஹு!

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

ரமலான் மாதத்தை அடையவிருக்கும் இந்த இனிய தருணத்தில், மீண்டும் ஒரு புதிய இஸ்லாமிய அப்ளிகேஷனை எம் சொந்தங்களுக்காக வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.


நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த சகோ பி.ஜெயினுல் ஆபிதீன் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் 
சில சகோதரர்களால் ஆங்கிலத்தில் அழகிய வடிவில் மொழிப்பெயர்க்கப் பட்டுள்ளடு. அந்த ஆங்கிலப் பதிப்பைத்தான் தற்போது நாம் அப்ளிகேஷனாக வெளியிட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!


நாம் இந்த மொழிப்பெயர்ப்பை அதிகம் உபயோகிக்க காரணம் இதில் தரப்பட்டிருக்கும் குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வின் அடிப்படையிலான அழகிய விளக்கங்கள், மாற்றுமத நண்பர்களின் இஸ்லாம் குறித்த தேடல்களை மிக எளிமையாக விளக்கும் விளக்க உரைகள், மக்கள் விளங்கிக் கொள்ளத்தக்க எளிய தமிழ்நடையில் இந்த மொழிப்பெயர்ப்பு அமைந்திருத்தல் போன்றவைதான்!

இதே சிறப்பு அம்சங்களோடு ஆங்கில மொழிப்பெயர்ப்பும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தமிழாக்கம் தமிழ் உலகில் எப்படி மிகவும் பயனுள்ளதாகவும், இறைவனின் உதவியால் பலர் இஸ்லாத்தை ஏற்க உதவியாகவும் இருந்து வருகிறதோ,

இதே சூழல்கள் அல்லாஹ்வின் உதவியோடு உலகம் முழுவதும் ஏற்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அந்த நோக்கத்தின் விளைவாக உலகில் பேசப்படும் பொதுமொழி ஆங்கிலத்தில் இந்த அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்படுகிறது.


இவை எமது நோக்கம் மட்டுமல்ல, ஒவ்வொரு சிறந்த முஸ்லிமுடைய நோக்கமும் இவையாகத்தான் இருக்கும். நோக்கம் நிறைவடைய அல்லாஹ் உதவி செய்திருக்கிறான். இப்போது நீங்கள் செய்ய வேண்டிய உதவி என்னவென்றால், ஆங்கிலம் தெரியாவிட்டாலும் இந்த அப்ளிகேஷனை அனைவரும் பதிவிறக்கம் செய்யுங்கள்.

நான் முன்பே தெரியப்படுத்தியது போல, பிளே ஸ்டோரின் தேடல் பட்டியில் இந்த குர்ஆன் இடம்பிடிக்க வேண்டுமானால் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரமலான் மாதத்தை அடைவதற்கு முன்னால் இயன்றளவு இந்த செய்தியை மக்களுக்கு பரப்பி பதிவிறக்கம் செய்ய சொல்லுங்கள்.

காரணம், ரமலான் மாதத்தில் கண்டிப்பாக உலகம் முழுவதிலும் இஸ்லாமியர்களால் அதிகம் வாசிக்கப்படும் ஒன்று இருக்கிறதென்றால் அது திருமறை தான். ஆகவே கூகுள் பிளேயில் குர்ஆனை தேட உலக நாடுகளில் வாழும் பல இஸ்லாமியர்கள் வருவார்கள். அவர்கள் பார்வையில் சகோ. பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த இந்த குர்ஆன் தென்பட வேண்டும். அவர்களும் இதன் மூலம் உண்மையை விளங்கி பயனடைய வேண்டும்! மொத்தத்தில் உலகில் வாழும் எல்லா மக்களிடமும் இது சென்றடைய வேண்டும். இந்த நோக்கம் நிறைவேற தமிழ் மக்கள் ஒருமுறையாவது இந்த குர்ஆனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

தேடலில் வந்துவிட்டால், இன்ஷா அல்லாஹ் நமது இலட்சியத்தை நாம் அடைந்து விடுவோம். அல்லாஹ் நாடினால் நாளை நாம் பார்த்திராத எத்தனையோ நபர்கள் இதன் மூலம் நேர்வழி பெறலாம், அதற்காக அல்லாஹ் மறுமையில் உங்களுக்கும் அளப்பரிய கூலி வழங்கலாம்.

அதிகம் பரப்புங்கள! பதிவிறக்கம் செய்யுங்கள்!

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.
தொண்டி.


அப்ளிகேஷனுக்கான லிங்க்,

Sunday, May 17, 2015

மொத்த நபிமார்கள் எத்தனை?‎




உலகம் படைக்கப்பட்டது முதல்  நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வரை அனுப்ப்ப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு ‎லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் ‎சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் ‎உள்ளதா?‎
ஏ.சுலைமான், விருத்தாசலம்.‎
பதில்:‎
நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத், ‎தப்ரானி ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.‎
இது பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ‎அலீ பின் யஸீத் அல் ஹானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் ‎பலவீனமானவராவார்.‎
இது போல் மற்றொரு ஹதீஸ் இப்னு ஹிப்பான் நூலில் பதிவு ‎செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.‎
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் ஹிஷாம் ‎அல்கஸ்ஸானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் ‎என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இதுவும் பலவீனமான ‎ஹதீஸாகும்.‎
அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அனுப்பியுள்ளான். ‎அவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படவில்லை என்பதே ‎சரியான நம்பிக்கையாகும்.‎
இந்த எண்ணிக்கையை விட அதிகமான நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் அவர்களை நாம் மறுத்த குற்றம் ‎ஏற்படும்.‎
அதை விட குறைவான எண்ணிக்கையில் நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் நபியல்லாதவர்களை நபி என்று நம்பிய ‎குற்றம் ஏற்படும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Source: www.onlinepj.com

Thursday, May 14, 2015

இறைவன் அனுமதித்த முறையில் பொருளீட்டுவோம்!


முக்கிய அறிவிப்பு - அவசரம் காட்டவும்!




அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வ பரகாத்துஹு...!

அல்லாஹ்வின் அருளால் இஸ்லாம் சார்ந்த பல பயனுள்ள ஆண்ட்ராய்டு மென்பொருட்களை நாம் தயாரித்து வெளியிட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். மென்மேலும் இதுபோன்ற மென்பொருட்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நாங்கள் எங்களது கம்பெனியின் லோகோவாக ஓர் இறைவனை உணர்த்தும் ஏகத்துவ முத்திரையாக ஒரு விரலை வைத்திருந்தோம். நீங்கள் எனது எந்த மென்பொருளை திறந்தாலும் அதுதான் முதலாவதாக வரும்.

இந்த விரல் முத்திரை தற்போதைய சூழலில் சில தீவிரவாத அமைப்பினராலும் பயன்படுத்த படுவதால், இது அவர்களது இயக்கத்தின் முத்திரை என்பதை போன்றும், யாரெல்லாம் அதை பயன்படுத்துகிறார்களோ அவர்களும் அந்த தீவிரவாத அமைப்பை ஆதரிக்கின்றனர் என்பதை போன்றும் கருத்து தற்போது தமிழகத்தில் நிலவ ஆரம்பித்துள்ளது. 

முதலில் ஒன்றை பதிய வைத்து கொள்கிறேன். நான் ஒரு முஸ்லிம், அதிலும் தமிழகத்தின் சமூக பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒரு உறுப்பினரும் கூட. 
எனது ஜமாஅத் கடந்த பல வருடங்களாக இஸ்லாமியர்களுக்கும் பிற மத சகோதரர்களுக்கும் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்த எந்த அளவிற்கு உழைத்திருக்கிறது என்பதை அனைத்து மீடிக்களும், உளவுத்துறையினரும் அறிந்துதான் வைத்துள்ளனர்.
அந்த அமைப்பை சார்ந்த நான், தீவிரவாதத்திற்கு எதிரானவன்...
தீவிரவாத அமைப்பினர் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பதில் நானும் முதலாமவன்.
எந்த தீவிரவாத அமைப்பிற்கும் நான் ஆதரவாளன் அல்ல!

அப்படி சிந்தனையை தூண்டும் வகையில் சில அயோக்கியர்கள் விரல் முத்திரையை பயன்படுத்தியதால், அந்த கயவர்களை எங்களோடு தொடர்பு படுத்தி பேசிவிடக்கூடாது (விரல் முத்திரை இஸ்லாத்தின் அடையாளமல்ல) என்பதற்காக எங்களது கம்பெனியின் லோகோ இன்றோடு மாற்றப்பட்டுவிட்டது!

#குறிப்பு:
இந்த இஸ்லாமிய மென்பொருட்கள் தடைபடாமல் உங்களை வந்தடைய வேண்டுமென்றால், இதன்மூலம் எங்களுக்கு எதுவும் பாதிப்புகள் வராமல் இருக்க வேண்டுமென்றால், இந்த தகவலை அதிகம் அதிகம் அனைத்து மக்களுக்கும் பரப்புங்கள்! 

உடனே நாங்கள் வெளியிட்ட அனைத்து மென்பொருட்களையும் அப்டேட் செய்து கொள்ளுங்கள்! அப்படி செய்தால் மட்டும் தான் அனைவரது மொபைலிலும் லோகோ மாற்றப்படும்!

தளத்திற்கு செல்லும் லிங்க்,
https://play.google.com/store/apps/developer?id=Masarik%20Apps&hl=en

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.

Monday, April 27, 2015

பேரழிவுகள் கற்றுத்தரும் பாடம்!

بسم اللة الرحمن الرحيم


                         

நாம் வாழக்கூடிய இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சியும் முன்னேற்றங்களும் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது. இது போன்ற வளர்ச்சியினை அடைந்து கொண்ட விஞ்ஞானிகளும், அவர்களின் அறிவை பயன்படுத்தி ஆதாயம் அடையும் சில நாடுகளும் இதைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்ற கற்பனை மோகத்தில் காலம் கடத்தி வருகின்றனர்.

இந்த அறிவியல் வளர்ச்சியின் ஒரு பகுதிதான், அப்பாவி மக்களை பயங்கர ஆயுதங்களை கொண்டு அழித்தொழித்து நாட்டை அபகரிக்க கூடிய கொடூர செயல் ஆகும். இது போன்ற செயல்களின் மூலம் இவர்கள் உணர்த்த வருவது, நம்மை மிஞ்ச எவனுமில்லை என்பதைத்தான்!

ஆனால் இந்த கருத்து வெறும் பகல் கனவு தானே தவிர உண்மை கிடையாது. இதைத் தான் அவ்வபோது நடைபெறும் இயற்கை பேரழிவுகள் நமக்கு உணர்த்துகிறது!

அறிவியல் வளர்ச்சியால் எதையும் சாதிக்க இயலும் என்ற மமதையில் திரியும் நபர்கள் சிந்திக்க வேண்டும். இறைவன் இந்த உலகத்தை படைத்ததிலிருந்து இன்றைய காலம் வரைக்கும் பல சமூகங்களை அல்லது பல ஊர்களை அழித்துள்ளான். அவற்றை அழிக்க அல்லாஹ் பயன்படுத்திய ஆயுதங்களை திருமறை நமக்கு விளக்குகிறது, காற்று, சூடேற்றப்பட்ட கல், பெரும் சப்தம், கடல் சீற்றம், நில அதிர்வுகள் ect., போன்றவற்றால் தான் இறைவன் அழிவை ஏற்படுத்துவதாக திருமறை கூறுகிறது!

ஒரு நாடு இன்னொரு நாட்டால் சந்திக்கும் அழிவுகளை எதிர்கொள்ள இராணுவப்படை, கடற்படை, காலாட்படை என்று பல படைகளும் உள்ளது. அந்த அத்துனை படைகளும் தம்மை அழிக்க வருபவர்களை எதிர்க்கவும் செய்கிறது.

ஆனால், இது போன்ற வீர மிக்க படைகள் இறைவனால் அனுப்பப்படும் இயற்கை சீற்றங்களை கண்டால் எதிர்த்து நிற்கிறதா??? அல்லது ஓட்டமெடுக்கிறதா???

எவ்வளவு சிறந்த உயர்ந்த விஞ்ஞானப் படைப்பாக இருந்தாலும் அவை இறைவனது ஆற்றல்களுக்கு முன்னால் மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும். இறைவன் இந்த உலகில் ஏற்படுத்தும் அழிவுகளின் அழிக்கும் முறை என்பது ஒன்று தான்! அவற்றில் அவன் இன்று வரை மாறுபடவில்லை. மனித அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப அழிக்கும் செயற்பாடுகளை அவன் மாற்றவுமில்லை. புதிய நவீன கருவிகளால் அழிவை அவன் ஏற்படுத்தவுமில்லை. என்றாலும், அறிவிலும் நவீன கண்டுபிடிப்புக்களிலும் அதீத வளர்ச்சி அடைத்திருக்கும் மனிதர்களுக்கு அதை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. இறைவனின் ஆற்றல் எதனின் ஆற்றலை விடவும் மிகப்பெரியது என்பதைத் தான் இது போன்ற பேரழிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

நவீன கண்டுபிடிப்புகளின் உச்சாணி கோபுரத்தில் இருக்கும் நாடுகள் என்றால் அவற்றில் தவறாமல் ஜப்பான் அமேரிக்காவை நாம் இணைத்து விடுவோம். அந்த ஜப்பானில் சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட சுனாமி என்ற பேரழிவை ஜப்பான் நாட்டின் அரசாங்கத்தாலோ அறிவியல் வளர்ச்சியாலோ அல்லது இராணுவ படையாலோ தடுத்து நிறுத்த முடிந்ததா?

அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட புழுதிப்புயலை அமேரிக்கா அரசால் தடுக்க இயன்றதா?

இது போன்று ஏராளம் கூறலாம், இருப்பினும் இவைகள் அனைத்தும் நமக்கு உணர்த்தக் கூடியது ஒன்றைத்தான்! நமக்கு மிஞ்சிய மிகப்பெரிய சக்தி ஒன்று உள்ளது. அவற்றை எதிர்க்க எவராலும் இயலாது. அதுதான் வல்ல இறைவனின் ஆற்றல். அந்த இறைவனை நாம் அஞ்சி நடக்க வேண்டும். அதற்காக தான் அல்லாஹ் தவறுகள் மிகைக்கும் இடங்களில் அவ்வபோது இதுபோன்ற சில பேரழிவுகளை ஏற்படுத்துகிறான். இறைவனை மறந்து வாழும் மக்கள், இந்த அழிவிலிருந்து தப்பித்திருந்தால் அது உங்களது அறிவாலோ ஆற்றலாலோ கிடையாது. மாறாக அல்லாஹ் உங்களுக்கு இவைகளைக் காண்பித்து எச்சரிக்கை செய்கிறான், நீங்கள் திருந்த வேண்டும் என்பதற்காக மீண்டுமொரு வாய்ப்பளித்துள்ளான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!

மேலும், இதுபோன்ற அழிவுகளில் சில நல்ல மனிதர்களும் சேர்த்து அழிக்கப்படுகிறார்கள், இதற்கு என்ன காரணம் என்று பலரும் சிந்திக்க வாய்ப்புள்ளது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ஒரு நபிமொழி புகாரியில் இடம் பெறுகிறது.

"ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!" என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!" என்றார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ,புகாரி 2118. 

இந்த நபிமொழியின் அடிப்படையில் அழிவுகளில் சிக்கும் நல்ல மனிதர்கள் மறுமையில் அவர்களது எண்ணத்திற்கேற்ப கூலி கொடுக்கப்பட்டு விடுவார்கள். மரணம் என்பது எந்நிலையில் வேண்டுமானாலும் நம்மை அணுகலாம், நல்லவர்களுக்கு அது ஒரு பாதிப்பு கிடையாது. அதில் ஒரு வகைதான் இது என்பதை விளங்கிக் கொண்டால் தெளிவு கிடைத்துவிடும்.

"வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களை புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா?"
திருக்குர்ஆன் 67:16.

"அவனே சிரிக்க வைக்கிறான். அவனே அழவும் வைக்கிறான்"
திருக்குர்ஆன் 53:43.

தர்பிய்யா-கீழக்கரை தெற்கு



இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக நடைபெற்ற தர்பிய்யா நிகழ்ச்சி!

இணை வைத்தல்!


இணை கற்பிப்போருக்கு இறைவன் கூறும் உதாரணம்!



தொழுகையிலும் பயான்களிலும் பெண்களுக்கு திரையிடுவது அவசியமா?


கேள்வி : எங்கள் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் ஜும்ஆ நடைபெறுகிறது. இதில் பெண்களும் கலந்து கொள்கின்றனர். இதனால் பள்ளியில் திரை போட வேண்டும் என்று சிலரும் திரை போடக்கூடாது என்று சிலரும் கூறுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.


பதில் : முஃமின்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் திரும்பிவிடவேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் நம்முடைய மனோஇச்சைகளைப் புறம் தள்ளி விட்டு அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப் படுவதே இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமையாகும்.

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا  (الأحزاب 33 : 36(

அல்லாஹ்வும்அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும்,பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார் (அல்குர்ஆன் 33 : 36)

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (51) وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ (52) (النور)

அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும்அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ''செவியுற்றோம்கட்டுப்பட்டோம்''என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு,அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24 : 52)

மேற்கண்ட இறைக்கட்டளைகளை நம்முடைய மனதில் பதிய வைத்துக் கொண்டு மேற்கண்ட கருத்து வேறுபாட்டிற்கான மார்க்கத்தீர்ப்பைக் காண்போம்.

நாம் நம்முடைய முன்மாதிரியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு பயான் செய்யும் போதும் தொழுகையிலும் கண்டிப்பாக திரையிட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் நபியவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருக்க வேண்டும். அல்லது நடைமுறையில் செய்து காட்டியிருக்க வேண்டும்.
ஆனால் பெண்களுக்கு உரையாற்றும் போதும்,தொழுகையின் போதும் திரையிடவேண்டும் என்று நபியவர்கள் கட்டளைபிறப்பிக்கவில்லை. இன்னும் தம்முடைய வாழ்நாளில் செய்து காட்டவுமில்லை. இதற்கு மாற்றமாக நபியவர்கள் திரையின்றியே பெண்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்கள். தொழுகை நடத்தியுள்ளார்கள். இதனை பின்வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஹதீஸ் : 1
978 حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ نَصْرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ سَمِعْتُهُ يَقُولُ قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفِطْرِ فَصَلَّى فَبَدَأَ بِالصَّلَاةِ ثُمَّ خَطَبَ فَلَمَّا فَرَغَ نَزَلَ فَأَتَى النِّسَاءَ فَذَكَّرَهُنَّ وَهُوَ يَتَوَكَّأُ عَلَى يَدِ بِلَالٍ وَبِلَالٌ بَاسِطٌ ثَوْبَهُ يُلْقِي فِيهِ النِّسَاءُ الصَّدَقَةَ قُلْتُ لِعَطَاءٍ زَكَاةَ يَوْمِ الْفِطْرِ قَالَ لَا وَلَكِنْ صَدَقَةً يَتَصَدَّقْنَ حِينَئِذٍ تُلْقِي فَتَخَهَا وَيُلْقِينَ قُلْتُ أَتُرَى حَقًّا عَلَى الْإِمَامِ ذَلِكَ وَيُذَكِّرُهُنَّ قَالَ إِنَّهُ لَحَقٌّ عَلَيْهِمْ وَمَا لَهُمْ لَا يَفْعَلُونَهُ  رواه البخاري

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்  : நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று எழுந்து தொழுதார்கள். (பெருநாள்) தொழுகையை முதலில் நடத்திவிட்டுத் தான் உரை நிகழ்த்தினார்கள். உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்குச் சென்று (தம்முடனிருந்த) பிலால் (ரலி) அவர்களின் கைமீது சாய்ந்தபடி பெண்களுக்கு உபதேசம் புரிந்தார்கள். பிலால் (ரலி) அவர்களே தமது ஆடையை ஏந்திக்கொண்டிருக்க பெண்கள் (தத்தமது) தர்மத்தை அதில் இட்டுக்கொண்டிருந்தனர்.
 ( நூல : புகாரி 978 )

و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ عَبْدِ الرَّزَّاقِ قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ شَهِدْتُ صَلَاةَ الْفِطْرِ مَعَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ فَكُلُّهُمْ يُصَلِّيهَا قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ يَخْطُبُ قَالَ فَنَزَلَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ حِينَ يُجَلِّسُ الرِّجَالَ بِيَدِهِ ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ حَتَّى جَاءَ النِّسَاءَ وَمَعَهُ بِلَالٌ فَقَالَ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا فَتَلَا هَذِهِ الْآيَةَ حَتَّى فَرَغَ مِنْهَا ثُمَّ قَالَ حِينَ فَرَغَ مِنْهَا أَنْتُنَّ عَلَى ذَلِكِ فَقَالَتْ امْرَأَةٌ وَاحِدَةٌ لَمْ يُجِبْهُ غَيْرُهَا مِنْهُنَّ نَعَمْ يَا نَبِيَّ اللَّهِ لَا يُدْرَى حِينَئِذٍ مَنْ هِيَ قَالَ فَتَصَدَّقْنَ فَبَسَطَ بِلَالٌ ثَوْبَهُ ثُمَّ قَالَ هَلُمَّ فِدًى لَكُنَّ أَبِي وَأُمِّي فَجَعَلْنَ يُلْقِينَ الْفَتَخَ وَالْخَوَاتِمَ فِي ثَوْبِ بِلَالٍ  رواه مسلم

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிரி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்;பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலிரி) அவர்கள்மீது சாய்ந்துகொண்டுஇறையச்சத்தைக் கடைப் பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வரியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டுபெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மர்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும்பெண்களை நோக்கி, ''தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்'' என்று கூறினார்கள்.
அப்போது பெண்கள் நடுவிரிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து ''அது ஏன்அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்'' என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள்மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலிரி)  அவர்களின் ஆடையில் போட்டனர்.               நூல் : முஸ்லிம் (1607)

நபியவர்கள் பெண்கள் பகுதிக்குச் சென்று எவ்விதத் திரையுமில்லாமல் பெண்களுக்கு உரைநிகழ்த்தியுள்ளார்கள். நபியவர்களுடன் பிலால் (ரலி)அவர்களும் இருந்துள்ளார்கள். மேலும் கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து கேள்விகேட்டார் என்று வந்துள்ளது. திரையிட்டிருந்தால் இவ்வாறு கூறுவதற்கு இயலாது. மேலும் பெண்கள் பிலால் (ரலிஅவர்கள் ஏந்திய துணியிலே தர்மங்களைப் போட்டுள்ளார்கள். திரையில்லாமல் இருந்தால்தான் இது சாத்தியமாகும். எனவே பெண்களுக்கு உரை நிகழ்த்தும் போது திரையில்லாமல் உரை நிகழ்த்தலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

ஹதீஸ் : 2
7310 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَصْبَهَانِيِّ عَنْ أَبِي صَالِحٍ ذَكْوَانَ عَنْ أَبِي سَعِيدٍ جَاءَتْ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ يَوْمًا نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ فَقَالَ اجْتَمِعْنَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي مَكَانِ كَذَا وَكَذَا فَاجْتَمَعْنَ فَأَتَاهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَّمَهُنَّ مِمَّا عَلَّمَهُ اللَّهُ ثُمَّ قَالَ مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ بَيْنَ يَدَيْهَا مِنْ وَلَدِهَا ثَلَاثَةً إِلَّا كَانَ لَهَا حِجَابًا مِنْ النَّارِ فَقَالَتْ امْرَأَةٌ مِنْهُنَّ يَا رَسُولَ اللَّهِ أَوْ اثْنَيْنِ قَالَ فَأَعَادَتْهَا مَرَّتَيْنِ ثُمَّ قَالَ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ  رواه البخاري

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர். ஆகவேநாங்கள் தங்களிடம் வந்துஅல்லாஹ் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ''இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்றுகூடுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்றுஅல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, ''உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாகதன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்துவிடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்''என்று சொன்னார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், ''அல்லாஹ்வின் தூதரே! இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா?'' என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, ''ஆம்;இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள் (நூல் : புகாரி 7310)

நபியவர்கள் பெண்களுக்கு என்று பிரத்யோகமாக நாள் நேரத்தை நிர்ணயித்து உரையாற்றியுள்ளார்கள். பெண்களும் நபியவர்களிடம் நேரடியாகக் கேள்விகளைக் கேட்டுள்ளார்கள் . இதிலிருந்தே அங்கு எவ்வித திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபியவர்கள் காலத்தில் ஐந்து வேளையும் பெண்கள் பள்ளி வந்து ஜமாஅத்துடன் தொழுபவர்களாக இருந்துள்ளனர். ஆனால் நபியவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எத்தகைய தடுப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரை ஏற்படுத்த வேண்டுமானால் தொழுகையில் ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் நபியவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இதிலிருந்தும் திரை அவசியமில்ûலை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதற்கான சான்றுகளைக் காண்போம்.

ஹதீஸ் : 3
362 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِي أُزْرِهِمْ عَلَى أَعْنَاقِهِمْ كَهَيْئَةِ الصِّبْيَانِ وَيُقَالُ لِلنِّسَاءِ لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا  رواه البخاري

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : சில ஆண்கள்  சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம், ''ஆண்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள்என்று சொன்னார்கள்.  (நூல் : புகாரி 362)

பெண்களின் பார்வை ஆண்களின் மறைவிடங்களைப் பார்த்துவிடக் கூடாது என்ற காரணத்தினால்தான் நபியவர்கள் பெண்களை தாமதமாக சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்துமாறு கூறுகிறார்கள். இதிலிருந்தே ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்வித திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நான் விளங்கிக் கொள்ள முடியும்.

ஹதீஸ் : 4
4302  حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ قَالَ قَالَ لِي أَبُو قِلَابَةَ أَلَا تَلْقَاهُ فَتَسْأَلَهُ قَالَ فَلَقِيتُهُ فَسَأَلْتُهُ فَقَالَ كُنَّا بِمَاءٍ مَمَرَّ النَّاسِ وَكَانَ يَمُرُّ بِنَا الرُّكْبَانُ فَنَسْأَلُهُمْ مَا لِلنَّاسِ مَا لِلنَّاسِ مَا هَذَا الرَّجُلُ فَيَقُولُونَ يَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَهُ أَوْحَى إِلَيْهِ أَوْ أَوْحَى اللَّهُ بِكَذَا فَكُنْتُ أَحْفَظُ ذَلِكَ الْكَلَامَ وَكَأَنَّمَا يُقَرُّ فِي صَدْرِي وَكَانَتْ الْعَرَبُ تَلَوَّمُ بِإِسْلَامِهِمْ الْفَتْحَ فَيَقُولُونَ اتْرُكُوهُ وَقَوْمَهُ فَإِنَّهُ إِنْ ظَهَرَ عَلَيْهِمْ فَهُوَ نَبِيٌّ صَادِقٌ فَلَمَّا كَانَتْ وَقْعَةُ أَهْلِ الْفَتْحِ بَادَرَ كُلُّ قَوْمٍ بِإِسْلَامِهِمْ وَبَدَرَ أَبِي قَوْمِي بِإِسْلَامِهِمْ فَلَمَّا قَدِمَ قَالَ جِئْتُكُمْ وَاللَّهِ مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقًّا فَقَالَ صَلُّوا صَلَاةَ كَذَا فِي حِينِ كَذَا وَصَلُّوا صَلَاةَ كَذَا فِي حِينِ كَذَا فَإِذَا حَضَرَتْ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا فَنَظَرُوا فَلَمْ يَكُنْ أَحَدٌ أَكْثَرَ قُرْآنًا مِنِّي لِمَا كُنْتُ أَتَلَقَّى مِنْ الرُّكْبَانِ فَقَدَّمُونِي بَيْنَ أَيْدِيهِمْ وَأَنَا ابْنُ سِتٍّ أَوْ سَبْعِ سِنِينَ وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ كُنْتُ إِذَا سَجَدْتُ تَقَلَّصَتْ عَنِّي فَقَالَتْ امْرَأَةٌ مِنْ الْحَيِّ أَلَا تُغَطُّوا عَنَّا اسْتَ قَارِئِكُمْ فَاشْتَزَوْا فَقَطَعُوا لِي قَمِيصًا فَمَا فَرِحْتُ بِشَيْءٍ فَرَحِي بِذَلِكَ الْقَمِيصِ  رواه البخاري

அம்ர் பின் சலிமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ; .மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து  இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, ''அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், 'இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்'என்று சொன்னார்கள்'' எனக் கூறினார்கள். ஆகவே,மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே,  (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவேஅந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ''உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?''என்று கேட்டார். ஆகவேஅவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.  (நூல் : புகாரி 4302 )

இமாமின் ஆடை கிழிந்திருந்தை ஒரு பெண்மணி சுட்டிக்காட்டுகிறார் என்றால் அங்கு எவ்விதத் திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். திரை இருந்திருந்தால் இமாமின் ஆடை கிழிந்திருந்ததை அப்பெண்மனி பார்த்திருக்க முடியாது.

ஹதீஸ் : 5
664  حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا وَشَرُّهَا آخِرُهَا وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا وَشَرُّهَا أَوَّلُهَا حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ عَنْ سُهَيْلٍ بِهَذَا الْإِسْنَادِ   رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (749)

ஆண்களும் பெண்களும் சேர்ந்து தொழும் போது ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் நிற்பார்கள். இறுதி வரிசையில் நிற்கின்ற ஆண்களின் பார்வை தமக்குப் பின்னால் நிற்கின்ற பெண்களின் மீது படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாகத்தான் நபியவர்கள் ஆண்கள் வரிசையில் மிக மோசமானது இறுதி வரிசை என்று கூறுகிறார்கள். அல்லது முதல் வரிசையில் நிற்கின்ற பெண்கள் தமக்கு முன்னால் நிற்கின்ற ஆண்களின் மீது பார்வை செலுத்தும் நிலை ஏற்படலாம் . இதன் காரணமாகத்தான் நபியவர்கள் பெண்களின் வரிசையில் கெட்டது முதல் வரிசை என்று கூறுகிறார்கள்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிருந்தால் இவ்வாறு நபியவர்கள் கூறியிருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் நபியவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறவுமில்லை. அவரவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அறிவுரைதான் கூறுகின்றார்கள்.

ஹதீஸ் : 6
372 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ أَنَّ عَائِشَةَ قَالَتْ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْفَجْرَ فَيَشْهَدُ مَعَهُ نِسَاءٌ مِنْ الْمُؤْمِنَاتِ مُتَلَفِّعَاتٍ فِي مُرُوطِهِنَّ ثُمَّ يَرْجِعْنَ إِلَى بُيُوتِهِنَّ مَا يَعْرِفُهُنَّ أَحَدٌ  رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள் அப்போது இறைநம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களது ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) கலந்துகொள்வார்கள். பின்னர் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வார்கள். அவர்களை (யார் யார் என்று) எவரும் அறியமாட்டார்கள்.  (நூல் : புகாரி 372)

ஹதீஸ் : 7
864 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَتَمَةِ حَتَّى نَادَاهُ عُمَرُ نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا يَنْتَظِرُهَا أَحَدٌ غَيْرُكُمْ مِنْ أَهْلِ الْأَرْضِ وَلَا يُصَلَّى يَوْمَئِذٍ إِلَّا بِالْمَدِينَةِ وَكَانُوا يُصَلُّونَ الْعَتَمَةَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ الْأَوَّلِ  رواه  البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் நபியவர்களை அழைத்து, 'பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, ''பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை'' என்று கூறினார்கள். அன்றைய நாளில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாத் தொழுகையை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் முதலாவது மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுதுவந்தனர்  (நூல் : புகாரி 864)

பள்ளிவாசலில் பெண்கள் தூங்கிவிட்டார்கள் என்பதை உமர் (ரலிஅவர்கள் நபிக்கு கூறுகின்றார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிருந்தால் நிச்சயமாக உமர் (ரலிஅவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியாது.

ஹதீஸ் : 8
875 حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ هِنْدٍ بِنْتِ الْحَارِثِ عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ قَامَ النِّسَاءُ حِينَ يَقْضِي تَسْلِيمَهُ وَيَمْكُثُ هُوَ فِي مَقَامِهِ يَسِيرًا قَبْلَ أَنْ يَقُومَ قَالَ نَرَى وَاللَّهُ أَعْلَمُ أَنَّ ذَلِكَ كَانَ لِكَيْ يَنْصَرِفَ النِّسَاءُ قَبْلَ أَنْ يُدْرِكَهُنَّ أَحَدٌ مِنْ الرِّجَالِ  رواه البخاري

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்றுநேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றிருப்பார்கள்
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: 'அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)துஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன்பெண்கள் திரும்பிச் செல்லட்டும் என்பதற் காகத்தான்என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கு அறிந்தவன்.  (நூல் : புகாரி 870 )

மேற்கண்ட ஹதீஸிலிருந்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்விதத் தடுப்பும் இருந்திக்கவில்லை என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

ஹதீஸ் : 9
874 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِ أُمِّ سُلَيْمٍ فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا  رواه البخاري

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் (உபரித் தொழுகை) தொழு(வித்)தார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்மு சுலைம் அவர்கள் எங்களுக் குப் பின்னால் நின்றார்கள்.  ( நூல் : புகாரி 871 )

உம்மு சுலைம் (ரலிஅவர்கள் நபியவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதுள்ளார்கள். ஆனால் நபியவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் எவ்விதத் திரையும் இருக்கவில்லை.
மேலும் தொழுகையில் இமாம் தவறு செய்து விட்டால் அதை உணர்த்தும் கடமை ஆண்களுக்கு உள்ளது போல் பெண்களுக்கும் இருக்கின்றது. திரையிட்டு விட்டால் அது ஒரு போதும் சாத்தியமாகாது.

மேலும் பொதுவாக வீதிகளில் நடந்து செல்லும் போதும்,காய்கறிக் கடைகளிலும் இன்னும் பல்வேறு நிலைகளிலும் ஆண்கள் பெண்கள் ஒன்று கூடுகின்ற நிலைகள் சமுதாயத்தில் இருக்கின்றது. பெண்கள் பயான் மற்றும் தொழுகையைத் தவிர வேறு எங்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியல் திரையிட்டுக் கொள்வது கிடையாது. பெண்கள் பயானில் திரையிடுவது அவசியம் என்றால் மற்ற இடங்களில் திரையிடுவது அதை விட மிகவும் அவசியமானதாகும். அங்கு யாரும் இதைக் கண்டு கொள்வது கிடையாது. இதை நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் தொழுகையில் திரையிட வேண்டும் என்று வலிறுத்துபவர்கள் மற்ற இடங்களில் அதை சாதரணமாக எடுத்துக் கொள்வது ஏன்என்கின்ற முரண்பாட்டை விளக்குவதற்காகத்தான்.

முறையாகப் பெண்கள் பர்தா அணிந்து இருக்கும் போது அந்தச் சபையில் திரையின்றிப் பேசுவதால் எவ்விதக் குற்றமும் கிடையாது.  அதே நேரத்தில் உரையாற்றுபவரைத் தவிர மற்றவர்கள் தேவையின்றி பெண்கள் சபைக்குச் செல்வதையும்பெண்களின் சபைகளை நோக்கி பார்வைகளைத் திருப்புவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். திரையின்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் இடைவெளியை அதிகரிப்பதில் தவறில்லை.

நபியவர்கள் பெண்களுக்கு உரையாற்றும் போதும் பள்ளியில் தொழுகை நடத்தும் போதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்வித ஹிஜாபையும் ஏற்படுத்திக் கொள்வில்லை. நம்முடைய அழகிய முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான். அவர்கள் இவ்வாறு நடைமுறைப்படுத்தியிருக்கும் போது அதற்கு மாற்றமாக திரையிடுவதை அவசியமாக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

வழங்கியவர் சகோ.அப்துந்நாசிர் Misc.