தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, April 24, 2017

பொதுத்தளப்பதிவுகளில் கவணம் தேவை!!!




அன்பு இஸ்லாமிய சொந்தங்களே.....!!!

நாம் பதிவிடும் பலவிதமான பதிவுகளை பலருக்கும் டேக் செய்து பரப்பி விடுகிறோம். அவ்வாறு நம்மால் டேக் செய்யப்படும் முகநூல் ஐடியின் சொந்தக்காரர்கள் பலர் இறைவனால் அழைக்கப்பட்டு விட்டார்கள்
அவர்களது ஐடிகள் மட்டும் தான் முகநூலில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா????
நாளை எனது நிலையும் உங்களது நிலையும் இதுதான் தோழர்களே!!!
நமது முகநூல் பக்கமும் பதிவுகளும் இருக்கும்,
ஆனால் நாம் இருக்க மாட்டோம்....

நாம் பதிந்த பதிவுகள் இறைவன் வெறுக்கும் பதிவுகளாக, இறைவனால் தடுக்கப்பட்ட காரியங்களை பிரதிபலிக்கும் பதிவுகளாக இருக்குமென்றால்
நாம் இந்த உலகை விட்டு பிரிந்த பின்னால் அவற்றால் ஏற்படும் விளைவை நிச்சயமாக உணர்ந்து கொள்வோம் என்பதில் சந்தேகம் இல்லை!!!!
ஆனால் அத்தகைய விளைவை மண்ணறைகளிலும் மறுமையிலும் நமக்கு ஏற்படுத்தும் அந்த பதிவுகளை முகநூலில் இருந்து நீக்கிவிட நம்மால் அன்று இயலாமல் போகும் என்பதை என்றைக்காவது நாம் சிந்தித்தது உண்டா???
மிகுந்த கவணத்தோடு பொதுத்தளங்களில் பதிவுகளை பதிவிடுங்கள்!!!
சிலரது முகநூல் பக்கங்களில்
விபச்சார சிந்தனைகளை உலகில் பரப்பும் சினிமா கூத்தாடிகளின் புகைப்படங்கள்,
ஆபாச புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள்,
பிறரது சுயமரியாதையை பாதிக்கும் வகையிலான பதிவுகள் என்று பதிவுகள் தொடர்கிறது.........
மரணம் எப்போது வரும் என்று நம்மால் சொல்ல முடியாது சொந்தங்களே!!!
உங்களுக்கு மரணம் வந்து விட்டால்.......
பல இலட்சம் மக்களால் இதுபோன்ற உங்கள் பதிவுகள் பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கும்....
பொதுத்தளம் முழுமையாக மூடப்படும் வரைக்கும்...
இந்த பதிவுகளை உங்களால் எப்படி அழிக்க முடியும்??????????????????
இறந்த பின்னும் நமக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலான செயல்கள் தான் நமது வாழ்வில் இருக்க வேண்டும்.
இறந்த பின்னும் கூட நமது பாவச்சுமைகள் நம்மை தொடரும் வகையில் நாம் வாழ்ந்து மரணிக்கக்கூடாது.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!!!

இன்றே பதிவுகளை புரட்டுங்கள், தீமையானவற்றை தூர வீசுங்கள்....
இறைவனை நோக்கி திரும்புங்கள்.....
நமது பதிவுகள் அனைத்தும் நன்மையானதாகவே அமையட்டும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
திருக்குர்ஆன் (66:8).

Sunday, April 9, 2017

புறக்கணிக்கப்படும் இறைவனது உபதேசம்!



ஒரு மனிதன் சுவனம் செல்ல வேண்டும் என்றால் அவன் இறைவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக சொல்வதென்றால், இதே தமிழகத்தில் இறைவனது சட்டங்களையும் இறைத்தூதரின் வழிமுறைகளையும் பலர் புதுமையாக கருதிக்கொண்டிருந்த நிலையில் அவற்றை மிக வீரியமாக தமது வாழ்வில் நிலைநாட்டி அதற்காக ஏராளமான தொல்லைகளை அனுவித்த ஈமானிய சொந்தங்களை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம். காரணம் நமது இலக்கும் இலட்சியமும் சுவனம் ஒன்று தான்.

நபியவர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்வோருடன் எங்களது உறவுகள் இவ்வாறுதான் என்று, தாம் நேசித்த நபர்களை கூட இறைவனுக்காக வெறுத்து ஒதுக்கிய ஏகத்துவ புறட்சியை நமது வாழ்நாளில் மறக்க முடியாது.

ஆனால் இன்று சில வேதனையான நிகழ்வை நமது சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் பார்க்க முடிகிறது. எந்த நபியின் வழிகாட்டலை தமது வாழ்வில் பேணுவதற்காக பல்வேறு வகையான சோதனை போராட்டங்களை நாம் சந்தித்தோமோ அதே நபியின் வழிகாட்டல்கள் நாம் அறிந்த நிலையில் பல இடங்களில் செத்து மடிந்து கொண்டிருக்கிறது.

ஒரு இஸ்லாமிய குடும்பம் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் அழகிய முறையில் வழிகாட்டி சென்றுள்ளார்கள். அவ்வாறு செயல்பட்டால் தான் அவை இஸ்லாமிய குடும்பம் என்று இறைவனது பார்வையில் அமையும். நான் இங்கு அனைத்தையும் குறிப்பிட்டால் எழுத்து நீண்டு விடும். ஆகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இஸ்லாமிய குடும்பங்கள் வாழும் வீட்டில் பேணப்பட வேண்டிய ஒழுங்கு என்று கடுமையாக எச்சரித்து சொன்ன ஒன்றை மாத்திரம் இங்கு நான் சுட்டிக்காட்டுகிறேன்.

عن عقبة بن عامر أن رسول الله صلى الله عليه وسلم قال: «إياكم والدخول على النساء!»، فقال رجل من الأنصار: يا رسول الله، أفرأيت الحمو؟ قال: «الحمو الموت» (رواه البخاري ، ومسلم.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர்(ரலி), நூல் : புகாரி 5232.

நமது சகோதரனின் மனைவி அல்லது நமது சகோதரியின் கணவன் அல்லது நமது கணவனின் சகோதரன் அல்லது நமது மனைவியின் சகோதரி  சம்மந்தமாகத்தான் அல்லாஹ்வின் தூதர் இந்த நபிமொழியில் எச்சரிக்கை செய்கிறார்கள். நமது சமூகத்தில் குர்ஆன் சுன்னாஹ்வை பேசக்கூடிய பலரும் பலவீனப்பட்டிருக்கும் இடமும் இந்த இடம்தான்.

ஒரு அன்னியப் பெண் தனிமையில் இருந்தால் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற சட்டத்தை நபியவர்கள் மக்களுக்கு சொல்கின்றபொழுது தான் இவற்றை சொல்கிறார்கள். ஒரு அன்னியப் பெண்ணிடத்தில் பேண வேண்டிய ஒழுங்குகளை விட நமது சகோதரனின் மனைவியிடமோ அல்லது நமது சகோதரியின் கணவனிடமோ அல்லது நமது கணவனின் சகோதரனிடமோ அல்லது நமது மனைவியின் சகோதரியிடமோ கடுமையான ஒழுகுகளை பேண வேண்டும் என்று நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இத்தகைய உறவு தான் மரணத்திற்கு நிகரான உறவு என்று நபியவர்கள் அந்த அன்சாரித்தோழருக்கு சொன்ன பதிலில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ள முடியும்! நமக்கு முன்னாள் மரணம் என்றால் அதைக்கண்டு எவ்வாறு நமக்கு அச்சம் வருமோ அதுபோன்றுதான் இந்த உறவுகளிடம் நாம் பேசும் போதும் பழகும் போதும் அச்சம் வர வேண்டும். தேவைக்கு அதிகமாக இவர்களிடம் பேசவோ பழவோ ஒரு முஸ்லிமிற்கு அனுமதி இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்க இதுபோன்ற உறவுகளிடம் நமது நடத்தைகள் எவ்வாறு இருக்கிறது என்று உள்ளம் தொட்டு கேளுங்கள்!!!???

கணவனின் சகோதரனோடு சர்வ சாதராணமாக வாகனத்தில் அமர்ந்து உரசிக்கொண்டு நமது பெண்கள் வீதியில் செல்கின்றனர். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்போது கணவனின் சகோதரனோடு ஒரே சீட்டில் பயணம் மேற்கொள்கின்றனர். சர்வசாதராணமாக இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை கேலி கிண்டல் என்ற பெயரில் பேசுகின்றனர். கணவனுக்கு முன்னாள் அல்லது மஹ்ரமான உறவுகளுக்கு முன்னாள் மட்டும் அணிவதற்கு அனுமதிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு இவர்களுக்கு முன்னாள் சாதாரணமாக நடமாடுகின்றனர். இவை எல்லாம் எங்கே உள்ள கலாச்சாரம் தோழர்களே???!!!

இவை அனைத்தும் பெற்றோர்களால், சகோதரர்களால், சகோதரிகளால், பிள்ளைகளால் என்று அனைவராலும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அல்லாஹு அக்பர்!!!

என் அன்பு இஸ்லாமிய சொந்தங்களே!!! இதுபோன்ற உறவுகளை சர்வ சாதராணமாக பழக விடுவதால் நிகழும் விளைவுகளை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமா என்ன???!!!

தாய், தந்தை, பிள்ளை, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி என்ற உறவுகளையெல்லாம் படைத்தவன் இறைவன். யார் யாரிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது அவனுக்குத்தான் முழுமையாக தெரியும் சகோதரர்களே. நாம் சொல்லும் வியாக்கியானங்கள் எல்லாம் காலம் காலமாக இந்த இடத்தில் தோற்றுத்தான் போகிறது என்பதை நாம் ஏன் இன்னும் உணராமல் இருக்கிறோம்???

தனது சொந்த தாயை சந்திக்க சொந்த வீட்டிற்குள் நுழைவதற்குக்கூட ஒரு மூன்று தருணங்களில் மட்டும் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்ற உயரிய கண்ணியமான கொள்கைகளை சுமந்த மார்க்கம் நமது மார்க்கம் என்பதை மறந்து விட வேண்டாம். இஸ்லாமிய கலாச்சாரங்களை நாம் முழுமையாக பேண பேண அவை அனைத்தும் நம்மை கண்ணியமான இடத்திற்கு உயர்த்துமே அன்றி ஒருபோதும் நம்மை இழிவு படுத்தாது தோழர்களே!

விரல் அசைப்பதற்காக விரல் உடைபட்டோம்.... இறைவனது சட்டங்களையும் இறைத்தூதரின் ஏனைய சுன்னாக்களையும் பேணுவதற்காக உயிர்பறிக்கப்படும் நிலை வரைக்கும் கூட நாம் சோதனைகளை சந்தித்தோம். மறுக்க முடியாது...!!!

ஆனால் அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த "அல்ஹம்வ்" என்ற இந்த சட்டத்தை நமது வீடுகளில் பேணுவதில் மட்டும் நாம் ஏன் பலவீனப்பட்டோம்????!!!

இதற்குமேல் நான் பேச ஒன்றுமில்லை! மாற்றிக்கொள்வோம் இறைவனுக்காக....!

Tuesday, April 4, 2017

கவணம் தேவை சகோதரிகளே!!!



صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا : قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا ، وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை.

(முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.

அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி,
நூல் : முஸ்லிம் 4316.

அற்ப உலக இன்பத்திற்காக மறுமை வாழ்வை இழந்து விட வேண்டாம் சகோதரிகளே.....!

நமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களின் ஆடை ஒழுங்குகளில் கொஞ்சம் கவணமெடுங்கள்! 

நமது கவணக்குறைவால் நமது மறுமை வாழ்வும் கேள்விக்குறியாக, நாம் நேசிக்கும் பலரும் நரகம் சென்றுவிடக் கூடும்!

அல்லாஹ் பாதுகாப்பானாக!!!

தாயின் பாசத்தை உணர்த்தும் தருணம்!!!



தனது தேவைகளை தானே பூர்த்தி செய்ய முடியாத நிலை பெற்றோர்களுக்கு ஏற்படும் பொழுது அந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சுமையாகி விடுகின்றனர்!

அவர்களது மரணமே பிள்ளைகளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக ஒரு தருணத்தில் மாறிவிடுகிறது!

இது இன்றைய பெரும்பாலான பிள்ளைகளின் நிலைமை.....!!!

மனவளர்ச்சி குன்றிய நிலையிலோ, ஊனமான நிலையிலோ, படுத்த படுக்கையோடுத்தான் இந்தப்பிள்ளையின் வாழ்வு முடிக்கப்படும் என்ற நிலையிலோ ஒரு பிள்ளை பிறந்து விட்டால் 

அதை இறைவன் கொடுத்த அன்பளிப்பாக நினைக்கும் இளகிய உள்ளம் தான் தாய்மை சகோதரா!

எது உண்மையில் சுமையோ அதை சுகமாக நினைத்து தனது மரணம் வரைக்குமோ அல்லது அந்தக் குழந்தையின் மரணம் வரைக்குமோ
அன்போடும் அரவணைப்போடும் பலவீனமான பிள்ளையின் வாழ்வுக்காக பாடுபடும் தாய்மார்களை நாம் உலகில் கண்கூடாக பார்க்க முடிகிறது.

மனவளர்ச்சி குன்றிய பிள்ளை வளர்ந்த பின் தாய்க்கு எதுவும் தேடிக்கொடுக்க முடியுமா?

பிறகு ஏன் அந்தத் தாய் இப்பிள்ளையை அரவணைத்து வளர்க்கிறாள் என்று சிந்தித்தோமா???

வயது முதிர்ந்த நிலையில் உள்ள பெற்றோர்களின் மரணம் பிள்ளைக்கு இன்பமாக மாறிப்போகும் கொடூரமான நிலை ஒருபக்கம் இருக்க,

தாயோ தனது பலவீனமான காலம் வரைக்கும் மனவளர்ச்சி குன்றிய பிள்ளையை அன்போடு வளர்த்தெடுத்து

அவனது மரணத்தைக் கண்டு வெம்மி அழுகிறாள்...!

உண்மையில் இந்த இடம் தான் எனக்கு தாய்மையின் பாசத்தை அதிகம் உணரத்தூண்டுகிறது.

நாம் எந்த தாயை பராமரிக்க முடியவில்லை என்று விரட்டுகிறோமோ,

அந்த தாய்க்கு நாம் ஒரு மனவளர்ச்சி குன்றிய பிள்ளையாகவோ, கை கால் ஊனமுற்ற பிள்ளையாகவோ பிறந்து இருந்தால்

அந்த தாய் நம்மை ஒருபோதும் விரட்டி இருக்க மாட்டாள் என்பதை உணர்ந்து கொள் தோழா!

இறைவனது உபதேசத்தைக் கேள்:

"என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்!

அவ்விருவரையும் விரட்டாதீர்!

மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!

"சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் 
இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 17:23,24.

இறைவனது கருணை இல்லை என்றால்????!!!!



இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அவனது வரம்புகளை ஏதோ ஒரு வகையில் மீறுபவர்கள் தான். நாம் தேடும் மன்னிப்பின் காரணமாக இறைவன் கருணை புரிந்து நமது பாவங்களை மன்னிக்கிறான்.

மார்க்கத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு அழைப்பாளரும் கூட
பல சந்தர்ப்பங்களில் பாவங்களை தொடுபவர்கள் தான். எவரும் இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் அல்ல.

ஆனால், இறைவனது அச்சத்தை தூண்டும் எண்ணற்ற உபதேசங்களை செய்யும் நபர்கள்,

சொல்பவற்றை அவர்களது வாழ்வில் செயல்படுத்தவில்லை என்றால்....

அவர்கள் தமது குடல்களை கையில் சுமந்த நிலையில் நரக வேதனையில் சுற்றி திரிவார்கள் என்று நபியவர்கள் சொன்னார்கள்.

#ஒரு அழைப்பாளனாக மறுமையின் எனது நிலையை சிந்திக்கிறேன்.

இறைவனது கருணை இல்லை என்றால்????!!!!

அன்பு செலுத்த தாமதம் வேண்டாம்!



பிறர் சொல்லும் உபதேசங்களை கேட்டு திருந்தும் மனிதர்களை விட,
பட்டுத் திருந்தும் மனிதர்கள் தான் உலகில் அதிகம்...!!!

இருக்கும்போதே இயன்றவரை அன்பு செலுத்தி விடுங்கள்!!!

காலம் கடந்து விட்டால்

அன்பு செலுத்த நாம் ஏங்கினாலும்

அதை பெற்றுக்கொள்ள அவர்கள் இருக்க மாட்டார்கள்.

#அன்பானவர்களின் பிரிவு உணர்த்தும் வலி.

உண்மைக்கதை இல்லையென்றாலும் உலகில் நடக்கும் கதைதான்....!!!




ஒரு சிறுவன் அவனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்.
சிறுவர்களிடையே மோதல் வருகிறது.

ஒரு சிறுவன் மீது தான் தவறு என்று சண்டையிட்ட ஏனைய சிறுவர்கள்
அழுதுகொண்டே அவர்களது பெற்றோர்களை அழைத்து வருகின்றனர்.

தவறு செய்ததாக கணிக்கப்பட்ட சிறுவனை ஏனைய சிறுவர்களின் பெற்றோர்கள் திட்டித்தீர்த்து விடுகின்றனர்.

மனம் உடைந்த அந்த பிஞ்சு உள்ளம்
அழுதுகொண்டே தமது பெற்றோர்களிடம் இவற்றை முறையிட ஓடுகிறது..........

தமது கவலையை பெற்றோர்களிடம் முறையிடுகிறது.

ஆனால் பெற்றோர்கள் அந்த சிறுவனுக்காக வாதாட வரவில்லை!!!!!

காரணம்.....

கபடமில்லாத அந்தக் குழந்தை முறையிட்ட இடம்
பெற்றோர்களின் அடக்கஸ்தலம்....!!!
_________________________________________________________________________________

#நாம் அனுபவிக்கும் இன்ப துன்ப உணர்வுகளை போன்று கைவிடப்பட்ட அனாதைகளுக்கும் உணர்வுகள் இருக்கிறது தோழர்களே!!!

#அவற்றை முறையிடத்தான் நாம் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை!!!

#ரோட்டுக்கடையில் நாம் சாப்பிடும்போது
நமது உணவை பசியோடு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் அனாதைக் குழந்தைகளை
நாம் எப்போது கவனித்திருக்கிறோம்???!!!

#வெயிலின் கடுமையால் நமது குழந்தைகள் பாதிக்கப்படுகிறது என்று வீட்டு வசதிகளை அதிகப்படுத்த பல இலட்சங்களை வாரி இறைக்க முன்வரும் நாம்,
வீதியில் தமது மேனியை மறைக்கக்கூட போதிய உடை இல்லாமல் சுருண்டு கிடக்கும் பச்சிளம் சிறார்களை எங்கே கவணித்தோம்???!!!

#வீட்டில் வைத்து அரவணைக்க இயலாவிட்டாலும், இயன்றவரையாவது இவர்களை போன்றோரை அரவணைக்க முயற்ச்சிப்போம்!!!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"நானும் அநாதையின் காப்பாளரும் -அந்த அநாதை உறவுக்காரராகட்டும் அந்நியராகட்டும்- சொர்க்கத்தில் இப்படி இருப்போம்" என்று சைகை செய்து கூறினார்கள்.
இதை அறிவிக்கும்போது மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், தமது சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் (அவற்றை இணைத்துக் காட்டி) சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5704.