தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, March 5, 2015

பெண்ணே!!!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!
அன்பான இஸ்லாமிய சகோதரிகளே!
இந்த இரண்டு வகையான ஃபர்தாக்களில் எந்த வகையை நாம் அதிகம் விரும்புகிறோம் அணிந்து கொண்டிருக்கிறோம் என்பதை உள்ளம் தொட்டு கேள்வி எழுப்புங்கள்...
அழகை அந்நிய ஆண்களின் பார்வையில் இருந்து மறைப்பதற்குத்தான் அல்லாஹ் ஃபர்தா என்ற கண்ணியமான சட்டத்தை பெண்களுக்கு அருளினானே தவிர,
தம்மிடம் இருக்கும் இயற்கையான அழகை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி அந்நியர்களுக்கு காட்டித் திரிவதற்காக அல்ல சகோதரிகளே!

நமது செயல்களும் விருப்பங்களும் காலத்திற்கேற்ப மாற்றமடைந்து தற்போதைய சூழலில் இறைவன் கூறும் சட்டத்தின் பிரகாரம் வடிவமைக்கப்பட்ட முறையான ஃபர்தாக்களை எந்த கடைகளிலும் நம்மால் பார்க்க முடிவதில்லை.
பெரும்பான்மை இஸ்லாமிய பெண்களின் இதுபோன்ற முறையற்ற செயல்களால்,
இறைவனுக்கு கட்டுப்பட்டு செயல்பட நினைக்கும் சில சகோதரிகளுக்கு துணிக்கடைகளில் ஒழுக்கமான ஃபர்தாக்களோ அறவே கிடைப்பதில்லை....
அவர்களும் ஆபாச ஃபர்தாக்களை வேறு வழியில்லாமல் அணிவதற்கு தள்ளப்படுகிறார்கள்!!!

கடைகளின் முகப்பில் தொங்க விடப்படும் ஆபாச ஃபர்தாக்களுடன் நிற்கும் உயிரற்ற பொம்மைகளையே 
வீதியில் செல்லும் ஆண்கள் கண் இமைக்காமல் பார்க்கும் நிகழ்வு உங்களுக்கு உண்மையை உணர்த்தவில்லையா என் அன்பு சகோதரிகளே???

அல்லாஹ்வின் சட்டம் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும்.
ஒழுக்க கேட்டிற்கு ஒரு சட்டம் உதவுகிறது என்றால், அது நிச்சயமாக அல்லாஹ்வின் சட்டமல்ல...

முதலாவது படத்தில் காட்டப்பட்டிருக்கும் ஃபர்தா தான் முறையானது. ஆனால் அவற்றை பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. எவைகள் அதிகமான பெண்களால் விரும்பப்படுகிறதோ(படம் 2) அவைகள் ஃபர்தாக்களே இல்லை!
அதை ஒரு சடங்கிற்காக நீங்கள் அணிந்து இஸ்லாத்தை கேவலப்படுத்துவதை விட, 
அந்தக் கேவலமான உடையை................(Fill In The Blanks)

No comments:

Post a Comment