தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Showing posts with label பலவீனமான செய்திகள். Show all posts
Showing posts with label பலவீனமான செய்திகள். Show all posts

Saturday, September 30, 2017

பலவீனமான செய்தி



الأدب المفرد مخرجا (ص: 187)
529 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ: أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُضَرَ قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ زَحْرٍ، عَنْ حِبَّانَ بْنِ أَبِي جَبَلَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: لَا تَعُودُوا شُرَّابَ الْخَمْرِ إِذَا مَرِضُوا
[قال الشيخ الألباني] :  ضعيف

மது அருந்துபவன் நோயுற்றிருக்கும் போது நலம் விசாரிக்க செல்ல வேண்டாம் என நபியவர்கள் சொன்னதாக இமாம் புகாரி அவர்கள் எழுதிய அதபுல் முஃப்ரத் என்ற கிரந்தத்தில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது.

இந்த செய்தி பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் உபைதுல்லாஹ் இப்னு ஸஹ்ர் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் என பல ஹதீஸ் துறை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

அதபுல் முஃப்ரதில் பதிவு செய்யப்பட்டுள்ள பலவீனமான செய்திகளை தொகுத்து ளஈஃப் அதபுல் முஃப்ரத் என்ற ஒரு கிதாபை இமாம் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் தொகுத்துள்ளார்கள். அதில் மேற்கண்ட செய்தி பலவீனம் என்று இமாம் அல்பானி அவர்களால் விமர்சிக்கப்பட்டு 71-வது இலக்கத்தின் செய்தியாக பதியப்பட்டுள்ளது.

மேலும் இமாம் தஹபீ அவர்கள் உபைதுல்லாஹ் இப்னு ஸஹ்ரிடம் குழப்பம் உள்ளதாகவும், இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கத்தக்கவை என்றும் விமர்சனம் செய்துள்ளார்கள்.

இமாம் தாரகுத்னீ அவர்கள் உபைதுல்லாஹ் இப்னு ஸஹ்ர் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார் என்று விமர்சிக்கிறார். (அள்ளுஅஃபாவு வல்மத்ரூக்கீன் 327).
இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் அவர்களும் இவரை பலவீனமான அறிவிப்பாளர் என விமர்சிக்கின்றார். (அல்ஜர்ஹு வ தஹ்தீல் 5/1499)

இமாம் ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹுள் பாரியில் இந்த செய்தி மற்றும் இதைவிட கூடுதல் தகவல்களுடன் இடம்பெறும் செய்திகளையும் அறிவிப்பாளர் தொடரோடு குறிப்பிட்டுவிட்டு அவை அனைத்து செய்திகளுமே பலவீனமானவை தான் என்று கூறுகிறார் (சுருக்கம்). ஃபத்ஹுள் பாரி 41/11.

ஆகவே இது பலவீனமான செய்தியாகும். இந்த பலவீனமான செய்தியைக்கொண்டு நாம் அமல் செய்ய முடியாது. இந்த செய்தி சமூக வலைதளங்கள் மூலமாக அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தி போலியானது என்பதை இதனை பரப்புகின்ற அனைத்து மக்களுக்கும் எத்தி வைய்யுங்கள்!
---------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: நோயாளியை நலம் விசாரிக்க செல்ல வேண்டும் என்பது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு செய்ய வேண்டிய கடமை ஆகும். பொதுவான கடமையாகத்தான் நபியவர்கள் இதனை நமக்கு கற்றுக் கொடுத்தார்கள். அதனுள் இவ்வாறு இருந்தால் தான் நலம் விசாரிக்க செல்ல வேண்டும் என்று ஷரத்துக்களை விதித்துள்ளதாக ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் நாம் காண கிடைக்கவில்லை.

சட்ட ரீதியாக இதுபோன்ற செய்திகளை நாம் அணுகுகின்ற பொழுதும்கூட இந்த செய்தி மத்ன் ரீதியிலும் பிழைகளை உள்ளடக்கி உள்ளதை நம்மால் கண்டறிய முடிகிறது (இறைவனே மிக அறிந்தவன்). அதாவது,

மது அருந்துபர் நோயுற்றால் நலம் விசாரிக்கக்கூடாது என்று இருக்குமேயானால், பாவங்களில் எல்லாம் மிகப்பெரும் பாவமான, அல்லாஹ்வின் மன்னிபை பெற்றுக்கொள்ளவே இயலாத பாவமான, நிரந்தர நரகத்தை பெற்றுத்தரும் பாவமான இணை வைப்பை செய்து வாழ்ந்த ஒரு யூதச் சிறுவன் நோயில் வீழ்ந்திருக்கும்போது நபியவர்கள் நலம் விசாரிக்க ஏன் சென்றார்கள்???

மது அருந்துதல் பெரும் பாவம் என்பதனால் தானே அதன் மூலமாக பாதிப்படைந்த ஒரு நபரை நலம் விசாரிக்க செல்லக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டியவை, மது அருந்தும் நபர் இணை வைக்காத நிலையில் மரணித்து விட்டால் இறைவன் நாடினால் அவர் மன்னிப்பை பெற ஒரு வாய்ப்பும் உண்டு. மது அருந்துபவர்களை நோக்கி அல்லாஹ் இவர்களை ஒருபோதும் நான் மன்னிக்கவே மாட்டான் என்று எங்குமே சொல்லவில்லை.

ஆனால் இணை வைப்பு என்ற மிகப்பெரும் அநியாயத்தை ஒருவன் செய்தால் அந்தக்குற்றத்தை  அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான் என்று திருமறையில் நமக்கு போதனை செய்கிறான்.

ஆகவே பெரும் பாவம் என்று சொல்லப்பட்ட மது அருந்துதலை விட கொடிய பாவம் தான் இறைவனுக்கு இணை வைத்தல் என்ற பாவம். இதை செய்து வந்த ஒரு யூதச் சிறுவன் நோயுற்ற பொழுது நபியவர்கள் அந்த சிறுவனை நலம் விசாரிக்க சென்றுள்ளார்கள் என்றால் இதைவிட ஒரு உதாரணம் நமக்கு தேவை இல்லை, எத்தகைய நபராக இருந்தாலும் நாம் நலம் விசாரிக்க செல்லலாம் என்பதை புரிந்து கொள்வதற்கு.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!!!

Saturday, June 10, 2017

பலவீனமான செய்தி



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒருவர் பார்வையற்றவருக்காக 40 அடிவரை வழிகாட்டுவாரோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகிவிடும்.

மற்றொரு ரிவாயத்தில் அவருடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகிறதுஎன்றும் இடம் பெறுகிறது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : தப்ரானி.

இந்த செய்தி ஹதீஸ் துறை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பலவீனமான செய்தியாகும்.

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அலீ இப்னு உர்வா என்பவர் பொய்யர் என விமர்சிக்கப்பட்டவர் ஆவார். மேலும் இவரோடு தொடர்பு படுத்தி வரும் அறிவிப்பாளர் தொடர் சார்ந்த செய்திகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

(ஸில்ஸிலத்துல் அஹாதீசுஸ் ளஈஃபா 139/10, ஷுஃபுல் ஈமான் 96/10, மஜ்மவுஸ் ஸவாயித் வ மன்பவுஃப் ஃபவாயித் 138/3, அல்ஜாமிவுஸ் ஸஃகீர் 12500, ஜாமிவுல் அஹாதீஸ் 111/21)

இறைவனது திருமுகத்தை நாடி நாம் செய்யும் எந்த நன்மையாக இருந்தாலும் அதற்கு நிச்சயமாக இறைவனிடம் கூலி உண்டு. அந்த அடிப்படையில் ஒரு மனிதர் பார்வையற்ற நபருக்காக உதவி செய்கிறார் என்றால் நிச்சயமாக இறைவன் நாடுகின்ற அளவு அவருக்கு கூலி கொடுப்பான்.

தாகித்திருந்த ஒரு நாய்க்கு நீர் புகட்டிய காரணத்தால் விபச்சாரம் செய்து வந்த பெண்ணிற்கு கூட இறைவனது மன்னிப்பு கிடைத்துள்ளது. ஆகவே இறைவனது திருமுகத்திற்காக பிற உயிரினங்கள் மீது அன்பு காட்டுதல் கூட நமது பாவங்கள் மன்னிக்கப்பட அல்லது நம்மை சுவனத்திற்கு அழைத்துச்செல்ல போதுமானதாக இருக்கலாம். ஆனால் அதை இறைவன் தான் தீர்மானிப்பான்.

அதேபோன்று தான் பார்வையற்ற மனிதர்கள் மீது இறக்கம் செலுத்தி உதவுதலுக்கும் இறைவன் நாடினால் சுவனம் தரலாம். அதை நாம் உறுதிபட சொல்ல முடியாது.

ஆனால் நாம் மேலே சுட்டிக்காட்டிய செய்தி பார்வையற்ற நபர்களுக்கு உதவி செய்வதால் இறைவனது மன்னிப்பும் சுவனமும் கிடைக்கும் என்பதை உறுதிப்பட சொல்வதைப் போன்று வருகிறது. இது பலவீனமான செய்தி என்பதால் இந்த செய்தியை நம்பி நாம் அமல் செய்ய இயலாது.

Saturday, June 11, 2016

நோன்பு தொடர்பான பலவீனமான செய்தி



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரொருவர் ரமழான் மாதத்தில் தக்க காரணமின்றி ஒரு நோன்பை விடுகின்றாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும் அவர் (விட்ட) அந்த நோன்புக்கு (சிறப்புக்கு) அது ஈடாகாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),
நூற்கள்: அபூதாவுத் 2396, இப்னு மாஜா 1672).

இந்த இரண்டு அறிவிப்புகளிலும் அபுல் முதவ்விஸ் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். காரணம் இவரையும் யாரென்று தெரியாது, இவரது தந்தையையும் யாரென்று தெரியாது என ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
மீஸானுல் இஃதித்தால் (574/4).

இமாம் அஹ்மத் அவர்கள் இவரை யாரென்றே தெரியாது என்று குறிப்பிடுகிறார்கள்.
தஹ்தீபுத் தஹ்தீப் 12/ (1081).

இதே தகவல்களோடு இமாம் அல்பானி அவர்கள் தமது லஈஃப் அபூதாவுதில் (273/2)-ம் பக்கத்தில் இது பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.


Wednesday, May 25, 2016

சூரா இக்லாஸ் தொடர்பான பலவீனமான செய்தி - 1!




حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، قَالَ: وَحَدَّثَنَا يَحْيَى بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا رِشْدِينُ، حَدَّثَنَا زَبَّانُ بْنُ فَائِدٍ الْحمْرَاوِيُّ،  عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ قَرَأَ: قُلْ هُوَ اللهُ أَحَدٌ حَتَّى يَخْتِمَهَا عَشْرَ مَرَّاتٍ، بَنَى اللهُ لَهُ قَصْرًا فِي الْجَنَّةِ " فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: إِذًا نَسْتَكْثِرَ يَا رَسُولَ اللهِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اللهُ أَكْثَرُ وَأَطْيَبُ ".

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தை தினமும் பத்து முறை ஓதுகின்றாரோ, அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை கட்டித்தருகிறான்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அப்படி என்றால் நாங்கள் எங்களுக்காக அதிகமாக கோட்டைகளை கட்டிக் கொள்கிறோம் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அதிகரித்து தர காத்திருக்கிறான், மேலும் அவன் தூய்மையானவன் என்று பதில் கூறினார்கள்.

இந்த செய்தி ஸில்ஸிலத்துல் அஹாதீசுஸ் சஹீஹா 589, முஸ்னத் அஹ்மத் 15610 போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம்பெறுகிறது.

இந்த செய்தி பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் ஸஹ்ல் பின் முஆத், ஸப்பான் பின் பாஇத் போன்றோர் பலவீனமானவர்கள் ஆவார்கள். 

மேலும் முன்கருல் அஹாதீஸ்(நீராகரிக்கப்படவேண்டியவற்றை அறிவிப்போர்)என்றும் விமர்சிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் ரிஷ்தீன், இப்னு லஹீஆ போன்றோரும் பலவீனமான நபர்களாவர்.
(ளஈஃப் அத்தர்ஃகீபு வத்தர்ஹீப் (224/1), மஜ்மவுஸ் ஸவாயித் (145/7)).

ஆகவே இந்த செய்தி பின்பற்ற தகுதியான செய்தி அன்று.

Wednesday, April 20, 2016

அறிந்து கொள்வோம் - பலவீனமான செய்தி!




حديث: "إذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره، وليقرأ عند رأسه بفاتحة الكتاب وعند رجليه بخاتمة البقرة في قبره".

உங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை நீங்கள் தடுத்து (தாமதப் படுத்தி) வைக்க வேண்டாம், அவரை கப்ரை நோக்கி விரைவுபடுத்துங்கள், மேலும் கப்ரில் வைத்து அவரது தலைமாட்டில் சூரத்துல் பாத்திஹாவையும், கால்மாட்டில் பகரா சூராவின் கடைசியையும் ஒதுங்கள்.  
(தப்ரானி முஃஜமுல் கபீர், ஷுஅபுல் ஈமான்)


இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அய்யூப் இப்னு நுஹைக் என்பவர் ஹதிஸ்கலையில் விடப்பட்டவராவார்மேலும் இதன் தொடரில் வரும் முதல் அறிவிப்பாளரான யஹ்யா என்பவர் பலவீனமானவராவார்
(ஸில்ஸிலதுல் லஈபா) (الضعيفة 4140)

Tuesday, February 2, 2016

சூரா பகரா பற்றிய பலவீனமான செய்தி - 2



ابْنَ عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلَا تَحْبِسُوهُ، وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْرِهِ، وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِهِ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ فِي قَبْرِهِ»

உங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை நீங்கள் தடுத்து (தாமதப் படுத்தி) வைக்கவேண்டாம், அவரை கப்ரை நோக்கி விரைவுபடுத்துங்கள், மேலும் கப்ரில் வைத்து அவரது தலைமாட்டில் சூரத்துல் பாத்திஹாவையும், கால்மாட்டில் பகரா சூராவின் கடைசியையும் ஒதுங்கள்.  
(தப்ரானி முஃஜமுல் கபீர், ஷுஅபுல் ஈமான்) 

இதில் அய்யூப் இப்னு நுஹைக் என்பவர் இடம் பெறுகின்றார், இவர் ஹதிஸ்கலையில் விடப்பட்டவராவார்மேலும் இதன் தொடரில் வரும் முதல் அறிவிப்பாளரான யஹ்யா என்பவர் பலவீனமானவராவார்
(ஸில்ஸிலதுல் லஈபா)

Wednesday, January 27, 2016

சூரா பகரா பற்றிய பலவீனமான செய்தி - 1



من قرأ سورة البقرة؛ توج بتاج في الجنة


யார் ஒருவர் சூரத்துல் பகராவை ஓதுகின்றாரோ அவருக்கு சுவனத்தில் கிரீடம் அணிவிக்கப்படும். இந்த செய்தி பைஹகீ இமாமின் ஷுஅபுல் ஈமான்எனும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் ‘முஹம்மதிப்னுல் ளவ்ஃ’ என்பவர் பொய்யன் என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முஹ்ம்மதிப்னு மஹ்தீ என்பவர் நிரகரிக்கப்பட்ட செய்திகளை அறிவிக்கும் மிகப் பலவீனமான நபர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (ஸில்ஸிலதுல் லஈபா)

ஆகவே இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்!

Sunday, May 17, 2015

மொத்த நபிமார்கள் எத்தனை?‎




உலகம் படைக்கப்பட்டது முதல்  நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வரை அனுப்ப்ப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு ‎லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் ‎சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் ‎உள்ளதா?‎
ஏ.சுலைமான், விருத்தாசலம்.‎
பதில்:‎
நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத், ‎தப்ரானி ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.‎
இது பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ‎அலீ பின் யஸீத் அல் ஹானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் ‎பலவீனமானவராவார்.‎
இது போல் மற்றொரு ஹதீஸ் இப்னு ஹிப்பான் நூலில் பதிவு ‎செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.‎
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் ஹிஷாம் ‎அல்கஸ்ஸானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் ‎என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இதுவும் பலவீனமான ‎ஹதீஸாகும்.‎
அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அனுப்பியுள்ளான். ‎அவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படவில்லை என்பதே ‎சரியான நம்பிக்கையாகும்.‎
இந்த எண்ணிக்கையை விட அதிகமான நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் அவர்களை நாம் மறுத்த குற்றம் ‎ஏற்படும்.‎
அதை விட குறைவான எண்ணிக்கையில் நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் நபியல்லாதவர்களை நபி என்று நம்பிய ‎குற்றம் ஏற்படும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Source: www.onlinepj.com

Thursday, March 5, 2015

ஜும்ஆ உரையை கேட்கும்போது கால்களில் கைகளைக் கட்டி அமரக்கூடாதா???



திர்மிதியில் இது தொடர்பான செய்தி இடம்பெற்றுள்ளது.
முஆத் பின் அனஸ் அல் ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது முதுகையும், முட்டுக் கால்களையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு அமர்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
திர்மிதி 472.

திர்மிதி இமாம் அபூஈசா அவர்கள் இந்த செய்தியை ஹஸன் தரத்தில் பதிவிடப்பட்டதாகக் கூறுகிறார்.
இருப்பினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளரான அபூமர்ஹூம் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
இவரது இயர்பெயர் அப்துர் ரஹீம் பின் மைமூன் என்பதாகும்.

யஹ்யா பின் மயீன் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்,
அபூமர்ஹூம் அப்துர் ரஹீம் பின் மைமூன் என்பவரும்,
அவருக்கு ஹதீஸ் அறிவித்த சஹ்ல் பின் முஆத் என்பவரும் பலவீனமான அறிவிப்பாளர்கள் ஆவார்கள்.
(துஹ்ஃபத்துல் அஹ்வதீ).

ஆகவே, இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
ஜும்ஆ உரையை கேட்கும்போது கைகளைக் கட்டிக் கொண்டு அமர்வது தடுக்கப்பட்டது அல்ல.

Saturday, December 6, 2014

பலவீனமான செய்தி - பெண்கள் ஸியாரத் செய்தல்

பெண்கள் ஸியாரத் செய்தல்

294 حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ عَنْ أَبِي صَالِحٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ قَالَ وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ وَأَبُو صَالِحٍ هَذَا هُوَ مَوْلَى أُمِّ هَانِئِ بِنْتِ أَبِي طَالِبٍ وَاسْمُهُ بَاذَانُ وَيُقَالُ بَاذَامُ أَيْضًا رواه الترمذي
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: திர்மிதீ 294, நஸயீ 2016, அபூதாவூத் 2817, அஹ்மத் 1926,2472,2829,2952.
இச்செய்தியில் பாதாம் என்ற அபூஸாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
இவர் பலவீனமானவராவார்.
நான் உங்களை அடக்கத் தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி),
நூல் : முஸ்லிம் 1778
இந்த செய்தியிலிருந்து அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கப்ருக்குச் சென்று வந்ததை நபிகளார் கண்டிக்கவில்லை என்பதும்
கப்ருக்குச் சென்றால் கூறவேண்டிய வாசகங்களையும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நபிகளார் கற்றுக் கொடுத்ததும்
பெண்கள் கப்ருக்கு ஸியாரத் செல்லலாம் என்பதை அனுமதிக்கிறது.

(பார்க்க : முஸ்லிம் 1774,1778(

பலவீனமான செய்தி - பாதிரியார்களை கடவுளாக எடுத்துக்கொள்ளுதல்

பாதிரியார்களை கடவுளாக எடுத்துக்கொள்ளுதல்

3020 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ غُطَيْفِ بْنِ أَعْيَنَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ فَقَالَ يَا عَدِيُّ اطْرَحْ عَنْكَ هَذَا الْوَثَنَ وَسَمِعْتُهُ يَقْرَأُ فِي سُورَةِ بَرَاءَةٌ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ قَالَ أَمَا إِنَّهُمْ لَمْ يَكُونُوا يَعْبُدُونَهُمْ وَلَكِنَّهُمْ كَانُوا إِذَا أَحَلُّوا لَهُمْ شَيْئًا اسْتَحَلُّوهُ وَإِذَا حَرَّمُوا عَلَيْهِمْ شَيْئًا حَرَّمُوهُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ وَغُطَيْفُ بْنُ أَعْيَنَ لَيْسَ بِمَعْرُوفٍ فِي الْحَدِيثِ رواه الترمذي

என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலை இருக்கும் நிலையில் நபிகளாரிடம் சென்றேன். அப்போது இந்த சிலையை எரிந்துவிடுங்கள் என்று கூறினார்கள். பின்னர் பராஅத் (தவ்பா) அத்தியாயத்தின் (31 வது வசனமான) அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், கடவுள்களாக்கினர். என்பதை ஓதினார்கள். மேலும் இவர்கள், அவர்களை வணங்கவில்லை. மாறாக அவர்கள் ஏதாவது ஒன்றை ஹராம் என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) இவர்களும் ஹராமாக்கிக்கொள்வார்கள். ஏதாவது ஒன்றை அவர்களுக்கு ஹராம் என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) ஹராமாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி),
நூல் :திர்மிதீ (3020)

இச்செய்தியில் குதைஃபின் பின் அஃயன், அல்ஹுஸைன் பின் யஸீத் என்ற இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆகவே இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

பலவீனமான செய்தி - அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமான்

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானும் உலக மக்களின் ஈமானும்

ثنا محمد بن أحمد بن بخيت ثنا أحمد بن عبد الخالق الضبعي ثنا عبد الله بن عبد العزيز بن أبي رواد أخبرني أبي عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لو وزن إيمان أبي بكر بإيمان أهل الأرض لرجح - الكامل في ضعفاء الرجال ـ موافق للمطبوع - (4 / 201

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானையும் பூமியிலுள்ளவர்களின் ஈமானையும் நிறுக்கப்பட்டால்
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானே மேலேங்கும்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : அல்காமில்- இப்னு அதீ, பாகம் : 4. பக்கம் : 201

இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் பலவீனமானவர்.

ஆகவே இது பலவீனமான செய்தியாகும்.
நபிகளார் கூறியதாக இக்கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.

குறிப்பு:
அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் வரலாறு பேசப்படும் பல இடங்களில் இந்த செய்தி உண்மையானது போன்று நினைவுகோரப் படுகிறது!

பலவீனமான செய்தி - முதல் ஷஹீத் சுமைய்யா (ரலி)

முதல் ஷஹீத் சுமைய்யா (ரலி)

أخبرنا أبو الحسين بن بشران ببغداد قال أخبرنا أبو عمرو بن السماك قال حدثنا حنبل بن إسحاق قال حدثني أبو عبدالله يزيد بن أحمد بن حنبل قال حدثنا وكيع عن سفيان عن منصور عن مجاهد قال أول شهيد كان في الإسلام استشهد أم عمار سمية طعنها أبو جهل بحربة في قبلها - دلائل النبوة ـ للبيهقى موافقا للمطبوع - (2 / 282)

இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர் தியாகி) அம்மாரின் தாயார் சுமைய்யா (ரலி) ஆவார்.
அவரின் மர்மஉறுப்பில் ஈட்டியை குத்தி கொன்றான் அபூஜஹ்ல்.
அறிவிப்பவர் : முஜாஹித்,
நூல்கள் : தலாயின் நுபுவா-பைஹகீ, பாகம்:2,பக்கம் : 282, முஸன்னப் இப்னு அபீ ஷைபா, பாகம் :13, பக்கம் :48, தபகாத் இப்ன ஸஅத், பாகம் :8 பக்கம் :864.

இந்த சம்பவத்தை அறிவிப்பவர் முஜாஹித் ஆவார்.
இவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை.
நபிகளார் காலத்தில் நடந்த சம்பவத்தை இவரால் அறிந்து கொள்ள முடியாது.

எனவே இந்த செய்தி அறிவிப்பாளர் தொடர் அறுந்த முர்ஸல் வகையைச் சார்ந்ததாகும்.

பலவீனமான செய்தி - நோன்பு துஆ

நோன்பு துஆ

2010 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى أَبُو مُحَمَّدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ أَخْبَرَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ سَالِمٍ الْمُقَفَّعَ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ رواه ابوداود

நபிகளார் நோன்பு துறக்கும் போது, தஹபல் ளமவு வப்தல்லித்தில் உரூக்கு வஸபத்துல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் (தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் (2010), தாரகுத்னீ(2302), பைஹகீ (7922), முஸ்னத் பஸ்ஸார் (5395), ஹாகிம் (1536), ஸுனனுல் குப்ரா-நஸயீ (3329).

இந்த செய்தி இடம் பெற்ற அனைத்து நூல்களிலும்
'மர்வான் பின் ஸாலிம் அல்முகஃப்பவு' என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென அறியப்படாதவர்.

ஆகவே இது பலவீனமான செய்தியாகும். நோன்பு திறக்கும்போது ஓதும் துஆ என்று பிரத்தியேக துஆ ஒன்றுமில்லை.
சாப்பிடத் துவங்கும் முன் ஓதும் பிஸ்மில்லாஹ் போதுமானது.