தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Saturday, March 7, 2015

திருமண தேர்வு!



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 
1. அவளுடைய செல்வத்திற்காக 
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 
3. அவளுடைய அழகிற்காக 
4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! 
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) 
நூல் : புகாரி 5090.

இவை பெண்ணை தேர்வு செய்யும் முறை என்று ஆணை நோக்கி கூறப்படுவதை போன்றிருந்தாலும், இருசாராருக்கும் பொதுவாக கூறப்பட்ட கட்டளையே ஆகும்.
இந்த முறைகள் கவனிக்கப்பட்டு திருமண பந்தங்கள் உருவாகுமேயானால், 
விவாகரத்து என்ற பகுதி, திருமணம் ஆன மிக சொற்பமான நாட்களுக்குள் ஏற்படும் மோசமான நிகழ்வை இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து துரத்தி விடலாம்!

மாற்றமாக, செல்வத்திற்காக குடும்பப் பாரம்பரியத்திற்காக அழகிற்காக திருமணம் செய்து கொண்டவர்கள் 
அந்தப் பகுதிகளின் சுவைகள் வாழ்வில் காணமல் போக போக வாழ்க்கையை முறித்து விட துணிகின்றனர்.

பெற்றோர்களே! உங்களது பிள்ளைகளின் வாழ்வு இதுபோன்ற நிகழ்வுகளில் நிறுத்தப்படாமல் இருக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருமண தேர்வுக்கு எதை தேர்ந்தெடுக்க சொன்னார்களோ அதை மட்டுமே சிந்தனையில் நிறுத்துங்கள்....
வாலிபர்களே! அழகு என்ற பகுதிக்காக மட்டும் உங்கள் துணையை நீங்கள் தேடினால், குறுகிய காலத்திற்குள் அழகு அழிந்து போகும். உமது வாழ்வு விவாகரத்து எனும் பெயரால் வீதிக்கு வந்து விடும்.
இதையெல்லாம் விட கடுமையான விஷயம், மார்க்கப்பற்று அல்லாத வேறு ஒரு காரணத்தை நோக்கமாக கொண்டு திருமணம் செய்தவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதரது சாபம் அல்லாஹ்வின் சாபம் என்பதை மறந்து விட வேண்டாம்....

சிந்தனை செய்யுங்கள்! வாழ்வை சீர் தூக்குங்கள்!

No comments:

Post a Comment