தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, November 2, 2017

இறைவனுக்கு ரோஷம் எப்பொழுதும் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா????

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 5223.

கோபம், ரோஷம் இரண்டிற்கும் நுணுக்கமான வித்தியாசங்கள் உள்ளன. கோபம் மடத்தனமானது, இறைவன் வெறுக்கக்கூடிய ஒரு குணமும் ஆகும்.

ஆனால் ரோஷம் என்பது கோபத்தை போன்றதல்ல. கோபத்தோடு இணைந்து ஏற்படும் ஒருவகை உணர்வு. இது பெரும்பாலும் காரண காரியத்தோடு ஏற்படக்கூடியது. பலத்தருனங்களில் இறைவன் தனது அடியார்களிடம் விரும்புகின்ற ஒரு குணமும் கூட.

இன்னும் கூடுதலாக சொல்வதாக இருந்தால் கோபம் என்பது நாம் சந்திக்கின்ற அனைவரின்மீதும் சட்டென ஏற்பட்டு விடும்.

ஆனால் நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, யார்மீது அதிக அக்கறையும் கவனமும் உரிமையும் எடுத்துக் கொள்கிறோமோ அவர்கள் மீது மட்டும் தான் ரோஷம் என்ற குணம் வெளிப்படும்.

நாம் மேலே சுட்டிக்காட்டிய ஹதீஸ் இறைவனின் கோபத்தை பற்றிப் பேசவில்லை. ரோஷத்தை பற்றி பேசுகிறது. இறைவன் பொதுவாகவே இறை நம்பிக்கையாளர்களை நேசிக்கிறான்.

ஆகவே தன்னை நம்பி அழகிய முறையில் நன்மையில் ஈடுபட்டு வரும் ஒரு இறை நம்பிக்கையாளன், தான் தடுத்த ஒன்றை துணிந்து செய்கின்றபொழுது அந்த அடியான் மீது இறைவன் ரோஷப்படுகிறான்.

இறைவனது கோபம் மட்டுமல்ல, அவனது ரோஷமும் நம்மை பாவங்களில் இருந்து திருத்த வேண்டும். நாம் நன்மையில் இருக்க வேண்டும் தீமையை நோக்கி செல்லக்கூடாது என்பதற்காவே இறைவன் நம்மீது ரோஷப்படுகிறான். அன்பு கலந்த கோபம் என்றும் இதனை சொல்லலாம்.

அன்பு கலந்த கோபம் ஏராளமான நபர்களை மாற்றி இருக்கிறது. அதற்கு உதராணமாக கணவன் மனைவி உறவுக்குள் ஏற்படும் ரோஷ உணர்வுகளை சொல்லலாம்.

நாம் இறைவனது நேசத்தை விரும்புகிறோம் என்றால் அவனது ரோஷத்தை தட்டாமல் இவ்வுலகில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

இறைவனை நேசிக்கும், இறைவனது நேசத்தை நேசிக்கும் எல்லா இறை நம்பிக்கையாளர்களுக்கும் 
எனது பிரார்த்தனையை சமர்ப்பித்தவனாக.......!

No comments:

Post a Comment