தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, April 4, 2017

தாயின் பாசத்தை உணர்த்தும் தருணம்!!!



தனது தேவைகளை தானே பூர்த்தி செய்ய முடியாத நிலை பெற்றோர்களுக்கு ஏற்படும் பொழுது அந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சுமையாகி விடுகின்றனர்!

அவர்களது மரணமே பிள்ளைகளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக ஒரு தருணத்தில் மாறிவிடுகிறது!

இது இன்றைய பெரும்பாலான பிள்ளைகளின் நிலைமை.....!!!

மனவளர்ச்சி குன்றிய நிலையிலோ, ஊனமான நிலையிலோ, படுத்த படுக்கையோடுத்தான் இந்தப்பிள்ளையின் வாழ்வு முடிக்கப்படும் என்ற நிலையிலோ ஒரு பிள்ளை பிறந்து விட்டால் 

அதை இறைவன் கொடுத்த அன்பளிப்பாக நினைக்கும் இளகிய உள்ளம் தான் தாய்மை சகோதரா!

எது உண்மையில் சுமையோ அதை சுகமாக நினைத்து தனது மரணம் வரைக்குமோ அல்லது அந்தக் குழந்தையின் மரணம் வரைக்குமோ
அன்போடும் அரவணைப்போடும் பலவீனமான பிள்ளையின் வாழ்வுக்காக பாடுபடும் தாய்மார்களை நாம் உலகில் கண்கூடாக பார்க்க முடிகிறது.

மனவளர்ச்சி குன்றிய பிள்ளை வளர்ந்த பின் தாய்க்கு எதுவும் தேடிக்கொடுக்க முடியுமா?

பிறகு ஏன் அந்தத் தாய் இப்பிள்ளையை அரவணைத்து வளர்க்கிறாள் என்று சிந்தித்தோமா???

வயது முதிர்ந்த நிலையில் உள்ள பெற்றோர்களின் மரணம் பிள்ளைக்கு இன்பமாக மாறிப்போகும் கொடூரமான நிலை ஒருபக்கம் இருக்க,

தாயோ தனது பலவீனமான காலம் வரைக்கும் மனவளர்ச்சி குன்றிய பிள்ளையை அன்போடு வளர்த்தெடுத்து

அவனது மரணத்தைக் கண்டு வெம்மி அழுகிறாள்...!

உண்மையில் இந்த இடம் தான் எனக்கு தாய்மையின் பாசத்தை அதிகம் உணரத்தூண்டுகிறது.

நாம் எந்த தாயை பராமரிக்க முடியவில்லை என்று விரட்டுகிறோமோ,

அந்த தாய்க்கு நாம் ஒரு மனவளர்ச்சி குன்றிய பிள்ளையாகவோ, கை கால் ஊனமுற்ற பிள்ளையாகவோ பிறந்து இருந்தால்

அந்த தாய் நம்மை ஒருபோதும் விரட்டி இருக்க மாட்டாள் என்பதை உணர்ந்து கொள் தோழா!

இறைவனது உபதேசத்தைக் கேள்:

"என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்!

அவ்விருவரையும் விரட்டாதீர்!

மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!

"சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் 
இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 17:23,24.

No comments:

Post a Comment