தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, April 4, 2017

உண்மைக்கதை இல்லையென்றாலும் உலகில் நடக்கும் கதைதான்....!!!




ஒரு சிறுவன் அவனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்.
சிறுவர்களிடையே மோதல் வருகிறது.

ஒரு சிறுவன் மீது தான் தவறு என்று சண்டையிட்ட ஏனைய சிறுவர்கள்
அழுதுகொண்டே அவர்களது பெற்றோர்களை அழைத்து வருகின்றனர்.

தவறு செய்ததாக கணிக்கப்பட்ட சிறுவனை ஏனைய சிறுவர்களின் பெற்றோர்கள் திட்டித்தீர்த்து விடுகின்றனர்.

மனம் உடைந்த அந்த பிஞ்சு உள்ளம்
அழுதுகொண்டே தமது பெற்றோர்களிடம் இவற்றை முறையிட ஓடுகிறது..........

தமது கவலையை பெற்றோர்களிடம் முறையிடுகிறது.

ஆனால் பெற்றோர்கள் அந்த சிறுவனுக்காக வாதாட வரவில்லை!!!!!

காரணம்.....

கபடமில்லாத அந்தக் குழந்தை முறையிட்ட இடம்
பெற்றோர்களின் அடக்கஸ்தலம்....!!!
_________________________________________________________________________________

#நாம் அனுபவிக்கும் இன்ப துன்ப உணர்வுகளை போன்று கைவிடப்பட்ட அனாதைகளுக்கும் உணர்வுகள் இருக்கிறது தோழர்களே!!!

#அவற்றை முறையிடத்தான் நாம் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை!!!

#ரோட்டுக்கடையில் நாம் சாப்பிடும்போது
நமது உணவை பசியோடு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் அனாதைக் குழந்தைகளை
நாம் எப்போது கவனித்திருக்கிறோம்???!!!

#வெயிலின் கடுமையால் நமது குழந்தைகள் பாதிக்கப்படுகிறது என்று வீட்டு வசதிகளை அதிகப்படுத்த பல இலட்சங்களை வாரி இறைக்க முன்வரும் நாம்,
வீதியில் தமது மேனியை மறைக்கக்கூட போதிய உடை இல்லாமல் சுருண்டு கிடக்கும் பச்சிளம் சிறார்களை எங்கே கவணித்தோம்???!!!

#வீட்டில் வைத்து அரவணைக்க இயலாவிட்டாலும், இயன்றவரையாவது இவர்களை போன்றோரை அரவணைக்க முயற்ச்சிப்போம்!!!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"நானும் அநாதையின் காப்பாளரும் -அந்த அநாதை உறவுக்காரராகட்டும் அந்நியராகட்டும்- சொர்க்கத்தில் இப்படி இருப்போம்" என்று சைகை செய்து கூறினார்கள்.
இதை அறிவிக்கும்போது மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், தமது சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் (அவற்றை இணைத்துக் காட்டி) சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5704.

No comments:

Post a Comment