உலகம் படைக்கப்பட்டது முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை அனுப்ப்ப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் உள்ளதா?
ஏ.சுலைமான், விருத்தாசலம்.
பதில்:
நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத், தப்ரானி ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அலீ பின் யஸீத் அல் ஹானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவராவார்.
இது போல் மற்றொரு ஹதீஸ் இப்னு ஹிப்பான் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் ஹிஷாம் அல்கஸ்ஸானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.
அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அனுப்பியுள்ளான். அவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படவில்லை என்பதே சரியான நம்பிக்கையாகும்.
இந்த எண்ணிக்கையை விட அதிகமான நபிமார்கள் அனுப்பப்பட்டு இருந்தால் அவர்களை நாம் மறுத்த குற்றம் ஏற்படும்.
அதை விட குறைவான எண்ணிக்கையில் நபிமார்கள் அனுப்பப்பட்டு இருந்தால் நபியல்லாதவர்களை நபி என்று நம்பிய குற்றம் ஏற்படும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Source: www.onlinepj.com
No comments:
Post a Comment