தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, January 7, 2016

கள்ளக்கிருத்து உமா சங்கருக்கு பதிலடி! தொடர் - 2

பலதாரமணம் செய்தல் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியா? PRAT 2


சென்ற பதிவில், உமா சங்கர் என்ற மதவெறியன் இஸ்லாத்தை பற்றி சொல்லித்திரியும் அவதூறுகளில் ஒன்றான பலதாரமணம் பற்றிய தகவல்களை நாம் பகிர்ந்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் உலகின் பல நாடுகளில் உள்ள இஸ்லாம் கூறும் எதார்த்த நிலைகளைப்பற்றிய ஒரு தெளிவை தரலாம் என்று எண்ணுகிறேன்.

From : www.geohive.com:-

Total Population by Gender and Gender Ratio, by Country (pop. over 200,000)

Entity
Total
Male
Female
Belgium
10,712,066
5,250,531
5,461,535
Belize
311,627
153,694
157,933
Benin
8,849,892
4,363,677
4,486,215
Bolivia (Plurinational State of)
9,929,849
4,952,471
4,977,378
Bosnia and Herzegovina
3,760,149
1,807,413
1,952,736
Brazil
194,946,470
95,937,239
99,009,231
Bulgaria
7,494,332
3,622,669
3,871,663
Burkina Faso
16,468,714
8,172,271
8,296,443
Burundi
8,382,849
4,113,382
4,269,467
Cambodia
14,138,255
6,916,582
7,221,673
Cameroon
19,598,889
9,782,551
9,816,338
Canada
34,016,593
16,869,134
17,147,459
Central African Republic
4,401,051
2,167,862
2,233,189
Chad
11,227,208
5,582,331
5,644,877
Chile
17,113,688
8,461,864
8,651,824
China, Hong Kong SAR
7,053,189
3,341,850
3,711,339
Colombia
46,294,841
22,774,767
23,520,074
Congo, Democratic Republic of the
65,965,795
32,808,299
33,157,496
Croatia
4,403,330
2,119,803
2,283,527
El Salvador
6,192,993
2,941,733
3,251,260
Ethiopia
82,949,541
41,281,577
41,667,964
France
62,787,427
30,548,615
32,238,812
Georgia
4,352,244
2,049,943
2,302,301
Germany
82,302,465
40,340,771
41,961,694
Guatemala
14,388,929
7,011,884
7,377,045
Haiti
9,993,247
4,956,750
5,036,497
Hungary
9,983,645
4,739,632
5,244,013
Indonesia
239,870,937
119,622,439
120,248,498
Italy
60,550,848
29,615,920
30,934,928
Japan
126,535,920
61,654,165
64,881,755
Kazakhstan
16,026,367
7,694,628
8,331,739
Korea, Dem. People's Republic of (North)
24,346,229
11,944,269
12,401,960
Mexico
113,423,047
55,933,041
57,490,006
Morocco
32,481,912
15,949,320
16,532,592
Myanmar
47,963,012
23,639,885
24,323,127
Nepal
29,959,364
14,862,219
15,097,145
Russian Federation
142,958,164
66,134,540
76,823,624
Sierra Leone
5,867,536
2,866,092
3,001,444
Slovenia
2,029,680
992,732
1,036,948
South Africa
50,132,817
24,824,300
25,308,517
Spain
46,076,989
22,748,323
23,328,666
Sri Lanka
20,859,949
10,299,114
10,560,835
Thailand
69,122,234
33,972,348
35,149,886
Togo
6,027,798
2,985,193
3,042,605
Turkey
72,752,325
36,285,250
36,467,075
Ukraine
45,448,329
20,913,685
24,534,644
United Kingdom
62,035,570
30,515,530
31,520,040
United States of America
310,383,948
153,139,563
157,244,385
Uzbekistan
27,444,702
13,640,744
13,803,958
Viet Nam
87,848,445
43,417,900
44,430,545
Argentina
40,412,376
19,768,407
20,643,969
Armenia
3,092,072
1,439,180
1,652,892
Australia
22,268,384
11,092,660
11,175,724
Austria
8,393,644
4,095,508
4,298,136
Azerbaijan
9,187,783
4,543,839
4,643,944


நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள புள்ளிவிவர கணக்குகளை நன்றாக பாருங்கள். இந்த புள்ளி விவர கணக்குகள் மொத்த நாடுகளில் வசிக்கும் ஆண் பெண் ஆகிய இருபாலரின் எண்ணிகையை  நமக்கு தருகின்றன. இதில் நாம் ஒரு சில நாடுகளின் புள்ளி விவரங்களை மட்டுமே இங்கே பதிந்துள்ளோம். இன்னும் அதிகமான விவரங்களை அறிய மேற்கண்ட இணைப்பை கிளிக் செய்தால் பார்வையிடலாம். 

நான் சுட்டிக்காட்டியுள்ள இந்த புள்ளிவிவரக் கணக்கின்படி உலகிலுள்ள அதிகப்படியான நாடுகளில், ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக காணப்படுகின்றனர். இதை நாம் ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்றால், பலதாரமணம் என்பதை விமர்சிக்கும் உமா சங்கரைப் போன்ற உலக எதார்த்தமறியா மடையர்களை நோக்கி, இதை வைத்து சில கேள்விகளை நாம் முன்வைக்க இருக்கிறோம்!

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் முறையானது, நான்கு பெண்கள் வரை ஒருவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இஸ்லாம் கூறும் கட்டளை முறையற்றது என்று கூறும் இவர்கள், சற்று நாம் மேலே போட்டிருக்கும் பட்டியலை கண்ணை தெளிவாக துடைத்துவிட்டு படிக்கட்டும். 

உலகிலுள்ள அதிகபட்ச நாடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக இருப்பதாக இந்த பட்டியல் கூறுகிறது. அப்படியென்றால், உங்களின் வாதப்படி இந்த நாடுகளிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரே ஒரு பெண்ணையே திருமணம் செய்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்படி அனைவருமே திருமணம் செய்துவிட்டால் சில நாடுகளில் நூறாகவும், சில நாடுகளில் ஆயிரமாகவும், சில நாடுகளில் இலட்சமாகவும் திருமணம் ஆகாத பெண்கள் எஞ்சி இருப்பர்! இவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக திருமணம் செய்யாமல் இல்லை, மாறாக திருமணம் செய்ய ஒரு ஆண்கூட இல்லாத நிலையினால் இந்த நிலைக்கு தள்ளப்படுவர். இத்தகைய சூழலில் மாட்டியிருக்கும் பெண்களுக்கு, உமா சங்கர் போன்ற அறிவாளிகள் என்ன சட்டம் சொல்லப் போகிறார்கள்???

ஒன்று திருமணமான ஆணினுடைய மனைவி இறந்துபோக வேண்டும். ஒருவேளை இப்படியொரு சூழல் அமையுமென்றால் இன்னொரு பெண்ணிற்கு வாழ்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் நாம் எதிர்பார்த்தது போல் அமையாது. காரணம் அந்த பெண் எப்போது இறந்து போவாள் என்று எண்ணியே இளமைக் காலம் முடிந்து விடும். பெரும்பாலும் வயது முதிர்ந்த பருவத்தில்தான் பெண்கள் இறக்கின்றனர் என்பதும் புள்ளிவிவரம் கூறும் மற்றுமொரு  உண்மை. ஆக இந்த வாயிலும் தோழ்வியில் மூடப்படும்.

அப்படி இல்லையென்றால் அடுத்த வாய்ப்பு, அந்த பெண் விபச்சாரத்தில் விழ வேண்டும். காரணம் முறையாக திருமணம் செய்ய ஆண்கள் இல்லை!

அப்படியும் இல்லையென்றால், ஒழுக்கமான பெண்கள் என்பதால் இளமை இறந்து போகும் வரை முதிர் கன்னிகளாக கிடந்தது சாக வேண்டியதுதான்.

இந்த மூன்றைத் தவிர வெறு எந்த சட்டங்களையும் இதற்கு கூற முடியாது!!!

இதுபோன்ற சூழலில் சிக்கித் தவிக்கும் எந்தவொரு ஒழுக்கமான பெண்ணும் இஸ்லாம் கூறும் முறையான திருமண வாழ்வையே தேர்ந்தெடுப்பாள். காரணம் விபச்சாரம் என்பது இஸ்லாம் தடை செய்யாத போதிலும் மானக்கேடான செயல்தான் என்பதை உலகம் அறிந்துதான் இருக்கிறது.

ஆகவே ஒரு ஒழுக்கமுள்ள பெண் விபச்சாரத்தில் விழ மாட்டாள். முதிர்கன்னி பருவம் வரை காலத்தைக் கடத்தவும் மாட்டாள், காரணம் ஆண் பெண் இணைதல் என்பது பசி தாகத்தை போன்ற ஒரு இயற்கையான தேவை. அதற்கான சந்தர்ப்பத்தில் இந்த தேவையை அனைவரும் பெற்றுத்தான் ஆக வேண்டும். இந்த சந்தர்ப்பம் தாமதப்படுமேயானால், ஒருநாள் இல்லை ஒருநாள் தவறான பாதைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பதையும் எந்த ஒழுக்கமுள்ள பெண்ணும் ஏற்றுக் கொள்வாள்.

ஆகவே இதுபோன்ற சூழலில் வசிக்கும் பெண்கள் கேவலத்தில் விழுவதைக் காட்டிலும், தான் இரண்டாவதாகவோ அல்லது மூன்றாவதாகவோ அல்லது நான்காவதாகவோ ஒரு ஆணால் திருமணம் செய்யப்படுபதையே தேர்ந்தெடுப்பாள். அவ்வாறு தேர்வு செய்யவில்லை என்றால் நஷ்டம் பெண்களுக்குத்தான். இதைத்தான் இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாம் இறைவனது மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு அழகிய சான்று. ஒரு ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்யலாம் என்று இறைவன் சட்டம் சொன்னது போன்று, உலகின் பல நாடுகளில் அதற்கு ஏற்றார்போல் சூழலையும் இறைவன் அமைத்துள்ளான். இந்த உண்மையை எவராலும் மறுக்க முடியாது.

ஒருவன் இரண்டாவது திருமணம் செய்ய விரும்புகிறான் என்றால் அதற்கு அவன் பேண வேண்டிய அவசியமான, நியாமான நியதிகளைப்பற்றி நாம் சென்ற பதிவில் விரிவாகவே விளக்கியுள்ளோம். அந்த நியதிகளுக்கு உடன்படாத ஒருவர் இரண்டாம் திருமணம் செய்ய அனுமதி கிடையாது. ஆகவே ஆண்கள், இரண்டாகவோ மூன்றாகவோ நான்காகவோ திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டம் சூழல் குறித்த நியாமான சட்டமே அன்றி ஆணுக்கு வழங்கப்பட்ட சலுகை என்று தவறாக புரிந்துகொள்ளக் கூடாது.

இன்னும் ஏராளம் இதுபற்றி விவரிக்கலாம். என்றாலும் இந்த சிறிய விளக்கமே போதும், இஸ்லாம் கூறிய இந்த சட்டம் ஏற்புடையதே என்பதை நியாமான உணர்வு கொண்ட நபர்கள் புரிந்துகொள்ள. இந்தப்பதிவை நம்மை நோக்கி விமர்சிக்கும் உமா சங்கரைப் போன்ற அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்.

பதிந்தவர்
முஹம்மது மஷாரிக்.



No comments:

Post a Comment