தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, April 4, 2017

கவணம் தேவை சகோதரிகளே!!!



صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا : قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا ، وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை.

(முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.

அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி,
நூல் : முஸ்லிம் 4316.

அற்ப உலக இன்பத்திற்காக மறுமை வாழ்வை இழந்து விட வேண்டாம் சகோதரிகளே.....!

நமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களின் ஆடை ஒழுங்குகளில் கொஞ்சம் கவணமெடுங்கள்! 

நமது கவணக்குறைவால் நமது மறுமை வாழ்வும் கேள்விக்குறியாக, நாம் நேசிக்கும் பலரும் நரகம் சென்றுவிடக் கூடும்!

அல்லாஹ் பாதுகாப்பானாக!!!

தாயின் பாசத்தை உணர்த்தும் தருணம்!!!



தனது தேவைகளை தானே பூர்த்தி செய்ய முடியாத நிலை பெற்றோர்களுக்கு ஏற்படும் பொழுது அந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சுமையாகி விடுகின்றனர்!

அவர்களது மரணமே பிள்ளைகளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக ஒரு தருணத்தில் மாறிவிடுகிறது!

இது இன்றைய பெரும்பாலான பிள்ளைகளின் நிலைமை.....!!!

மனவளர்ச்சி குன்றிய நிலையிலோ, ஊனமான நிலையிலோ, படுத்த படுக்கையோடுத்தான் இந்தப்பிள்ளையின் வாழ்வு முடிக்கப்படும் என்ற நிலையிலோ ஒரு பிள்ளை பிறந்து விட்டால் 

அதை இறைவன் கொடுத்த அன்பளிப்பாக நினைக்கும் இளகிய உள்ளம் தான் தாய்மை சகோதரா!

எது உண்மையில் சுமையோ அதை சுகமாக நினைத்து தனது மரணம் வரைக்குமோ அல்லது அந்தக் குழந்தையின் மரணம் வரைக்குமோ
அன்போடும் அரவணைப்போடும் பலவீனமான பிள்ளையின் வாழ்வுக்காக பாடுபடும் தாய்மார்களை நாம் உலகில் கண்கூடாக பார்க்க முடிகிறது.

மனவளர்ச்சி குன்றிய பிள்ளை வளர்ந்த பின் தாய்க்கு எதுவும் தேடிக்கொடுக்க முடியுமா?

பிறகு ஏன் அந்தத் தாய் இப்பிள்ளையை அரவணைத்து வளர்க்கிறாள் என்று சிந்தித்தோமா???

வயது முதிர்ந்த நிலையில் உள்ள பெற்றோர்களின் மரணம் பிள்ளைக்கு இன்பமாக மாறிப்போகும் கொடூரமான நிலை ஒருபக்கம் இருக்க,

தாயோ தனது பலவீனமான காலம் வரைக்கும் மனவளர்ச்சி குன்றிய பிள்ளையை அன்போடு வளர்த்தெடுத்து

அவனது மரணத்தைக் கண்டு வெம்மி அழுகிறாள்...!

உண்மையில் இந்த இடம் தான் எனக்கு தாய்மையின் பாசத்தை அதிகம் உணரத்தூண்டுகிறது.

நாம் எந்த தாயை பராமரிக்க முடியவில்லை என்று விரட்டுகிறோமோ,

அந்த தாய்க்கு நாம் ஒரு மனவளர்ச்சி குன்றிய பிள்ளையாகவோ, கை கால் ஊனமுற்ற பிள்ளையாகவோ பிறந்து இருந்தால்

அந்த தாய் நம்மை ஒருபோதும் விரட்டி இருக்க மாட்டாள் என்பதை உணர்ந்து கொள் தோழா!

இறைவனது உபதேசத்தைக் கேள்:

"என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்!

அவ்விருவரையும் விரட்டாதீர்!

மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!

"சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் 
இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 17:23,24.

இறைவனது கருணை இல்லை என்றால்????!!!!



இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அவனது வரம்புகளை ஏதோ ஒரு வகையில் மீறுபவர்கள் தான். நாம் தேடும் மன்னிப்பின் காரணமாக இறைவன் கருணை புரிந்து நமது பாவங்களை மன்னிக்கிறான்.

மார்க்கத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு அழைப்பாளரும் கூட
பல சந்தர்ப்பங்களில் பாவங்களை தொடுபவர்கள் தான். எவரும் இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் அல்ல.

ஆனால், இறைவனது அச்சத்தை தூண்டும் எண்ணற்ற உபதேசங்களை செய்யும் நபர்கள்,

சொல்பவற்றை அவர்களது வாழ்வில் செயல்படுத்தவில்லை என்றால்....

அவர்கள் தமது குடல்களை கையில் சுமந்த நிலையில் நரக வேதனையில் சுற்றி திரிவார்கள் என்று நபியவர்கள் சொன்னார்கள்.

#ஒரு அழைப்பாளனாக மறுமையின் எனது நிலையை சிந்திக்கிறேன்.

இறைவனது கருணை இல்லை என்றால்????!!!!

அன்பு செலுத்த தாமதம் வேண்டாம்!



பிறர் சொல்லும் உபதேசங்களை கேட்டு திருந்தும் மனிதர்களை விட,
பட்டுத் திருந்தும் மனிதர்கள் தான் உலகில் அதிகம்...!!!

இருக்கும்போதே இயன்றவரை அன்பு செலுத்தி விடுங்கள்!!!

காலம் கடந்து விட்டால்

அன்பு செலுத்த நாம் ஏங்கினாலும்

அதை பெற்றுக்கொள்ள அவர்கள் இருக்க மாட்டார்கள்.

#அன்பானவர்களின் பிரிவு உணர்த்தும் வலி.

உண்மைக்கதை இல்லையென்றாலும் உலகில் நடக்கும் கதைதான்....!!!




ஒரு சிறுவன் அவனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்.
சிறுவர்களிடையே மோதல் வருகிறது.

ஒரு சிறுவன் மீது தான் தவறு என்று சண்டையிட்ட ஏனைய சிறுவர்கள்
அழுதுகொண்டே அவர்களது பெற்றோர்களை அழைத்து வருகின்றனர்.

தவறு செய்ததாக கணிக்கப்பட்ட சிறுவனை ஏனைய சிறுவர்களின் பெற்றோர்கள் திட்டித்தீர்த்து விடுகின்றனர்.

மனம் உடைந்த அந்த பிஞ்சு உள்ளம்
அழுதுகொண்டே தமது பெற்றோர்களிடம் இவற்றை முறையிட ஓடுகிறது..........

தமது கவலையை பெற்றோர்களிடம் முறையிடுகிறது.

ஆனால் பெற்றோர்கள் அந்த சிறுவனுக்காக வாதாட வரவில்லை!!!!!

காரணம்.....

கபடமில்லாத அந்தக் குழந்தை முறையிட்ட இடம்
பெற்றோர்களின் அடக்கஸ்தலம்....!!!
_________________________________________________________________________________

#நாம் அனுபவிக்கும் இன்ப துன்ப உணர்வுகளை போன்று கைவிடப்பட்ட அனாதைகளுக்கும் உணர்வுகள் இருக்கிறது தோழர்களே!!!

#அவற்றை முறையிடத்தான் நாம் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை!!!

#ரோட்டுக்கடையில் நாம் சாப்பிடும்போது
நமது உணவை பசியோடு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் அனாதைக் குழந்தைகளை
நாம் எப்போது கவனித்திருக்கிறோம்???!!!

#வெயிலின் கடுமையால் நமது குழந்தைகள் பாதிக்கப்படுகிறது என்று வீட்டு வசதிகளை அதிகப்படுத்த பல இலட்சங்களை வாரி இறைக்க முன்வரும் நாம்,
வீதியில் தமது மேனியை மறைக்கக்கூட போதிய உடை இல்லாமல் சுருண்டு கிடக்கும் பச்சிளம் சிறார்களை எங்கே கவணித்தோம்???!!!

#வீட்டில் வைத்து அரவணைக்க இயலாவிட்டாலும், இயன்றவரையாவது இவர்களை போன்றோரை அரவணைக்க முயற்ச்சிப்போம்!!!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"நானும் அநாதையின் காப்பாளரும் -அந்த அநாதை உறவுக்காரராகட்டும் அந்நியராகட்டும்- சொர்க்கத்தில் இப்படி இருப்போம்" என்று சைகை செய்து கூறினார்கள்.
இதை அறிவிக்கும்போது மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், தமது சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் (அவற்றை இணைத்துக் காட்டி) சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5704.