தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, February 3, 2015

முகநூலின் தற்போதைய நிலை!!!


போதைக்கு அடிமையாவதைப் போன்று 
பலரும் இன்றைக்கு இந்த முகநூலிற்கு அடிமையாகி கிடக்கிறார்கள்!

பிறரிடம் லைக் மற்றும் ஷேர் வாங்குவதற்காக உயிரையே இழந்த மூடர்களும் கூட இருக்கிறார்கள்!
இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.....
அதிலும் குறிப்பாக.,
மார்க்கப்பணி செய்யப் போகிறோம் என்று முகநூலை துறந்த பலரும் தன்னை அறியாமலேயே தம்மிடம் இருக்கும் அரைகுறை மார்க்கத்தையும் துறந்து கொண்டிருக்கிறார்கள்.

எதையாவது பதிவு செய்து லைக் வாங்கி விட வேண்டும் என்று அல்லாஹ்வின் மற்றும் அல்லாஹ்வின் தூதரின் வார்த்தைகளைக் கூறு போடுகிறார்கள்.
தொழுகையைப் பற்றிய பதிவுகளைப் பதியும் இஸ்லாமியர்கள் தம்மிடமே கேள்வி கேட்டுக் கொள்ளட்டும்
நாம் அந்தத் தொழுகையில் பேணுதலாக இருக்கிறோமா என்று!

பலரின் தொழுகைகள் பாழாகிக் கொண்டிருக்கின்றன முகநூல் என்ற போதையால்., 
ஆனால் முகநூலிலோ மார்க்கம் சம்மந்தமான பதிவுகள்!!!???

உன்னை தூய்மைப்படுத்த வக்கில்லாமல் பிறருக்கு நீ உபதேசிக்கிறாய் என்றால் அது தெளிவாக முகஸ்துதி என்ற பண்பை தான் காட்டுகிறது.
‪#‎குறிப்பு‬: இதனால்(பிறருக்காக செய்வதனால்) எதற்குமே பயனில்லாத அற்ப லைக்குகளைத் தான் உங்களால் வாங்க முடியுமே தவிர
இறைவனிடம் இவற்றிற்கு எந்த மதிப்பும் கிடைக்காது.

நம்ம பாஷையில் சொல்ல வேண்டுமானால்
‪#‎பத்து‬ காசுக்கு கூட பிரயோஜனமில்ல....
"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
நீங்கள் செய்யாததை சொல்வது அல்லாஹ்விடம் கடும் கொபத்திற்குரியது."
திருக்குர்ஆன் 61:2,3.

No comments:

Post a Comment