தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, February 23, 2015

ஹீல்ஸ் செப்பல் அணிபவர்களே!!!


மனிதனை வழிகெடுக்க இறைவனிடம் அனுமதி பெற்று வந்த ஷைத்தான், காலச்சூழலுக்கு ஏற்றார் போல மனிதனை வழிகெடுத்து கொண்டே தான் இருக்கிறான். மனிதன் எத்துனை வகையான நாகரீகக் கோட்பாட்டோடு வாழ்க்கையில் மாறிக் கொண்டே இருந்தாலும், ஷைத்தானும் அந்த நாகரிக வளர்ச்சிக்கு ஏற்றார்போல் வழி கெடுக்கும் கருவிகளை மனிதர்களில் சிலரைக் கொண்டே உருவாக்கி கொண்டுதான் இருக்கிறான்.
அதில் இன்றைய தினம் நாம் கூற இருக்கின்ற தகவல் ஷைத்தானது வழிகெடுக்கும் நவீன கருவியான ஹீல்ஸ் வகை செருப்புக்களைப் பற்றி.
இந்த வகை செருப்புக்கள் இன்றைய நாகரீக கண்டுபிடிப்பாக பலரால் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை செருப்புக்கள் எதை நோக்கமாகக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டன என்று இதை பயன்படுத்தும் நூற்றில் தொன்னூற்று ஒன்பது சதவீத பெண்களுக்கு தெரியாது. இருப்பினும் இவைதான் உலகில் பெரும்பான்மை பெண்களால் பயன்படுத்த படுகிறது.
இதைப் பயன்படுத்துவோர் நாம் அறிந்த வகையில் அதிக பட்சம் இரண்டு வகையான நோக்கம் உடைய பெண்கள் தான் உள்ளனர்.
ஒன்று, கவர்ச்சிக்காக பயன்படுத்தும் பெண்கள்.
மற்றொன்று, புதுமையான கண்டுபிடிப்பு என்பதற்காக பயன்படுத்தும் பெண்கள்.
இந்த இரண்டு வகையினருமே ஹீல்ஸ் எதற்காக கண்டுபிடிக்க பட்டது என்ற நோக்கத்தை உணர்ந்து பெரும்பாலும் இதை அணிவது கிடையாது என்பது உண்மை. எனினும் இவை கண்டுபிடிக்க பட்ட காரணத்தை இந்த இரண்டு வகையினரும் அறிந்து கொண்டால்.,
முதல் வகையினர் இன்னும் அதிகமாக இவற்றை பயன்படுத்துவார்கள், இரண்டாம் வகையினர் (உண்மை முஃமின்களாக இருந்தால்) இதை அணிவதை உடனே தவிர்த்து கொள்வார்கள்.
இப்போது இந்த ஹீல்ஸ் வகை செருப்புக்கள் கண்டுபிடிக்க பட்டதன் நோக்கத்தை அறிவோம்.
இயற்கையாகவே பெண்களின் உடலமைப்பு ஆண்களை கவரும் வண்ணமாகத் தான் படைக்கப்பட்டுள்ளது. அந்த அழகமைப்பை பிறருக்கு காட்டுவதற்காகவே பெண்கள் சார்ந்த அனைத்து சாதனங்களும் தற்போதைய சூழலில் வடிவமைக்க படுகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் பெண்கள் ஆண்களுக்கான போகப்பொருட்களாகத் தான் இந்த நாகரிக உலகில் பெரிதும் பயன்படுத்த படுகின்றனர்.
அதில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு அழகு சாதனம் தான் இந்த ஹீல்ஸ். “பெண்கள் ஹீல்ஸ் அணிவதின் மூலம் அவர்களின் பின்னங்கால் பகுதி அதிகமாக உயர்த்தப்பட்டு பெண்களின் பின்புறம் (இதற்கு மேல் நாகரீகமாக கூற முடியாது என்று நினைக்கிறேன்) தூக்கி காட்டப்படுகிறது. ஆண்களை அதிகம் கவரும் பெண்களின் பாகங்களில் இந்தப் பகுதியும் ஒன்றாகும்”. 
(உண்மையை கூற வேண்டும், ஆகவே வார்த்தைகளை கவனிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்)

இப்போது புரிந்திருக்கும் எதற்காக ஹீல்ஸ் செப்பல் தயாரிக்கப்படுகிறது என்று. இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால்!
எமது இஸ்லாமிய சகோதரிகளில் சிலர், முறையாக ஃபர்தா அணிந்து பார்வைகளைத் தாழ்த்தி வீதியில் செல்கின்றனர் - பாதங்களில் ஹீல்ஸ் செப்பல்களோடு!!! 
இதற்கு காரணம் இந்த அசிங்கமான செருப்புக்கள் நம்மை அழகுபடுத்தி காட்டுகின்றன என்பதை அறியாமையே.

ஈமானில் உறுதியோடு செயல்படும் என் இஸ்லாமிய சகோதரிகளே! 
இந்த கேவலமான செருப்புக்களை தூக்கி எறியுங்கள், 
உங்களை அறியாமலேயே ஷைத்தான் இந்த செருப்புக்களின் மூலம் உங்களது அழகினை அந்நியர்களுக்கு வெளிப்படுத்தி காட்டுகிறான்.

பெற்றோர்களே! உங்களது வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு ஹீல்ஸ் செப்பலை வாங்கிக் கொடுக்காதீர்கள். அறிந்து கொண்டே வாங்கிக் கொடுப்பது உங்கள் பெண் பிள்ளைகளின் பின்புறத்தை பிறர் பார்த்து ரசிக்க நீங்களே அனுமதி வழங்குவதை போன்றதாகும்.
விளங்கிய பின்னும் நாம் தவறு செய்யக்கூடாது! 
அல்லாஹ் விளங்கி செயல்படும் நன்மக்களாக நம் அனைவர்களையும் ஆக்குவானாக!

“தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.”
திருக்குர்ஆன் 24:31.

“பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து பல்வரிசையைப் பிரித்து கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி 5931.


No comments:

Post a Comment