தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, January 7, 2016

கள்ளக்கிருத்து உமா சங்கருக்கு பதிலடி! தொடர் - 2

பலதாரமணம் செய்தல் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியா? PRAT 2


சென்ற பதிவில், உமா சங்கர் என்ற மதவெறியன் இஸ்லாத்தை பற்றி சொல்லித்திரியும் அவதூறுகளில் ஒன்றான பலதாரமணம் பற்றிய தகவல்களை நாம் பகிர்ந்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் உலகின் பல நாடுகளில் உள்ள இஸ்லாம் கூறும் எதார்த்த நிலைகளைப்பற்றிய ஒரு தெளிவை தரலாம் என்று எண்ணுகிறேன்.

From : www.geohive.com:-

Total Population by Gender and Gender Ratio, by Country (pop. over 200,000)

Entity
Total
Male
Female
Belgium
10,712,066
5,250,531
5,461,535
Belize
311,627
153,694
157,933
Benin
8,849,892
4,363,677
4,486,215
Bolivia (Plurinational State of)
9,929,849
4,952,471
4,977,378
Bosnia and Herzegovina
3,760,149
1,807,413
1,952,736
Brazil
194,946,470
95,937,239
99,009,231
Bulgaria
7,494,332
3,622,669
3,871,663
Burkina Faso
16,468,714
8,172,271
8,296,443
Burundi
8,382,849
4,113,382
4,269,467
Cambodia
14,138,255
6,916,582
7,221,673
Cameroon
19,598,889
9,782,551
9,816,338
Canada
34,016,593
16,869,134
17,147,459
Central African Republic
4,401,051
2,167,862
2,233,189
Chad
11,227,208
5,582,331
5,644,877
Chile
17,113,688
8,461,864
8,651,824
China, Hong Kong SAR
7,053,189
3,341,850
3,711,339
Colombia
46,294,841
22,774,767
23,520,074
Congo, Democratic Republic of the
65,965,795
32,808,299
33,157,496
Croatia
4,403,330
2,119,803
2,283,527
El Salvador
6,192,993
2,941,733
3,251,260
Ethiopia
82,949,541
41,281,577
41,667,964
France
62,787,427
30,548,615
32,238,812
Georgia
4,352,244
2,049,943
2,302,301
Germany
82,302,465
40,340,771
41,961,694
Guatemala
14,388,929
7,011,884
7,377,045
Haiti
9,993,247
4,956,750
5,036,497
Hungary
9,983,645
4,739,632
5,244,013
Indonesia
239,870,937
119,622,439
120,248,498
Italy
60,550,848
29,615,920
30,934,928
Japan
126,535,920
61,654,165
64,881,755
Kazakhstan
16,026,367
7,694,628
8,331,739
Korea, Dem. People's Republic of (North)
24,346,229
11,944,269
12,401,960
Mexico
113,423,047
55,933,041
57,490,006
Morocco
32,481,912
15,949,320
16,532,592
Myanmar
47,963,012
23,639,885
24,323,127
Nepal
29,959,364
14,862,219
15,097,145
Russian Federation
142,958,164
66,134,540
76,823,624
Sierra Leone
5,867,536
2,866,092
3,001,444
Slovenia
2,029,680
992,732
1,036,948
South Africa
50,132,817
24,824,300
25,308,517
Spain
46,076,989
22,748,323
23,328,666
Sri Lanka
20,859,949
10,299,114
10,560,835
Thailand
69,122,234
33,972,348
35,149,886
Togo
6,027,798
2,985,193
3,042,605
Turkey
72,752,325
36,285,250
36,467,075
Ukraine
45,448,329
20,913,685
24,534,644
United Kingdom
62,035,570
30,515,530
31,520,040
United States of America
310,383,948
153,139,563
157,244,385
Uzbekistan
27,444,702
13,640,744
13,803,958
Viet Nam
87,848,445
43,417,900
44,430,545
Argentina
40,412,376
19,768,407
20,643,969
Armenia
3,092,072
1,439,180
1,652,892
Australia
22,268,384
11,092,660
11,175,724
Austria
8,393,644
4,095,508
4,298,136
Azerbaijan
9,187,783
4,543,839
4,643,944


நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள புள்ளிவிவர கணக்குகளை நன்றாக பாருங்கள். இந்த புள்ளி விவர கணக்குகள் மொத்த நாடுகளில் வசிக்கும் ஆண் பெண் ஆகிய இருபாலரின் எண்ணிகையை  நமக்கு தருகின்றன. இதில் நாம் ஒரு சில நாடுகளின் புள்ளி விவரங்களை மட்டுமே இங்கே பதிந்துள்ளோம். இன்னும் அதிகமான விவரங்களை அறிய மேற்கண்ட இணைப்பை கிளிக் செய்தால் பார்வையிடலாம். 

நான் சுட்டிக்காட்டியுள்ள இந்த புள்ளிவிவரக் கணக்கின்படி உலகிலுள்ள அதிகப்படியான நாடுகளில், ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக காணப்படுகின்றனர். இதை நாம் ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்றால், பலதாரமணம் என்பதை விமர்சிக்கும் உமா சங்கரைப் போன்ற உலக எதார்த்தமறியா மடையர்களை நோக்கி, இதை வைத்து சில கேள்விகளை நாம் முன்வைக்க இருக்கிறோம்!

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் முறையானது, நான்கு பெண்கள் வரை ஒருவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இஸ்லாம் கூறும் கட்டளை முறையற்றது என்று கூறும் இவர்கள், சற்று நாம் மேலே போட்டிருக்கும் பட்டியலை கண்ணை தெளிவாக துடைத்துவிட்டு படிக்கட்டும். 

உலகிலுள்ள அதிகபட்ச நாடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக இருப்பதாக இந்த பட்டியல் கூறுகிறது. அப்படியென்றால், உங்களின் வாதப்படி இந்த நாடுகளிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரே ஒரு பெண்ணையே திருமணம் செய்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்படி அனைவருமே திருமணம் செய்துவிட்டால் சில நாடுகளில் நூறாகவும், சில நாடுகளில் ஆயிரமாகவும், சில நாடுகளில் இலட்சமாகவும் திருமணம் ஆகாத பெண்கள் எஞ்சி இருப்பர்! இவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக திருமணம் செய்யாமல் இல்லை, மாறாக திருமணம் செய்ய ஒரு ஆண்கூட இல்லாத நிலையினால் இந்த நிலைக்கு தள்ளப்படுவர். இத்தகைய சூழலில் மாட்டியிருக்கும் பெண்களுக்கு, உமா சங்கர் போன்ற அறிவாளிகள் என்ன சட்டம் சொல்லப் போகிறார்கள்???

ஒன்று திருமணமான ஆணினுடைய மனைவி இறந்துபோக வேண்டும். ஒருவேளை இப்படியொரு சூழல் அமையுமென்றால் இன்னொரு பெண்ணிற்கு வாழ்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் நாம் எதிர்பார்த்தது போல் அமையாது. காரணம் அந்த பெண் எப்போது இறந்து போவாள் என்று எண்ணியே இளமைக் காலம் முடிந்து விடும். பெரும்பாலும் வயது முதிர்ந்த பருவத்தில்தான் பெண்கள் இறக்கின்றனர் என்பதும் புள்ளிவிவரம் கூறும் மற்றுமொரு  உண்மை. ஆக இந்த வாயிலும் தோழ்வியில் மூடப்படும்.

அப்படி இல்லையென்றால் அடுத்த வாய்ப்பு, அந்த பெண் விபச்சாரத்தில் விழ வேண்டும். காரணம் முறையாக திருமணம் செய்ய ஆண்கள் இல்லை!

அப்படியும் இல்லையென்றால், ஒழுக்கமான பெண்கள் என்பதால் இளமை இறந்து போகும் வரை முதிர் கன்னிகளாக கிடந்தது சாக வேண்டியதுதான்.

இந்த மூன்றைத் தவிர வெறு எந்த சட்டங்களையும் இதற்கு கூற முடியாது!!!

இதுபோன்ற சூழலில் சிக்கித் தவிக்கும் எந்தவொரு ஒழுக்கமான பெண்ணும் இஸ்லாம் கூறும் முறையான திருமண வாழ்வையே தேர்ந்தெடுப்பாள். காரணம் விபச்சாரம் என்பது இஸ்லாம் தடை செய்யாத போதிலும் மானக்கேடான செயல்தான் என்பதை உலகம் அறிந்துதான் இருக்கிறது.

ஆகவே ஒரு ஒழுக்கமுள்ள பெண் விபச்சாரத்தில் விழ மாட்டாள். முதிர்கன்னி பருவம் வரை காலத்தைக் கடத்தவும் மாட்டாள், காரணம் ஆண் பெண் இணைதல் என்பது பசி தாகத்தை போன்ற ஒரு இயற்கையான தேவை. அதற்கான சந்தர்ப்பத்தில் இந்த தேவையை அனைவரும் பெற்றுத்தான் ஆக வேண்டும். இந்த சந்தர்ப்பம் தாமதப்படுமேயானால், ஒருநாள் இல்லை ஒருநாள் தவறான பாதைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பதையும் எந்த ஒழுக்கமுள்ள பெண்ணும் ஏற்றுக் கொள்வாள்.

ஆகவே இதுபோன்ற சூழலில் வசிக்கும் பெண்கள் கேவலத்தில் விழுவதைக் காட்டிலும், தான் இரண்டாவதாகவோ அல்லது மூன்றாவதாகவோ அல்லது நான்காவதாகவோ ஒரு ஆணால் திருமணம் செய்யப்படுபதையே தேர்ந்தெடுப்பாள். அவ்வாறு தேர்வு செய்யவில்லை என்றால் நஷ்டம் பெண்களுக்குத்தான். இதைத்தான் இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாம் இறைவனது மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு அழகிய சான்று. ஒரு ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்யலாம் என்று இறைவன் சட்டம் சொன்னது போன்று, உலகின் பல நாடுகளில் அதற்கு ஏற்றார்போல் சூழலையும் இறைவன் அமைத்துள்ளான். இந்த உண்மையை எவராலும் மறுக்க முடியாது.

ஒருவன் இரண்டாவது திருமணம் செய்ய விரும்புகிறான் என்றால் அதற்கு அவன் பேண வேண்டிய அவசியமான, நியாமான நியதிகளைப்பற்றி நாம் சென்ற பதிவில் விரிவாகவே விளக்கியுள்ளோம். அந்த நியதிகளுக்கு உடன்படாத ஒருவர் இரண்டாம் திருமணம் செய்ய அனுமதி கிடையாது. ஆகவே ஆண்கள், இரண்டாகவோ மூன்றாகவோ நான்காகவோ திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டம் சூழல் குறித்த நியாமான சட்டமே அன்றி ஆணுக்கு வழங்கப்பட்ட சலுகை என்று தவறாக புரிந்துகொள்ளக் கூடாது.

இன்னும் ஏராளம் இதுபற்றி விவரிக்கலாம். என்றாலும் இந்த சிறிய விளக்கமே போதும், இஸ்லாம் கூறிய இந்த சட்டம் ஏற்புடையதே என்பதை நியாமான உணர்வு கொண்ட நபர்கள் புரிந்துகொள்ள. இந்தப்பதிவை நம்மை நோக்கி விமர்சிக்கும் உமா சங்கரைப் போன்ற அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்.

பதிந்தவர்
முஹம்மது மஷாரிக்.



மடையனி(உமா சங்கரி)ன் பொய் பிரச்சாரத்திற்கு பதிலடி! தொடர் - 1


பலதார மணம் செய்வது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியா???


ஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்யலாம் என்று இஸ்லாத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை முஸ்லிமல்லாதார் அதிகமாக விமர்சிக்கின்றனர். பெண்களிடம் இஸ்லாம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று கூறுவோருக்கு இது தான் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது.
பலதார மணத்தை இஸ்லாம் மட்டும் ஆதரிக்கவில்லை.
இஸ்லாம் மட்டுமே பலதார மணத்தை ஆதரிக்கிறது; மற்ற மதங்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது.
இக்கருத்து பிரச்சாரமும் செய்யப்படுகிறது. எனவே பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதித்தது என்பதை ஆராய்வதற்கு முன் இந்தக் குற்றச்சாட்டை ஆராய வேண்டியது அவசியமாகும்.
நபிகள் நாயகத்துக்கு முன்பே உலகின் பல பாகங்களிலும் பலதார மணம் நடந்தே வந்துள்ளது. அது பெருமைக்குரியதாகவும் கருதப்பட்டு வந்தது. இதற்கு உலக வரலாற்றில் அனேக சான்றுகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த முஸ்லிமல்லாத அரபியர்கள் கணக்கு வழக்கின்றிப் பல பெண்களைச் சர்வ சாதாரணமாக மணந்து வந்திருக்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் உலக மாந்தர் அனைவரும் ஏக பத்தினி விரதத்தை மேற் கொண்டிருந்ததைப் போன்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து தான் முதன் முதலில் பலதார மணத்தை அனுமதித்தது போன்றும் ஒரு தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாத்தை ஏற்காத அரபியர் பல பெண்களை மணந்து வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கென்று விதி முறைகளோ, வரம்புகளோ அவர்களிடம் இருந்ததில்லை.
அரபுலகில் மட்டுமின்றி உலகின் பல பாகங்களிலும் பலதார மணம் இருந்திருக்கின்றது. பல மதங்களும் இதனை அங்கீகரித்திருந்தன.
வள்ளி, தெய்வானை எனும் இரண்டு மனைவியருடன் வாழ்ந்த முருகன் நமது நாட்டில் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.
ஏக பத்தினி விரதம் கடைப்பிடித்ததாகக் கூறப்படும் இராமனின் தந்தை தசரதனுக்கு அறுபது ஆயிரம் மனைவியர் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

கிருஷ்ணனுக்கு பாமா, ருக்மணி எனும் இரு மனைவியர் இருந்ததாகவும் புராணங்களிலிருந்து அறிய முடிகின்றது. அவரும் நமது நாட்டில் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறார்.
எத்தனையோ மன்னர்களும், மற்றவர்களும் இந்த மண்ணில் பல மனைவியரை மணந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அது போல் கிறித்தவர்களும், யூதர்களும் பெரிதும் போற்றும் தாவீது ராஜா, ஆப்ரகாம், யாக்கோபு மற்றும் ஏராளமான தீர்க்கதரிசிகள் பல மனைவியருடன் வாழ்ந்ததாக பைபிளிலும், யூத வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக யூத கிறித்தவ சமுதாயத்தினர் அவர்களை வெறுக்கவில்லை.
இஸ்லாம் தான் பலதார மணத்தை முதன் முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தது போல் பிரச்சாரம் செய்யப்படுவது அடிப்படையில்லாதது என்பதை இதன் மூலம் அறியலாம்.
பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கின்றது? அனுமதிக்கக் கூடாது என்போரின் வாதங்கள் எந்த அளவு நியாயமானவை என்பதை இனி ஆராய்வோம்.
பலதார மணத்தைத் தடுப்பது விபச்சாரத்தை வளர்க்கும்
ஆண்கள் பலதார மணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள். எனவே இதைத் தடுக்க வேண்டும் என்பது தான் இந்தப் பிரச்சினையில் எடுத்து வைக்கப்படும் முக்கியமான வாதம்.
முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பது தான் இந்தக் கோரிக்கைக்குக் காரணம் என்றால் பலதார மணத்திற்கு மட்டும் அவர்கள் தடை கோரக் கூடாது. மாறாக மனைவி அல்லாத பிற பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வதற்கும் அவ்வப்போது பல பெண்களுடன் விபச்சாரம் செய்வதற்கும் தடை விதிக்குமாறு கோர வேண்டும்.
ஆனால் நமது நாட்டிலும், உலகின் பெரும்பாலான நாடுகளிலும் வைப்பாட்டிகள் வைத்துக் கொள்ளவோ, விபச்சாரம் செய்யவோ தடை இல்லை. தங்கு தடையின்றி ஆண்கள் இதைச் செய்து வருகின்றனர். இதற்கு எதிராக பெண்ணுரிமை பேசுவோர் கூட குரல் கொடுப்பதில்லை.
இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வதை விட இது பெரிய அநியாயமாகும். ஏனெனில் பல பெண்களுடன் உறவு வைத்து அதனால் ஏற்படும் நோயை மனைவிக்கும் அவன் பரப்பும் வாய்ப்பு இதில் உள்ளது.

முதல் மனைவி பாதிக்கப்படுவது தான் பலதார மணத்தைத் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்திடக் காரணம் என்றால் விபச்சாரத்திற்கும், வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கும் எதிராக பெண்களின் இயக்கங்களோ, பெண்ணுரிமை பேசும் ஆண்களோ ஏன் வலிமையாகக் குரல் கொடுக்கவில்லை?.
நமது நாட்டுச் சட்டத்தையே எடுத்துக் கொள்வோம்!
முஸ்லிம்கள் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யலாம்.
முஸ்லிமல்லாதவர்கள் இன்னொரு பெண்ணைச் சின்ன வீடாக வைத்துக் கொள்ளலாம்.
இது தான் நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டமாகும். முஸ்லிம்கள் இன்னொரு பெண்ணை மணந்து கொள்வது தடுக்கப்பட வேண்டும் எனக் கூக்குரல் போடுவோர் முஸ்லிமல்லாத சமுதாயத்தினர் வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தடுக்க சட்டம் போட வேண்டும் என்று இது வரை கேட்டார்களா?
விபச்சாரத்துக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருப்பதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் நமது நாட்டில் உள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் அனைத்துமே விபச்சாரிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றன. அவர்களைப் பாலியல் தொழிலாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் குரல் எழுப்புகின்றனர்.
விபச்சாரிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் பெண்ணுரிமை இயக்கத்தினரும், முற்போக்கு சிந்தனையாளர்களும் பங்கெடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் அவர்கள் எதை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. விபச்சாரிகளை அங்கீகரிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை என்றால் அந்த விபச்சாரிகளிடம் செல்லும் ஆண்களையும் ஆதரிக்கிறார்கள். அதாவது மனைவி இருக்கும் போது அவளுக்கு துரோகம் செய்யும் கணவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்பதைத் தவிர இவர்களது நடவடிக்கைகளுக்கு வேறு என்ன பொருள்?
கட்டிய மனைவி பாதிக்கப்படுகிறாள் என்ற அக்கரையில் பலதார மணத்தை இவர்கள் எதிர்ப்பது உண்மை என்றால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யக் காரணமாக உள்ள விபச்சாரிகளைக் கடுமையாக வெறுக்க வேண்டும். மனைவியுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தும் ஆண்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் காரணமான விபச்சாரிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்குமாறு கோர வேண்டும்.
அவ்வாறு கோரக் கடமைப்பட்டவர்கள் விபச்சாரிகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
ஆண்கள் பல பெண்களை நாடக் கூடியவர்களாக உள்ளனர் என்பதையும், அதைத் தடுக்க முடியாது என்பதையும் அவர்களின் உள்ளுணர்வு உணர்த்துவது தான் அவர்களது இந்த நிலைமைக்குக் காரணம்.
பெண்ணுரிமை பேசுவோரும், முற்போக்குவாதிகளும் மனைவி அல்லாத இன்னொரு பெண்ணுடன் ஆண்கள் உறவு வைப்பதை ஆதரிக்கவே செய்கிறார்கள்.
இன்னொரு பெண்ணுடன் நீ உறவை வைப்பதாக இருந்தால் அவளைச் சட்டப்பூர்வமாக மணந்து கொள் என்று இஸ்லாம் கூறுகிறது.
மணந்து கொள்ளாமலேயே எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இவ்விரு நிலைகளில் எது சிறந்தது?
இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தும் போது அவளைச் சட்டப்பூர்வமான மனைவி என்று அறிவித்தால் அந்தப் பெண்ணின் உரிமை காக்கப்படுகிறது. வைப்பாட்டிகளுக்கோ எந்த விதமான உரிமையும் கிடையாது.
வைப்பாட்டியின் மூலம் ஒருவனுக்குப் பிறந்த குழந்தைக்கு மகன் என்ற உரிமையும் கிடையாது.
மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை அனுபவிப்பதில் இவர்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. அவளை மணந்து கொள்வதில் மட்டும் தான் இவர்களுக்கு மறுப்பு இருக்கிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆண்கள் பல பெண்களை நாடுவது அடியோடு ஒழிக்கப்பட முடியாத போது அதைக் குறைப்பதற்கு உரிய வழி என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவித்து விட்டு அதற்காக எதிர்காலத்தில் எந்தப் பொறுப்பையும் ஆண்கள் சுமக்கத் தேவையில்லை எனும் போது அதிகமான பெண்களை ஆண்கள் நாடிச் செல்வார்கள்.
ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவிப்பதாக இருந்தால் அவர்களுக்குச் சட்டப்படி மனைவி என்ற உரிமையை அளிக்க வேண்டும். அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்குச் சட்டப்படி பிள்ளைகள் என்ற உரிமையை அளிக்க வேண்டும். முதல் மனைவிக்கு உள்ள உரிமைக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இரண்டாம் மனைவிக்கும் வழங்க வேண்டும். எல்லா வகையிலும் இருவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கும் போது மனைவி அல்லாத பெண்களை நாடுவோர் குறைவார்கள். தவிர்க்கவே இயலாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மட்டுமே இன்னொரு திருமணம் செய்ய முயல்வார்கள். எனவே பலதார மணத்திற்கான அனுமதி தான் முதல் மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் உண்மையில் பாதுகாப்பானது.
நமது நாட்டில் உள்ள சட்டப்படி எந்த ஆணும் எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் விபச்சாரம் செய்யலாம். 'அந்தப் பெண் மைனராக (18 வயதுக்குட்பட்டவராக) இருக்கக் கூடாது; பலாத்காரம் செய்யப்பட்டிருக்கக் கூடாது' என்பது மட்டுமே நிபந்தனை.
மேலும் விபச்சாரத்தைத் தொழிலாக நடத்துவது தான் நமது நாட்டில் குற்றமே தவிர விபச்சாரம் குற்றமில்லை. இதன் காரணமாகத் தான் விலைமாதர்களிடம் ஒரு ஆண் செல்லும் போது விலைமாது மட்டும் தண்டிக்கப்படுகிறாள். ஆண் விடுவிக்கப்படுகிறான்.
இது போல் திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் ஒருவன் சேர்ந்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வாழலாம். அவள் இன்னொருவரின் மனைவியாக இருக்கக் கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு நிபந்தனை ஏதுமில்லை.
பலதார மணத் தடை நடைமுறைச் சாத்தியமற்றது
எந்த ஒரு சட்டத்தை இயற்றுவதாக இருந்தாலும் அச்சட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானது தானா என்பதைத் தான் முதலில் கவனிக்க வேண்டும்.
நமது நாட்டில் முஸ்லிம்களுக்குப் பலதார மணத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்கு அது அறவே தடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை மணப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
முஸ்லிமல்லாத மக்கள் பலதார மணம் செய்யக் கூடாது என்று போடப்பட்ட தடைச் சட்டத்தின் நிலை என்ன?
யாருக்கு பலதார மணத்திற்கு இந்த நாட்டில் அனுமதியுள்ளதோ அவர்களை விட யாருக்கு பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்கள் தான் அதிக அளவில் பலதார மணம் புரிந்துள்ளனர்.
1951 முதல் 1960 வரை பலதார மணம் புரிந்தவர்கள் பற்றிய புள்ளி விபரம் தயாரிக்கப்பட்டது. அந்தப் புள்ளி விபரப்படி
இந்துக்கள் 5.06 சதவிகிதமும்
முஸ்லிம்கள் 4.31 சதவிகிதமும்
பழங்குடியினர் 17.98 சதவிகிதமும்
பலதாரமணம் புரிந்துள்ளனர்.
அதாவது 1951 முதல் 1960 வரை நூறு முஸ்லிம்களில் நான்கு பேர் பலதாரமணம் செய்துள்ளனர். ஆனால் நூறு இந்துக்களில் ஐந்து பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர். நூறு பழங்குடியினரில் 18 பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர் என்று இந்தப் புள்ளி விபரம் கூறுகிறது.
சமத்துவத்தை நோக்கி (Towards Equality) என்ற தலைப்பில் 1974-ல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
பழங்குடியினரும் இந்துக்கள் தான். அவர்களையும் இந்துக்களுடன் சேர்த்துக் கணக்கிட்டால் பலதார மணம் புரிந்த இந்துக்கள் பலதார மணம் புரிந்த முஸ்லிம்களை விட மிக அதிக சதவிகிதமாக இருப்பார்கள்.
பலதார மணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்துக்களே அதிக அளவில் பலதார மணம் செய்துள்ளனர் என்பதிலிருந்து பலதாரமணத் தடைச் சட்டம் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை விளங்கலாம்.
இதனால் தான் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டே நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் முடிகின்றது.
தி.மு.க தலைவர் கருணாநிதி முஸ்லிமாக இல்லாதிருந்தும் இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்துகிறார். இது சட்டப்படி குற்றம் என்றால் பல தடவை அவர் தமிழகத்தின் முதல்வராக ஆனது எப்படி?
இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தும் கா.காளிமுத்து பல தடவை அமைச்சராகவும், சபாநாயகராகவும் ஆனது எப்படி?
அறந்தாங்கி திருநாவுக்கரசு பல தடவை மாநில அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆனது எப்படி?
இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள்
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் திருமணம் செய்த போது முதல் மனைவிகள் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களின் கதவைத் தட்டியுள்ளனர். நீதி மன்றங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரைத் தண்டிக்க மறுத்து விட்டதையும் நாம் காண முடிகின்றது.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன. ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை. எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு ஆஒத 1965 நஈ 1566)
சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது.
(பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திர கோஷ் AIR 1971 sc 1153)
ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம். (லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848)
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105)
இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன.
பலதார மணத்தைத் தடுப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்
ஆண்களில் அதிகமானோர் ஒரு மனைவியுடனேயே காலம் முழுவதும் வாழ்பவர்களாக உள்ளனர் என்றாலும் கனிசமான ஆண்கள் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து இரண்டாம் திருமணம், மூன்றாம் திருமணம் செய்கின்றனர்.
மற்றும் சிலர் வைப்பாட்டி வைத்துக் கொண்டு முதல் மனைவிக்குத் துரோகம் செய்பவர்களாக உள்ளனர்.
வேறு சிலர் அவ்வப்போது விபச்சாரிகளிடமும், அறிமுகமான பெண்களிடமும் தகாத உறவு வைப்பவர்களாக உள்ளனர்.
இவர்களைத் தடுத்து நிறுத்த எந்தச் சட்டமும் இல்லை. இத்தகையோரால் ஏற்படும் மோசமான பாதிப்புகளையும், தீய விளைவுகளையும் அறிந்தால் தவறான வழியில் செல்லும் நிலையில் உள்ளவர்களுக்குப் பலதார மணத்தை அனுமதிப்பதைக் குறை கூற மாட்டார்கள்.
அடுத்தவன் மனைவியை அபகரிக்கலாம், உடன் பிறந்த சகோதரியை கற்பழிக்கலாம், தகப்பனோடு பிள்ளைகள் உறவு கொள்ளலாம், மகனின் மனைவியோடு உறவு கொள்ளலாம் என்றெல்லாம் மிருகத்தைவிட கேவலமான போதனைகளை கூறும் அசிங்கமான வேதத்தை வைத்துக் கொண்டு, 
சமூக அங்கீகாரத்தோடு முறையாக திருமணம் செய்வதை குறை கூற உனக்கு என்ன தகுதி உள்ளது மூடன் உமா சங்கரே???

தொடரும் இன்ஷா அல்லாஹ்....!

இஸ்லாத்தை தப்பும் தவறுமாக மக்கள் மத்தியில் பரப்பும் கிருத்தவ வெறிநாய்!




சில நாட்களுக்கு முன்னால் ஒரு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருத்துவத்தை கூட முழுமையாக அறியாத மடையன் உமா சங்கர் என்பவன் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்திருந்தான்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும் வைத்திருந்தனர். தனது மதத்தை தவிர பிற மதம் அனைத்தும் இழிவானது என்பதைப்போன்று தனது உரையில் கொட்டித் தீர்த்து விட்டு, இறுதியாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் அதே சாத்தானிய வேலையை மூடன் உமா சங்கர் செய்து முடித்தான்.
சில மாணவ மாணவிகள் அழகிய முறையில் தமது கேள்விகளை முன்வைத்து உமா சங்கரை தடுமாற வைத்தனர். அதில் ஒரு மாணவன், மற்ற மதத்தினர் கூறும் கொள்கையை நீங்கள் கேட்பீர்களா? என்று கேட்டான்.
அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இந்த மூடன், குர்ஆனில் பெண்களை அடிக்க வேண்டும் என்று வருகிறது. ஒரு ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்யலாம் என்று வருகிறது. இராக்கில் மார்க்க வழிகாட்டலின் அடிப்படையில் பெண்களை அலங்கோலப்படுத்த இஸ்லாமிய ஜிஹாதிஸ்துகள் முடிவு எடுத்துள்ளனர் என்றெல்லாம் சில செய்திகளை முன் வைத்து, 
இதுபோன்ற அசிங்கங்கள் உள்ள மார்க்கத்தின் வாசகங்களை நான் கேட்க முடியாது என்று பதிலளித்தான்.

அப்போது ஒரு இஸ்லாமிய பெண் எழுந்து, குர்ஆனில் இருந்து ஒரு செய்தியை நீங்கள் முன் வைக்கும்போது அது என்ன நோக்கத்தில் சொல்லப்படுகிறது என்பதை அறிந்து பேச வேண்டும் என்று சொன்னாள்.
இந்த மெண்டல் உமா சங்கருக்கு பதில் கொடுப்பதற்கு முன் இஸ்லாமியர்களுக்கு சில அறிவுரைகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நிகழ்வுகள் நடந்த சபையில் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு மார்க்க அறிவு அறவே இல்லை என்பதை அந்த சபை நமக்கு எடுத்துக்காட்டியது. 
இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் உமா சங்கர் எப்படிப்பட்ட ஒரு கேவலமான வேதத்தை வைத்துக்கொண்டு பதில் கொடுக்கிறான் என்ற பைபிளைப் பற்றிய அறிவும் இல்லை!
உலக அறிவிற்கும், சமூக விழிப்புணர்வின் பெயரால் சீரழிக்கப்படும் சமூக சீர்கேடுகளுக்கும் மட்டும் முக்கியத்தும் கொடுத்து கொடுத்து, 
இறைவனின் வசனங்கள் அறவே தகுதியற்ற ஒரு முட்டாளால் கேலி கிண்டல் செய்யப்படும் போது வாய் மூடி மவுனம் காத்த இஸ்லாமிய மாணவர்களையும் அவர்களை அந்த நிலையில் வார்த்தெடுத்த பெற்றோர்களையும் எண்ணி வருந்துகிறேன்.

இப்போது உமா சங்கரின் கேள்விக்கு வருவோம்!
பெண்களை அடிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறியதா? ஆம் கூறியது!

"சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்".
திருக்குர்ஆன் 4:34.

உங்கள் மனைவியர் கற்பு விஷயத்தில் வரம்பு மீறும்போது, அல்லது குடும்ப வாழ்வில் மனைவியின் மூலம் பிணக்கு ஏற்படும் என்ற நிலை உண்டானால் முதலில் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும், அப்படியும் திருந்தவில்லை என்றால் அவர்களது படுக்கையை ஒதுக்க வேண்டும், அதற்கு பின்னரும் அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களை அடிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது. அடித்தல் என்ற உடன் கொலைவெறி தாக்குதல் என்பதை போன்று உமா சங்கர் போன்ற மூடர்கள் பரப்புகின்றனர்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும்படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். 
(நூல்: புகாரி 1294, 1297).

இதுதான் மனைவியை அடித்தல் என்பதற்கான அளவுகோலும் வரையறையும்! அதுவும் விவாகரத்து ஏற்பட்டு விடாமல் இருப்பதை தடுக்கத்தான் இவ்வாறு செய்யுமாறு இஸ்லாம் கூறுகிறது. அதுவும் பலனளிக்கப்பெறாதவர்கள் விவாகரத்து செய்து விடலாம் என்று மார்க்கம் கூறுகிறது. 

இதில் என்ன அநீதத்தை இந்த உமா சங்கர் கண்டான்???

அடுத்தவன் மனைவியை அபகரிக்க கற்றுக்கொடுக்கும் கேவலமான புத்தகத்தை வைத்து கொண்டு, கற்பு விஷயத்தில் மனைவி தவறிழைக்கும் போது ஒரு கணவன் கோபப்படுவதைப்பற்றி பேசும் குரானின் வசனத்தை விமர்சிக்கும் உன்னைப்பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக உள்ளது!!!
உன் மனைவி உனக்கு மட்டும் செய்ய வேண்டிய இல்லற உரிமைகளை பிற ஆணுக்கு செய்தால் 
"ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டு" என்று மற்றுமொரு ஆணை அழைத்து வந்து உன் மனைவிக்கு அன்பளிப்பு செய்வாயா??? 
அல்லது குரானின் சட்டத்தை கையில் எடுப்பாயா???

இது போன்ற குர்ஆனின் பல சட்டங்களின் பின்னணியை வெட்டிவிட்டு வெறுமனே பெண்களை இஸ்லாம் அடிக்க சொல்கிறது என்பதைப் போன்று பொய் பேசுவதுதான் உன்னைப்போன்ற கள்ளக்கிருத்துக்களின் அயராத உழைப்பு என்பதை நாங்கள் அறிவோம்.
இஸ்லாமிய மார்க்கத்தையே தெளிவாக விளங்காத இஸ்லாமியர்களிடம் சென்று உன் சேட்டையை செயல்படுத்துவதை விட்டுவிட்டு
உனக்கு திராணி இருந்தால்....!!!
குர்ஆன் மட்டுமல்லாது உனது போலி வேதத்தையும் கரைத்து குடித்துவிட்டு உன்னை போன்றோரின் முகத்திரையை கிழிக்க எந்நேரமும் விவாத மேடையை எதிர்பார்த்திருக்கும் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தை நோக்கி வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்கிறோம்!

குறிப்பு:
பதிவு நீளமாவதால், ஒரு கேள்விக்கு மட்டும் விடையளித்துள்ளோம். மீதமுள்ள கேள்விகளுக்கான முகத்திரை கிழிக்கும் பதிவுகள் தொடரும். 
இன்ஷா அல்லாஹ்...!

Tuesday, January 5, 2016

பெண் வீட்டு விருந்து அனுமதிக்கப்பட்டதா?



இறைவனால் மனிதனுக்கு விதிக்கப்பட்ட ஒரு இன்றியமையாத கடமை தான் திருமணம். இந்த திருமணம் உலகில் வாழும் பலதரப்பட்ட மக்களால் பலவகைகளில் செயல்படுத்தப்பட்டாலும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்ற மக்கள் திருமணம் என்ற உறவை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதியான வரையறைகளை இஸ்லாம் வகுத்துள்ளது. அந்த வகையில் தான் ஒரு முஸ்லிம் திருமணம் செய்தல் வேண்டும். இறைவனுக்கு கட்டுப்படும் ஒரு முஸ்லிம் “நான் அவ்வாறு செய்யாமல் என் விருப்படி செய்தால் என்ன?” என்ற கேள்வியை எழுப்ப மாட்டான். காரணம் இந்த கேள்வி அர்த்தமற்றது என்பது அவர்களுக்கே விளங்கும். அந்த அடிப்படையில் திருமணம் குறித்த ஏராளமான சட்டங்கள் இறைவனாலும் இறைத்தூதராலும் சொல்லப்பட்டிருந்தாலும், நாம் இந்த இடத்தில் திருமணத்தின் மூலம் வைக்கப்படும் ஒருவகை விருந்தை பற்றியே கூற நாடுகிறோம்.

இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரை ஒரு தம்பதியினர் திருமணம் செய்கின்றனர் என்றால், அவர்களில் மணமகன் தன்னால் இயன்ற அளவில் எளிமையான விருந்து கொடுக்க வேண்டும். அதற்கு வலீமா என்றழைக்கப்படும். விருந்து என்றவுடன் தடபுடலாக சிந்தித்து விட வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் திருமணம் செய்யும் போது மிகவும் எளிமையான முறையில் விருந்து கொடுத்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 371, 2893.

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421.

மேற்கண்ட நபிமொழிகள் அல்லாஹ்வின் தூதர் திருமணத்தின் போது செயல்படுத்திக் காட்டிய விருந்தினை நமக்கு அழகிய முறையில் விளக்குகின்றது. நபியவர்கள் திருமண விருந்தாக அதிகபட்சம் கொடுத்ததே ஒரு ஆடு அறுத்து கொடுக்கப்பட்ட விருந்துதான். ஆகவே இயன்றளவு எளிமையாக திருமணத்தை முடிக்க வேண்டும். 

அதற்கான காரணம்,
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388.

தம்பதியர் இறைவனின் பரக்கத் பொருந்த வாழ வேண்டும் என எண்ணுவோர் குறைந்த செலவிலேயே திருமணத்தை நடத்துவர். இதுதான் திருமண விருந்து குறித்து இஸ்லாம் கூறுபவை.

ஆனால் தற்போதைய சூழலை நாம் பார்க்கும்போது, அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ வழிகாட்டாத பெண் வீடு சார்ந்த தடபுடலான விருந்தும் திருமணத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது. மணமகன் ஒருபக்கமும் மணப்பெண் வீட்டார் ஒருபக்கமும் விருந்து கொடுக்கின்றனர்.

சில வீடுகளில் பெண் வீட்டு தரப்பினர் இத்தனை நபர்களுக்கு கட்டாயம் விருந்து கொடுக்க வேண்டும் அல்லது அதற்கான செலவீனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மணமகன் வீட்டு தரப்பினரால் நிர்பந்திக்கப்படுகின்றனர். இதுவும் ஒரு வகை வரதட்சணையே ஆகும். வரதட்சனை என்ற பெயரை குறிப்பிட்டு வாங்கினால் மட்டும் தான் வரதட்சனை என்று ஆகும் என்பது கிடையாது. மாறாக பெண்ணினது வீட்டில் எதை நாம் நிர்பந்தித்து வாங்க முற்பட்டாலும் அது வரதட்சனை என்ற அடிப்படையில் தான் அடங்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் சில வீடுகளில் மணமகன் பெரிய அளவில் விருந்து கொடுக்க முடியாத நிலையில் இருப்பார். ஆகவே நீங்கள் விட்டு விடுங்கள் அந்த விருந்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று ஆணை வாய் மூட வைத்துவிட்டு, பெண் வீட்டார் பிரமாண்டமான விருந்து கொடுக்கின்றனர். திருமணத்தின்போது கட்டாயம் பிரமாண்டமான விருந்து கொடுத்தாக வேண்டும் என்ற நியதியை தமக்குத்தாமே ஏற்படுத்திக் கொண்ட காரணத்தினால் தான் இதுபோன்ற நிலைகள் நம் சமூகத்தில் நீடிக்கிறது.

மொத்தத்தில் எந்தவகையான காரணங்களைக் கூறிக்கொண்டு பெண் வீட்டு தரப்பின் மூலம் திருமணத்தின்போது விருந்து கொடுத்தாலும், அது வலிமா விருந்தாக இருக்கவே முடியாது. நபியின் வழிமுறைக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒரு விருந்தாகவே அந்த விருந்து அமையும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களைத் தான் வலீமா கொடுக்குமாறு ஏவினார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மதீனாவுக்கு வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) வசதி படைத்தவராக இருந்தார். அவர் அப்துர் ரஹ்மானிடம், 'என்னுடைய செல்வத்தைச் சரி பாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மண முடித்துத் தருகிறேன்!' எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி), 'உம்முடைய குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!' எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்! எனக் கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்ன விசேஷம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!" என்றார். நபி(ஸல்) 'அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?' எனக் கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!" என அவர் பதில் கூறினார். அதற்கு 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
நூல்: புகாரி  2049.

இந்த செய்தியின் மூலம் வலீமா விருந்தென்பது ஆண்களை நோக்கி சொல்லப்படும் கட்டளை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் அல்லாஹ்வின் தூதர் செய்த அத்தனை திருமணத்திற்கும், தான் ஏழ்மையாக இருந்தபோதிலும் அவர்கள் தான் வலீமா கொடுத்துள்ளார்கள்.

இந்த சட்டங்களை நாம் முன்வைக்கும்போது நம்மை நோக்கி சில மார்க்க மேதைகள் விசித்திரமான ஆய்வுக் கேள்விகளை கேட்கின்றனர். அதன் மூலம் இந்த பெண் வீட்டு விருந்து அனுமதிதான் என்று கூறி நபியவர்கள் காட்டித்தராத ஒன்றை நோக்கி மக்களை ஆர்வப்படுத்தவும் செய்கின்றனர்.

நாம் மேலே சுட்டிக்காட்டிய அப்துர்ரஹ்மான் இப்னு அஃப் (ரலி) செய்தியை இவர்கள் சுட்டிக்காட்டி, இந்த சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது ஆகும். இஸ்லாத்தில் சொல்லப்பட்ட சட்டத்திட்டங்களை பொருத்தவரைக்கும் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே. திருக்குர்ஆனில் அல்லாஹ் பல சட்டங்களை ஆண்களை நோக்கி பேசுவது போன்றுதான் பேசுகிறான், ஆனால் அது இருபாலாரையும் குறிக்கும் என்பது தான் உண்மை. அதன் அடிப்படையில் அப்துர்ரஹ்மான் இப்னு அஃப் (ரலி) அவர்களுக்கு சொல்லப்பட்ட கட்டளை பெண்களுக்கும் பொருந்தும். அந்த இடத்தில் அவரது மனைவி வந்திருந்தால் அவர்களுக்கும் இதே கட்டளையைத் தான் அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருப்பார்கள் என்பதுதான் இவர்களின் வாதம்.

மிகச்சாதாரண மார்க்க அறிவு உள்ளவர் கூட இந்த வாதம் அடிப்படை அற்றது என்பதை புரிந்து கொள்வார். இறைவன் திருமறையில் ஆண்களை நோக்கித்தான் பல கட்டளைகளை இடுகிறான் அது பெண்ணிற்கும் பொதுவானது என்பதை நாமும் ஏற்றுத்தான் இருக்கிறோம். ஆனால், ஆணைப் பார்த்து பேசப்படும் அனைத்து கட்டளைகளுமே பெண்ணிற்கும் பொருந்தும் என்பது மடத்தனமான வாதமாகும். 

உதாரணத்திற்கு அல்லாஹ் திருமறையில் ஆணை நோக்கி நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதி வழங்குகிறான். இந்த சட்டத்தை பெண்ணிற்கும் பொருத்தமானதே என்று யாராவது பேசுவோமா? ஆக ஆணை நோக்கி கூறப்படும் அனைத்துமே பெண்ணிற்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு வரக்கூடாது. சில கட்டளைகள் ஆணுக்கு மட்டுமே கூறப்பட்டதாகவும் இருக்கும். அதனை நபியின் சுன்னாஹ்வின் மூலம் தான் நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஒருவேளை இவர்கள் வைக்கும் வாதம் உண்மையாக இருக்குமேயானால், நபியவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் திருமணம் செய்தனர். அவர்களில் ஒருவரது திருமணத்தில் கூட ஏன் மணப்பெண் விருந்து வைத்ததாகவோ அல்லது மணப்பெண்ணை நோக்கி அல்லாஹ்வின் தூதர் கட்டளையிட்டதாகவோ ஒரு தகவல் கூட இல்லை???

நபியவர்கள் கட்டளையிடாத ஒன்றை, இவ்வாறு நடந்திருந்தால் இவ்வாறு கட்டளையிட்டிருப்பார்கள் என்று யூகித்து சட்டம் வழங்குவதென்பது நபியின் மீது பச்சையாக இட்டுக்கட்டுவதாகும். ஒன்றை யூகித்து முடிவெடுக்கும் அளவிற்கு மார்க்கம் ஒன்றும் மறைக்கப்பட்டதல்ல. அனைத்தைக் கொண்டும் பூரணமாக பூர்த்தி செய்யப்பட்ட மார்க்கம் இஸ்லாம்.

திருமண விருந்தென்பது ஆணுக்கு சொல்லப்பட்ட கட்டளைதான் என்பதை நபியின் கட்டளையும் நபியவர்களது செயல்முறையும் தெள்ளத் தெளிவாக கூறுகின்றன. நபியின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றில் இல்லாத ஒன்றை யூகத்தின் பெயரால் வேண்டுமென்றே மார்க்கத்தில் புகுத்துவது வழிகேடாகும்.  இதேபோன்ற அறிவற்ற யூகத்தின் மூலமும் வாதத்தின் மூலமும் தான், இஸ்லாத்தின் பெயரால் பல புதுமைகள் உண்டாகிக் கிடக்கின்றன. அவைகளையெல்லாம் எதிர்க்கக் கூடிய சில கூட்டமும் கூட, இந்த பெண் வீட்டு திருமண விருந்து விஷயத்தில் தடம்புரளுகின்றனர். சலஃபுகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளக் கூடிய கூட்டத்தில் சிலர் இதை எதிர்க்கின்றனர், சிலர் இதை ஆதரிக்கின்றனர். இன்னும் சிலர் எதிர்த்துக் கொண்டே பெண் வீட்டு விருந்தில் வயிற்றையும் நிறைத்து கொள்கின்றனர்!

எது எப்படியாக இருந்தாலும், திருமணத்தின் போது பெண் வீட்டுத் தரப்பால் வலீமா கொடுக்கப்படுவதென்பது, அல்லாஹ்வாலும் அல்லாஹ்வின் தூதராலும் வழிகாட்டப்படாத ஒன்றாகும். ஆகவே பெண் வீட்டு விருந்தென்ற வழக்கம் மார்க்கத்தில் இல்லை. இதை நாம் புறக்கணிக்க வேண்டும்! 

பதிந்தவர்,
N.முஹம்மது மஷாரிக்.

Friday, December 25, 2015

ஹதீஸ் கலையின் எதார்த்த நிலைப்பற்றி பற்றி சவூதி அறிஞர்கள்!




ஹதீஸின் "மத்னை" பார்க்காமல் அறிவிப்பாளரை மட்டும் வைத்து ஹதீஸை சரி காண்பது நுனிப்புல் மேய்வதே-சவூதி அறிஞர்கள்.
ஸலபிகளின் கோட்டையான சவுதியில் உள்ள "ஜாமிஆ இஸ்லாமியா பல்கலைகழத்தின் உத்தியோக பூர்வ இணையளத்தில் கூறப்பட்ட இந்த வாசகத்தை இங்கு பதிகிறேன்.
"மதனை" பார்க்காமல் அறிவிப்பாளரை மட்டும் பார்க்கும் நுனிப்புல் மேயும் நிலை எங்கிருந்து உள்ளது?அவை இரண்டும்(சனத் மதன்) ஒன்றை ஒன்று பிரியாத நண்பர்கள் இல்லையா?
(இவர்கள் சொல்லும்)இந்த கூற்று (ஸனதை மட்டும் பார்க்கும் கூற்று) எந்த அடிப்படையில் வந்தது?இந்த நிலைபாட்டில் உள்ளவர்கள் ஹதீஸ் கலை நூல்களை வாசித்தால் இதை கூற முடியுமா?(வாசித்த பின்பும்)அவர் நிலை அதுதானா?
ஒரு வாசிக சாலைக்கு சென்று ஹதீஸ் கலை நூல்களின் ஆரம்ப பக்கத்தின் சிறு பகுதியை மட்டும் வாசிக்கும் ஒருவர் ஹதீஸ் கலை என்றால் என்ன என்ற வரைவிலக்கணத்துக்கு அறிஞர்கள் இவ்வாறு கூறுவதை கண்டு கொள்வார்.
"இந்த கலையானது ஏற்பதற்கோ மறுப்பதற்கோ அறிவிப்பாளர் நிலை பற்றியும் "மதன்" நிலை பற்றியும் அறியக்கூடிய சட்டதிட்டங்களை கொண்ட அறிவாகும்"
ஹதீஸ் துறை அறிஞர்களிடத்தில் மிகவும் நுணுக்கமான மிகவும் தெளிவான ஒரு விதியை நாம் பெற்றுள்ளோம். அது எல்லோராலும் ஏகோபித்த ஒரு விதியாகும் அதில் அவர்கள் இவ்வாறு உறுதிப்படுத்துகின்றனர்.
"சிலபோது "ஸனத்" சரியானாலும் "மதன்" "ஷுதூத்" "இல்லத்" காரணத்தால் பிழையாகும் "மதன்" சரியானாலும் "ஸனத்" பிழையாகும்."
இந்த விதியானது அரிதான விதி அல்ல எல்லா ஹதீஸ் கலை நூல்களிலும் காணக்கூடிய ஒன்றுதான்"
இவ்வாறு சவுதியின் பிரபல்யமான பல்கலைகழகம் கூறியுள்ளது.
ஆதாரம்: சவுதியின் ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் இணையதளதின் வெளியீடு.
நன்றி: அஹ்மத் ஜம்ஷத் அஸ்ஹரீ.

Monday, December 14, 2015

திருக்குர்ஆன் தமிழாக்கம் அப்டேட்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு!
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே....!
Play Store-ல் Masarik Apps-ன் மூலம் வெளியிடப்பட்டுள்ள சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் புதிய பதிப்பான 14-ஆம் பதிப்பு, முழுமையான முறையில் நமது அப்ளிகேஷனிலும் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனேவே வெளியிட்டிருந்த அப்ளிகேஷனில் இல்லாத பல புதிய தகவல்கள் 14-ஆம் பதிப்பின் படி தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து சகோதர சகோதரிகளும் உடனே பழைய குர்ஆன் அப்ளிகேஷனை அப்டேட் செய்து பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். சிலருக்கு இது போன்ற தகவல் சென்றடையாமல் ஆரம்பத்தில் வெளியிட்ட அப்ளிகேஷனையே அவர்கள் பயன்படுத்துவதை நம்மால் காண முடிந்தது. அவர்களைப் போன்றோருக்கும் இந்தத் தகவலை இயன்றளவிற்கு எத்தி வைக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!
குறிப்பு;
14-ம் பதிப்பின் படி அப்ளிகேஷனை அப்டேட் செய்வதற்கு உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல இறைவன் இதன்மூலம் அளப்பறிய நன்மைகளை உங்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!!!

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.
அப்ளிகேஷனுக்கான லிங்க்,