தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, June 6, 2016

தவிர்ப்போம் தலைப்பிறை கொண்டாட்டத்தை!



அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய சொந்தங்களே! இன்ஷா அல்லாஹ் ஷஅபான் 29 அன்று ரமளானின் முதல் பிறை தேட வேண்டிய நாள்.  நமது சமூக மக்கள் மத்தியில் ரமலான் முதல் பிறை பார்க்கப்படுவது என்பது தலைப்பிறைஎன்கிற பெயரால் சில பகுதிகளில் கொண்டாட்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைப்பிறை அன்றைக்கு வீடுகள் அனைத்தும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் வீட்டிற்கு பரக்கத் கிடைக்காது என்பதைப் போன்ற ஒரு தோரனையை ஏற்படுத்தி கொண்டு, ரமளானின் முதல் பிறையை அடையும் நாளில் வீட்டை சுத்தம் செய்கின்ற மக்களை பார்க்கிறோம்.

இன்னும் சில இடங்களில், மாற்று மத மக்கள் பொங்கல் விழாவின் போது வீதிகளில் பொங்கல் வைப்பதைப் போன்று பொங்கல் வைத்து சப்தமிட்டு குலவையிடுவதையும் பார்க்கிறோம்.

முதலில் இவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை நம் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். மார்க்கத்தின் பெயரால் நாம் ஒன்றை செய்வதாக இருந்தால் நாம் யாரிடம் இருந்து இந்த மார்க்கத்தை பெற்றோமோ அந்த அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டலில் அவைகள் இருக்க வேண்டும். நாமாக ஒன்றை உருவாக்கி அதற்கு இஸ்லாமிய சாயம் பூசுவதென்பது ஒருபோதும் இஸ்லாமியக் கலாச்சாரம் ஆகாது.

ரமலான் மாதம் என்பது புனிதமான மாதம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த மாதத்தின் முதல் நாள் இவ்வாறு தான் நமது வீடு இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நம் வீடு புனிதத்தை இழந்துவிடும், தரித்திரம் பிடித்துவிடும் என்று சொல்வதற்கு நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ரமலான் மாதத்தின் சிறப்புக்கள் அனைத்தும் நமக்காகத்தானே தவிர உயிரற்ற வீட்டிற்காக கிடையாது. ரமலான் மாதம் கடமையாக்கப்பட்டதன் நோக்கம் நாம் பாவங்களை விட்டு சுத்தமாக வேண்டும் என்பதற்குத்தானே தவிர வீட்டை சுத்தப்படுத்துவதற்காக கிடையாது. அவ்வாறு ஒருவர் வீட்டை சுத்தப்படுத்தாவிட்டாலும் எந்த குற்றமும் கிடையாது. அவர் செய்யக்கூடிய செயல்களுக்கான நன்மைகள் அவருக்கு கிடைத்தே தீரும். சுத்தம் என்பது எல்லா காலத்திலும் பேண வேண்டிய ஒரு பகுதியாகும். ஆகவே தான் அதை ஈமானோடு நபியவர்கள் இணைத்து சொன்னார்கள். பொதுவாக எல்லா நேரங்களிலும் சுத்தம் அவசியம் என்பதே மார்க்கத்தின் வழிகாட்டல் ஆகும். ஆகவே ஏதேனும் ஒரு நாளை வைத்து சடங்குகளை உண்டாக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை. அவ்வாறு நபியவர்கள் செய்யவும் இல்லை.

அதேபோன்று தெருத்தெருவாக பொங்கல் வைத்து குலவையிடுவதும் இன்னொரு மதம் சார்ந்த வழிபாட்டுக் கலாச்சாரம் ஆகும். இதுபோன்று நபியவர்கள் ரமலான் முதல்பிறை அன்று, தாம் வாழ்ந்த காலகட்டத்தில் செய்ததே கிடையாது.

வருடா வருடம் இவ்வாறு நடந்து கொள்ளும் தாய்மார்கள் தமது செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த ஒரு காரணமே போதும் நம்மை கொடிய நரகில் வீழ்த்துவதற்கு!

உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்"
முஸ்லிம்  (1573).

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
''உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.
புகாரி (3456).

அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா?" என்று கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை; இதோ இந்த வாளுறையில் இருப்பதைத் தவிர" என்று கூறிவிட்டு, ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கின்றான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்.
முஸ்லிம் (4003). 

அல்லாஹ் மிக அறிந்தவன்....!

Wednesday, June 1, 2016

சூரா ஃபாத்திஹா மற்றும் சூரா பகராவின் இறுதி வசனங்களின் சிறப்பு!



இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)" என்று கூறினார்கள்.
அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை" என்று கூறினார்கள்.

அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, "உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். "அல்ஃபாத்திஹா" அத்தியாயமும் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை"என்று கூறினார்.

முஸ்லிம் 1472. 

Wednesday, May 25, 2016

சூரா இக்லாஸ் தொடர்பான பலவீனமான செய்தி - 1!




حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، قَالَ: وَحَدَّثَنَا يَحْيَى بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا رِشْدِينُ، حَدَّثَنَا زَبَّانُ بْنُ فَائِدٍ الْحمْرَاوِيُّ،  عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ قَرَأَ: قُلْ هُوَ اللهُ أَحَدٌ حَتَّى يَخْتِمَهَا عَشْرَ مَرَّاتٍ، بَنَى اللهُ لَهُ قَصْرًا فِي الْجَنَّةِ " فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: إِذًا نَسْتَكْثِرَ يَا رَسُولَ اللهِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اللهُ أَكْثَرُ وَأَطْيَبُ ".

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தை தினமும் பத்து முறை ஓதுகின்றாரோ, அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை கட்டித்தருகிறான்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அப்படி என்றால் நாங்கள் எங்களுக்காக அதிகமாக கோட்டைகளை கட்டிக் கொள்கிறோம் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அதிகரித்து தர காத்திருக்கிறான், மேலும் அவன் தூய்மையானவன் என்று பதில் கூறினார்கள்.

இந்த செய்தி ஸில்ஸிலத்துல் அஹாதீசுஸ் சஹீஹா 589, முஸ்னத் அஹ்மத் 15610 போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம்பெறுகிறது.

இந்த செய்தி பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் ஸஹ்ல் பின் முஆத், ஸப்பான் பின் பாஇத் போன்றோர் பலவீனமானவர்கள் ஆவார்கள். 

மேலும் முன்கருல் அஹாதீஸ்(நீராகரிக்கப்படவேண்டியவற்றை அறிவிப்போர்)என்றும் விமர்சிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் ரிஷ்தீன், இப்னு லஹீஆ போன்றோரும் பலவீனமான நபர்களாவர்.
(ளஈஃப் அத்தர்ஃகீபு வத்தர்ஹீப் (224/1), மஜ்மவுஸ் ஸவாயித் (145/7)).

ஆகவே இந்த செய்தி பின்பற்ற தகுதியான செய்தி அன்று.

Wednesday, April 27, 2016

கொள்கை உறவுகள் கவணத்திற்கு!


அன்புள்ள கொள்கை சொந்தங்களே!
மத்ஹபு தொடர்பான பிரச்சாரம் மக்கள் மத்தியில் சூடுபிடித்து வருவதை நாம் அறிவோம்!
அதில் ஒரு அங்கமான ஒரு பெண்ணை வாடகை பேசி விபச்சாரம் செய்தால் ஹத்(தண்டனை) இல்லை என்ற ஹனஃபி மத்ஹபின் ஆபாச சட்டம், கன்சுத்தகாயிக் என்ற நூலில் இடம்பெறுகிறது.
இந்த செய்தியை மக்கள் மத்தியில் நாம் சுட்டிக் காட்டும்போது அந்த தகவல் பதியப்பட்டுள்ள பக்கத்தை தவறாக பதிவு செய்து பரப்புகிறோம்.
இதன்விளைவாக உல(று)மாக்கள் இப்படி ஒரு செய்தியே அந்த பக்கத்தில் இல்லை என்று கொக்கரிக்கின்றனர். இந்த கொக்கரிப்பு இயல்பானதுதான் என்றாலும், அந்த செய்தி எந்த பக்கத்தில் உள்ளது என்று சரியாக எடுத்து காண்பிக்க நாம் கடமைப் பட்டுள்ளோம் அல்லவா. பக்கம் தவறாக பதியப்பட்டுள்ளது என்பதற்காக அப்படி ஒரு பக்கமே அந்த கிதாபில் இல்லை என்று ஆகிவிடாதல்லவா.
ஆகவே இந்த தகவலை சூழ்நிலைக் கருதி நம் சஹாக்களுக்கு பதிவாக போடுகிறேன்.
நாம் தவறாக பதிவு செய்திருக்கும் பக்க எண் கன்சுத்தகாயிக் பாகம் 1, பக்கம் 184.
சரியான பக்க எண் கன்சுத்தகாயிக் பாகம் 1, பக்கம் 350 ஆகும். கொக்கரிப்பவர்களின் முகத்தில் தூக்கி வீசுங்கள்!
தவறான பக்க எண்ணை பதிந்துள்ளவர்கள் அதை மாற்றிக் கொள்ளவும்!

Monday, April 25, 2016

உரையை துவங்குவதற்கு முன் - அரபு மற்றும் தமிழ்!




إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله.
இன்னல்ஹம்(d)தலில்லாஹி நஹ்ம(d)துஹு வநஸ்தஈநுஹு வநஸ்(th)தஃபிருஹ், வநவூ(d)து பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா வ மின் ஸய்யிஆத்தி அஃமாலினா, மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ளலாஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலாஹ், வ அஷ்ஹ(d)து அல்லா இலாஹா இல்லல்லாஹு வஹ்(d)தஹு லா ஷரீ(k)கலஹு வ அஷ்ஹ(d)து அன்ன முஹம்ம(d)தன் அ(b)ப்(d)துஹு வரசூலுஹ்.

முஸ்னத் அஹ்மத் 3275, ஸஹீஹ் முஸ்லிம் 1576, சுனன் இப்னுமாஜா 1892.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
سورة آل عمران :(102)
யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ இத்த(q)குல்லாஹ ஹ(q)க்க(th)து(q)காத்திஹி வலா (th)தமூ(th)துன்ன இல்லா வஅன்(th)தும் முஸ்லிமூன்.
(சூரா ஆலு இம்ரான்:102)


يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا     سورة النساء:(1)
யா அய்யுஹன்னாஸ், இத்த(q)கூ ர(b)ப்ப(k)குமுல்ல(d)தீ (kh)ஹல(q)(k)கும் மின் நஃப்ஸிவ் வாஹி(d)தா, வ (kh)ஹல(q)க மின்ஹா ச(z)வ்ஜஹா, வ பஸ்ஸ மின்ஹுமா ரிஜாலன் கசீரவ் வ நிஸாஅ, வத்த(q)குல்லாஹல்ல(d)தீ (th)தஸாஅலூன (b)பிஹி வல்அர்ஹாம், இன்னல்லாஹ கான அலைக்கும் ர(q)கீ(b)பா.                                   
(சூரா அந்நிஸா : 1)


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا (70) يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
سورة الأحزاب:(71)
யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ, இத்த(q)குல்லாஹ், வ(q)கூலூ (q)கவ்லன் ஸ(d)தீ(d)தா, யுஸ்லிஹ்ல(k)கும் அஃமால(k)கும் வ யஃக்ஃபிர்ல(k)கும் (d)துநூப(k)கும், வமை யு(th)த்இல்லாஹ வரசூலஹு, ஃப(q)கத் ஃபா(z)ஸ ஃபவ்(z)சன் அழீமா.
(சூரா அல்அஹ்ஸாப்:70,71)


إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ

ஃபஇன்ன அஸ்(d)(q)கல் ஹ(d)தீஸி கி(th)தா(b)புல்லாஹ், வ அஹ்ஸனல் ஹ(d)த்யி ஹ(d)த்யு முஹம்ம(d)தின் )ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்(, வஷர்ருல் உமூரி முஹ்(d)தசாத்துஹா, வ குல்லு முஹ்(d)தச(th)திம் பி(d)த்ஆ, வ குல்லு பி(d)த்அத்தின் ழளாலா, வ குல்லு ழளாலத்தின் ஃபின் நார்.

Wednesday, April 20, 2016

அறிந்து கொள்வோம் - பலவீனமான செய்தி!




حديث: "إذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره، وليقرأ عند رأسه بفاتحة الكتاب وعند رجليه بخاتمة البقرة في قبره".

உங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை நீங்கள் தடுத்து (தாமதப் படுத்தி) வைக்க வேண்டாம், அவரை கப்ரை நோக்கி விரைவுபடுத்துங்கள், மேலும் கப்ரில் வைத்து அவரது தலைமாட்டில் சூரத்துல் பாத்திஹாவையும், கால்மாட்டில் பகரா சூராவின் கடைசியையும் ஒதுங்கள்.  
(தப்ரானி முஃஜமுல் கபீர், ஷுஅபுல் ஈமான்)


இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அய்யூப் இப்னு நுஹைக் என்பவர் ஹதிஸ்கலையில் விடப்பட்டவராவார்மேலும் இதன் தொடரில் வரும் முதல் அறிவிப்பாளரான யஹ்யா என்பவர் பலவீனமானவராவார்
(ஸில்ஸிலதுல் லஈபா) (الضعيفة 4140)